Robo Shankar: 46 வயதிலேயே காலமான ரோபோ சங்கர்! மனைவி பற்றி கடைசியாக அப்படி சொன்னாரே! எல்லாம் வீணா போச்சே!
சென்னை: தனது தனித்துவமான நகைச்சுவையாலும், துடிப்பான உடல்மொழியாலும் தமிழ் திரையுலக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் ரோபோ சங்கர், தனது 46வது வயதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு, ஒட்டுமொத்த திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு மதுரைக்காரனின் சினிமா பயணம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்ற ரோபோ சங்கர், நடிகர், ஸ்டாண்ட் அப் காமெடியன், மற்றும் நடனக் கலைஞர் எனப் பன்முகத் திறமைகளைக் கொண்டவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சிதான் அவருக்குப் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது. அந்த நிகழ்ச்சியில் அவர் ரோபோ கெட்டப் போட்டதால், ரோபோ சங்கர் என்றே அழைக்கப்பட்டார்.
தர்ம சக்கரம், படையப்பா போன்ற சில படங்களில் நடித்திருந்தாலும், அவை பெரிதாகப் பேசப்படவில்லை. தனுஷின் மாரி திரைப்படம் அவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக உயர்ந்தார். கமல் ஹாசனின் தீவிர ரசிகரான இவர், சன் டிவியில் ஒளிபரப்பான டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2 நிகழ்ச்சியிலும் போட்டியாளராகப் பங்கேற்றார்.
வாழ்க்கையின் வலிகள்
ரோபோ சங்கரின் திரைப்பயணம் வெற்றிகரமாக இருந்தாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை பல சவால்களைக் கண்டது. கடந்த ஆண்டு அவர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு, உடல் எடை வெகுவாகக் குறைந்து, அடையாளம் தெரியாத அளவுக்கு மாறினார். அந்த நேரத்தில் அவர் அளித்த ஒரு பேட்டி, பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அதில் அவர், "நான் மீண்டும் உயிர் பிழைத்து வந்ததற்கு முக்கிய காரணம் என்னுடைய மனைவிதான். என் மனைவியும், என் மகனும் இல்லை என்றால் நான் இல்லை. என்னை ஒரு குழந்தைபோல பார்த்துக்கொண்டார்கள்" என்று உருக்கமாகக் கூறினார். "நான் இறந்துவிட்டேன் என்று செய்திகள் வந்தபோதும், என்னுடைய மனைவி எல்லாம் நன்மைக்கே என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். நான் இல்லாமல் என்னுடைய குடும்பத்தினர் ஒருநாள் கூட இருக்க முடியாது என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அதற்காகவே நான் திரும்பி வந்துவிட்டேன்" என்று கண்ணீருடன் சிரித்துக்கொண்டே பேசிய அவரது வார்த்தைகள், குடும்பத்தின் மீதான அவரது ஆழமான அன்பை வெளிப்படுத்தின.
மகள் திருமணம்
சமீபத்தில் தனது மகளுக்கு ஆடம்பரமான முறையில் திருமணம் செய்து வைத்தார் ரோபோ சங்கர். அப்போது, சிலர் இதை விமர்சித்தாலும், தன் ஒரே மகளுக்காகத் தனது மொத்த வருமானத்தையும் செலவு செய்து, அவர் திருமணத்தை அழகுபார்த்திருக்கிறார் எனப் பலர் கருத்து தெரிவித்தனர். "இந்த வாழ்க்கையின் நிமிடம் இதுதான் என்று ரோபோ சங்கருக்குத் தெரிந்ததோ என்னவோ?" என்று பலர் இப்போது சோகத்துடன் நினைவுகூர்கிறார்கள்.
உயிர்ப்பற்று போன அந்த உயிர்
சமீபத்தில் ஒரு படப்பிடிப்பில் மயங்கி விழுந்த ரோபோ சங்கர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து, கோமா நிலைக்குச் சென்ற அவர், இன்று இரவு 8.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டும், அவரது உயிர் உடலைவிட்டுப் பிரிந்தது. ரோபோ சங்கரின் மறைவு, திரை வட்டாரத்திலும், ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசன், பார்த்திபன், தாடி பாலாஜி உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
வாழ்க்கையில் பல தோல்விகளையும், வலிகளையும் சந்தித்து, மீண்டு வந்த ஒரு கலைஞனின் திடீர் மறைவு, பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிரிப்பை மட்டுமே வெளிப்படுத்திய ஒரு கலைஞனின் வாழ்க்கையின் இறுதிப் பக்கம், கண்ணீரை வரவழைப்பதாக அமைந்துவிட்டது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications