சமுத்திரக்கனி எனக்கு உறவினர்.. ஆனால் என் பேரனை பார்க்க வரல! இதுவரை கூட நடிக்கல, காரணம்?- ரோபோ சங்கர்
சென்னை: இயக்குனராகவும், நடிகராகவும் கலக்கிக் கொண்டிருக்கும் சமுத்திரக்கனி தனக்கு என்ன உறவு முறை என்று ரோபோ சங்கர் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதோடு சமுத்திரகனி மீது தனக்கு இருக்கும் வருத்தம் குறித்தும் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
நடிகர் ரோபோ சங்கருக்கு அறிமுகமே தேவை இல்லை. அடிக்கடி இணையத்தில் பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார். அவருடைய குடும்ப செய்திகள் இணையத்தில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அதில் சில மாதங்களுக்கு முன்பு ரோபோ சங்கர் உடல் எடை குறைந்து இருந்த புகைப்படம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

ரோபோ சங்கர் நிலைமை இனி அவ்வளவுதான் என்று பலர் ஏளனமாக பேசி இருந்தனர். ஆனாலும் சில மாதங்களிலேயே பழைய நிலையில் கெத்தாக திரும்பி வந்தார். அதற்கு தன்னுடைய குடும்பத்தினர் தன் மீது வைத்த அன்பும் காதலும் தான் காரணம், அவர்களுடைய கவனிப்பால்தான் என்னால் மீண்டு வர முடிந்தது என்று பல பேட்டிகளில் பேசியிருக்கிறார்.
அதுபோல ரோபோ சங்கரின் மகள் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அப்போது பேட்டிகளில் ரோபோ சங்கர் குடும்பத்தினர் தொடர்ச்சியாக பேட்டிகளில் பேசிக்கொண்டே இருந்தனர். அந்த வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆனது. அதுபோல ரோபோ சங்கரின் ஒரே மகளான இந்திரஜா அவருடைய மாமன் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு சமீபத்தில் தான் ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த 45 நாளில் தான் நடித்த படத்திற்கான பிரமோஷனில் இந்திரஜா தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அதுபோல சோசியல் மீடியாக்களிலும் ரோபோ சங்கர் குடும்பத்தினர் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார்கள். எப்போதும் வீட்டில் எடுக்கும் புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ரோபோ சங்கர் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி நடித்த திரு மாணிக்கம் திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். அந்த வீடியோ பலருடைய கவனத்தைப் பெற்று வருகிறது. அதில் சமுத்திரக்கனியின் உடன்பிறவா சகோதரர் தான். என்னுடைய மகள் இந்திரஜா சமுத்திரகனியின் பெயரை பெரியப்பா என்று தான் அவருடைய போனில் சேவ் பண்ணி வைத்திருக்கிறார்.

அந்த அளவிற்கு என் குடும்பத்தோடு முக்கியமான நபர். ஆனால் தற்போது வரை அவர் என் பேரனை வந்து பார்க்கவே இல்லை. விரைவில் அது நடைபெறும் என்று நம்புகிறேன். அதுபோல நானும் சமுத்திரகனியும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருக்கிறது. இதுவரைக்கும் அது நடக்கவில்லை. நானும் அவரிடம் இது தொடர்பாக பலமுறை பேசி இருக்கிறேன் கண்டிப்பா ஒரு நாள் அது நடக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது என்றும் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

ரோபோ சங்கர் உடல்நிலை சரியான பிறகு பேசும் பேட்டிகளில் ஆரம்பத்தில் அதிகமாக சர்ச்சை பேச்சுகளை பேசி வந்த நிலையில் சமீபத்தில் கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் இப்போது சமுத்திரக்கனி தன்னுடைய பேரனை வந்து பார்க்கவில்லை என்ற வருத்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications