2.5 கோடி கடனில் ரோபோ சங்கர் குடும்பம்! நகைகளை விற்று போராடிய பிரியங்கா: இப்போ எடுத்த புது முடிவு!
சென்னை: தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், மிமிக்ரி கலைஞராகவும் புகழ் பெற்றவர் ரோபோ சங்கர். திரையில் எல்லோரையும் சிரிக்க வைத்த இவரதுத் தனிப்பட்ட வாழ்க்கை, தற்போது எதிர்பாராத சோகத்திலும், கடன் சுமையிலும் மூழ்கி இருப்பது குறித்துப் பல தகவல்கள் வெளியாகி, ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரோபோ சங்கரின் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி பிரியங்கா மற்றும் மகள், கடனை அடைக்கப் போராடி வருகின்றனர்.

கடனும் போராட்டமும்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித், சிம்பு உள்ளிட்டப் பல முன்னணி நடிகர்களுடன் ரோபோ சங்கர் நடித்திருந்தாலும், சினிமாவில் அனைத்துக் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்களுக்கும் நிலையான மற்றும் அதிக சம்பளம் கிடைப்பதில்லை. சில நேரங்களில், பேசியப் பணத்தில் குறைத்துக் கொடுத்தல், பாக்கிக்காக அலைக்கழிப்பு போன்றச் சம்பவங்கள் நடப்பதுண்டு. ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, அப்போது மட்டும் கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய் செலவழித்ததாக நாஞ்சில் விஜயன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
பெரிய கடன் சுமை
சமீபத்திய இரண்டு வருடங்களில், ரோபோ சங்கருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சிகிச்சைக்குப் பயங்கரமாக செலவானது. இதனால் அவருக்கு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றக் கூட வாய்ப்புக் கிடைக்காமல் போனது. இதனால் ஏற்பட்ட பண நெருக்கடியால், ரோபோ சங்கர் குடும்பம் சுமார் 2.5 கோடி ரூபாய் கடன் வாங்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது. அவர்கள் வாங்கிய வீட்டுக்கான EMI கூட மாதத்திற்கு 1.5 லட்சம் கட்ட வேண்டிய நிலையில் இருந்தனர்.
சார்லி சாப்ளினின் வலி
"உலகம் என்னை அழ வைத்தது, இந்த உலகத்தை நான் சிரிக்க வைக்கிறேன்," என்று சார்லி சாப்ளின் கூறியது போல, தனது சொந்த வாழ்வில் இவ்வளவுச் சிரமங்கள் இருந்தாலும், மேடை ஏறி மக்களைச் சிரிக்க வைக்கும் பணியைத் தொடர்ந்து செய்து வந்தார் ரோபோ சங்கர். அதேபோல நெருக்கடியான சூழ்நிலையிலும், ரோபோ சங்கருக்கு நடிகர் தனுஷ் ஒருமுறை உதவியது குறித்து பல இடங்களில் பேசியிருக்கிறார். கொரோனா காலத்தில் EMI கட்டப் பணம் இல்லாமல் ரோபோ சங்கர் தவித்தபோது, நடிகர் தனுஷுக்குக் கால் செய்துப் பேசிய அடுத்த ஐந்து நிமிடத்திலேயேப் பணம் வந்து சேர்ந்திருக்கிறது. இந்த உதவிக்கு அவர் தனுஷுக்கு நன்றியும் தெரிவித்திருந்தார்.
நகைகளை கொடுத்து போராடிய மனைவி
ரோபோ சங்கர் மருத்துவமனையில் இருந்தபோது அவரது மனைவி பிரியங்காவின் போராட்டம் பார்ப்பவர்களைக் கலங்க வைத்தது. "எப்படியாவது அவரை மீட்டுக்கொண்டு வந்துவிட வேண்டும், எமனிடம் இருந்து மீட்டுக்கொண்டு வந்துவிட வேண்டும்" என்றுப் பிரியங்கா போராடினார். ஹாஸ்பிடலில் எவ்வளவு செலவழித்தாவது காப்பாற்ற வேண்டும் என்று, மருமகன், மகள் இருவரும் கையில் போட்டிருந்த பிரேஸ்லெட்டுகள், செயின், கம்மல், மோதிரம் என எல்லாவற்றையும் அடகு வைத்து, ஒரு சிலவற்றை விற்றும் இந்த நெருக்கடியானச் சூழ்நிலையைச் சமாளித்திருக்கின்றனர்.
நண்பர்களின் அன்பும், நம்பிக்கை பேச்சும்
ரோபோ சங்கரின் மறைவுக்குப் பிறகும்கூட, அவரது நண்பர்கள் குடும்பத்திற்குப் பக்கபலமாக இருந்திருக்கின்றனர். ரோபோ சங்கர் உயிருடன் இருந்தபோது, மிகவும் சந்தோஷமாகப் போட்டு வந்த 'கலைமாமணி' விருதுச் சங்கிலியை, மறைவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு அடகு வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த விஷயம் தெரிந்த நண்பர்கள் அனைவரும் சேர்ந்து அந்தச் சங்கிலியை மீட்டுப் பிரியங்காவிடம் கொடுத்திருக்கின்றனர். "ரோபோவே எனக்கு மறுபடியும் கிடைச்ச மாதிரி இருக்கு" என்று பிரியங்கா கண்கலங்கியிருக்கிறார்.

விஜேக்களின் ஆறுதல்
விஜே அர்ச்சனா உள்ளிட்ட பலர் ரோபோ சங்கர் குடும்பத்திற்கு ஆறுதல் அளித்து வருகின்றனர். தனியார் youtube சேனலில் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பிரியங்கா ரோபோ சங்கர் அறிமுகமாக இருக்கிறார். இதன் மூலம் அவர் தன்னுடைய மனதில் இருக்கும் கவலைகளையும் மறக்க கூடும் அவருடைய வருமானத்திற்கும் வழி வகுக்கும் இந்த புதிய முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
கடன் மற்றும் இழப்பு போன்றச் சூழ்நிலைகளைச் சந்தித்து வரும் எத்தனையோ மகன்கள், மகள்களுக்கும், கணவனை இழந்த மனைவிகளுக்கும் ரோபோ சங்கரின் குடும்பப் போராட்டம் நிச்சயம் ஒரு ஊக்கமாகவும், இதயம் கனெக்ட் ஆகும் என்பதில் சந்தேகமில்லை.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications