ரிதன்யாவின் மாமியார் சித்ரா தேவிக்கு ஆயுள் தண்டனை? விசாரணை ஏன் இவ்ளோ லேட்டாகுது? காரணங்கள் இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட், லேப் ரிப்போர்ட், ஆடியோ ரிப்போர்ட் இன்னும் வரவில்லை. இதனால் காலதாமதம் ஆகும். ஆனால், வழக்கு தொய்வாக போகிறது. விசாரணை அதிகாரி மீது சந்தேகம் வருகிறது. தனி விசாரணை அதிகாரி வேண்டும். சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வேண்டுகோளும் ரிதன்யாவின் அப்பா முன்வைத்துள்ளார்.. இந்நிலையில், இந்த வழக்கு காலதாமதம் ஆவதற்கு என்ன காரணம்? என்பது குறித்து சில கருத்துக்கள் சோஷியல் மீடியாவில் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

King 24x7 என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சுபைர், ரிதன்யா மரணத்துக்கு, ரிதன்யாவின் பெற்றோரும் ஒரு காரணம்தான்.. மகளுக்கு நடந்த சம்பவத்தை தடுத்து நிறுத்த தவறிவிட்டார்கள்..

Television chitra devi rithanya

அரசு நாடுகளில், ஆண்கள்தான் வரதட்சணை தந்து திருமணம் செய்து கொள்வார்கள்.. இப்போதுவரை அந்த சட்டம் உள்ளது.. மஹர் என்று சொல்லக்கூடிய சம்பிரதாயம் இன்றும் உள்ளது.. பெண்களுக்கு மஹர் என்ற வரதட்சணை தந்து திருமணம் செய்வது, உலக இஸ்லாமியர்களிடையே, பல இடங்களில் கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்படுகிறது.. இந்த விவரங்கள் எல்லாம் கூகுளிலேயே இருக்கிறது.

மண்ணெண்ணெய் ஸ்டவ்

ஆனால், தமிழகத்தில் வரதட்சணை கொடுமை என்பது காலங்காலமாகவே பெண்ணுக்கு இருந்து வருகிறது.. மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து மருமகள் மரணம், மாமியார் கைது என்றெல்லாம் சின்ன வயதிலிருந்தே செய்தித்தாள்களில் படித்து வந்துள்ளோம்.. இப்போதுவரை இது நீண்டும், அதிகரித்தும் வருகிறது..

நகை, பணத்தை தாண்டி, கார், பிசினஸ் என வரதட்சணை வடிவம் மாறியிருக்கிறது. மெஹந்தி நிகழ்ச்சி, ப்ரீ-வெட்டிங் ஷூட், சங்கீத் நிகழ்ச்சி போன்றவற்றிற்கும் லட்சக்கணக்கில் செலவாகிறது.. வரதட்சணை கொடுமைக்கு அரசு பல சட்டங்களை போட்டும்கூட, படித்த பெண்களும் சேர்ந்தே பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

புரிதலின்றி வளர்ந்த பிள்ளைகள்

ஒருவனுக்கு ஒருத்தி என்று ரிதன்யா புரிதலின்றி வளர்க்கப்பட்டுள்ளதுபோல, ரிதன்யா கணவர் கவினும் புரிதலின்றி வளர்க்கப்பட்டுள்ளார்.. மனைவி என்றால் இப்படித்தான் பார்க்க வேண்டும், தனக்கு கீழே அடிமைதான், தங்களுக்கு வேலை செய்வதற்காக வந்திருக்கும் பெண் என்பது போலவே நடந்து கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் கவினும் படித்த நபராகவே உள்ளார். அப்படியிருந்தும் வேறு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்துள்ளார்..

திருமண பந்தத்தை போகிற போக்கில் உதறித்தள்ளி விட்டுப்போக முடியாது.. அதற்காக பெண்கள் உயிரை மாய்த்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.. ஒருசிலர் இதுபோன்ற திருமண பந்தத்தை கண்டு லிவிங் டூகெதரை தேர்ந்தெடுக்கிறார்கள்.. அது சிலநேரம் கொலையில் போய் முடிந்துவிடுகிறது.

லிவிங் டூ கெதரில் நல்லது, கெட்டது இரண்டுமே உள்ளது.. ஆனால், கெட்டது அதிகமாக உள்ளது.. நம்பகத்தன்மை கடைசிவரை இருந்தால்தான் அந்த உறவு நிலைக்கும்..

லிவிங் டூ கெதர் சிக்கல்

உதாரணத்துக்கு 2 வருடம் சேர்ந்து வாழ்வதென முடிவெடுத்து லிவிங் டூ கெதரில் வாழும்போது, 2 வருடத்திற்குள்ளேயே யாராவது ஒருத்தருக்கு, அந்த வாழ்க்கை கசந்து போய்விட்டால், பிரிய நினைக்கிறார்.. ஆனால், இன்னொருவர் பிரிய முடியாது என்கிறார்.. இப்படியொரு சிக்கல் வந்தால் நீதிமன்றத்துக்கும் செல்ல முடியாது.. கடைசியில் இது தவறான முடிவையே எடுக்க வைக்கும்.

மகள், தன்னுடைய பிரச்சனைகளை சொல்ல ஆரம்பித்தபோதே, பெற்றோர் உஷாராகியிருக்க வேண்டும்.. இதுகுறித்து சட்ட நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும்.. குறைந்தபட்சம் கணவனிடமிருந்து பிரித்து, அழைத்து சென்றிருக்க வேண்டும்.. எனவே, பெண்ணின் விஷயத்தை சரியாக கையாளவில்லை..சமூகம், ஒருவனுக்கு ஒருத்தி, குடும்ப கவுரவம் இதெல்லாம் அவர்களின் கண்ணை மறைத்துவிட்டது.

விசாரணை காலதாமதம் சரியா

ரிதன்யாவின் வழக்கு தற்போது, மெதுவாக நகர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. கவினின் தாத்தா, திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்துள்ளார்.. பணவசதி, அதிகார பலம் உள்ளதால், அவைகளை எல்லாம் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தவே கூடும்.

ஆனால், ரிதன்யா விவகாரம் இந்த அளவுக்கு வெடித்து வெளிவந்துவிட்டதால், இதற்கு பெரிதாக யாரும் சப்போர்ட் செய்ய முடியாது.. தங்களை காப்பாற்ற அதிகாரத்திலும், அரசியலிலும் நபர்கள் இருந்தாலும்கூட, இந்த விஷயத்தில் உதவி செய்ய மாட்டார்கள்..

அப்படியே செய்தாலும், உதவி செய்ய நினைப்பவர்களுக்கும் சேர்த்து கெட்ட பெயராகிவிடும்.. எனவே விசாரணை தாமதமாவதற்கு வேறு ஏதாவது காரணங்கள் இருக்கலாம்.. ஏதாவது ஆதாரங்களுக்காக போலீசார் காத்திருக்கலாம்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

வழக்கறிஞர் - சொல்வதென்ன?

முன்னதாக வழக்கறிஞர் தரப்பில் இதுகுறித்து கூறும்போது, "ரிதன்யாவின் இறப்புக்கு கிடைக்க வேண்டிய நீதியானது, நாட்டிலுள்ள அனைத்து பெண்களுக்கும் ஒரு பாதுகாப்பாகவும், ஒரு நீதியாகவும், இனிமேல் ரிதன்யா போல வேறு மரணம் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காகவும், பாதிக்கப்பட்டவர்கள் சட்டப்போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்..

குற்றவாளிகள் இந்த வழக்கில் தப்பிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. நியாயமான சில கால அவகாசத்தை எடுத்து கொள்கிறார்கள்.. காரணம், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும், ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று முழுமையான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது. இதற்கு காலதாமதமாகிறது.

எனினும், இந்த வழக்கினை, விசாரணை இன்னும் துரிதமாகவும், நியாயமாகவும் நடக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த சமுதாயமும், ஏதிர்பார்க்கிறது..தற்போது ரிதன்யா மாமியாரின் ஜாமீன் மனு தள்ளுபடி ஆகியிருப்பதால், இன்னும் 2 வாரம் கழித்து, மீண்டும் மனு தாக்கல் செய்யலாம், ஹைகோர்ட்டையும் நாடலாம் என்று கூறியிருந்ததையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+