ரோபோ சங்கருக்கு இதை பண்ணி இருந்தால் காப்பாற்றி இருக்கலாம்! ஆனால், மனைவி கதறுனாங்க! டாக்டர் ஓபன்
சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், உடல்நலக் குறைவால் திடீரெனக் காலமானது, திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஒரு கலைஞனாக, அவர் எத்தனையோ முகங்களில் சிரிப்பைக் கொண்டுவந்தார். ஆனால், அவருடைய மறைவு, பலரின் மனதை வேதனையில் ஆழ்த்தியது. இந்நிலையில், அவருக்குச் சிகிச்சை அளித்த சித்த மருத்துவர் ஒருவர், கலாட்டா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி, பலரையும் கண்ணீரில் ஆழ்த்தியிருக்கிறது. ரோபோ சங்கரின் மரணம் தொடர்பான பல உருக்கமான உண்மைகளை அவர் அதில் பகிர்ந்து கொண்டார்.

உள்ளுக்குள் ஒரு குழந்தை
மருத்துவர் பேசும்போது, ரோபோ சங்கர் எங்ககிட்ட வரும்போது உடலில் பல பிரச்சனைகள் இருந்தது. அவர் ஸ்கேன் எல்லாம் பார்த்துட்டு வந்தபோது லிவர் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தது. அதுபோல, கிட்னி உட்பட உடலுக்குள் இருந்த பல பாகங்களில் பிரச்சனை இருந்தது என்றார்.
எங்ககிட்ட ட்ரீட்மென்ட் எடுத்தா ஸ்லோவாகத்தான் இருக்கும், 42 நாள் ஆகும் என்று அவரிடம் சொன்னபோது, அவர் சம்மதம் தெரிவித்து, சரி என்று சொல்லிக்கொண்டுதான் சிகிச்சை எடுக்க ஆரம்பித்தார். ஜாலியாக பேசுவாரே தவிர, மனதளவில் அவர் ஒரு குழந்தைதான் என்றும், அவருக்கு ஊசி போடுவது என்றால் ரொம்பப் பயப்படுவார் என்றும் மருத்துவர் சொன்னார்.
மனைவியின் கண்ணீர்
ரோபோ சங்கர் உயிர்பிழைக்க இருந்த ஒரு வாய்ப்பையும், அதற்காக அவரது மனைவி கெஞ்சியதையும் பற்றி மருத்துவர் உருக்கமாகப் பேசினார். அவருக்கு லிவர் டிரான்ஸ்பர் செய்திருந்தால் அவர் பிழைத்திருப்பார் என்று நினைக்கிறேன். நானும் அதைப் பத்தி அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் வேண்டாம் என்று மறுத்துவிட்டார் என்று சொன்னார்.
அப்போது, அவருடைய மனைவி, 'நான் லிவர் கொடுக்கிறேன், எனக்கு உசுரே அவருதான்... அவர் இல்லாத இந்த உலகத்தில் என்னால் வாழ முடியாது, அவருக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்' என்று கெஞ்சி கதறினார். ஆனா, அவர்தான் முடியவே முடியாதுன்னு மறுத்துவிட்டார் என்று மருத்துவர் சொன்னபோது, அந்த இடத்தில் இருந்தவர்கள் மட்டுமல்லாமல், இந்தச் செய்தியைப் படிப்பவர்களின் மனமும் கனமாகிறது. ஒரு கணவனுக்காகத் தனது உயிரையும் கொடுக்கத் துணிந்த ஒரு மனைவியின் அன்புக்கு முன்னால், ரோபோ சங்கரின் பயம் அவரைத் தடுத்தது, அதுதான் இந்த சோகமான முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
கலைஞனின் மறைவு
அவருக்குத் தொடர்ந்து ட்ரீட்மென்ட் கொடுத்துட்டு இருந்தோம். அவர் 45வது நாளில், எங்ககிட்ட ட்ரீட்மென்ட் எடுக்கும்போது ஓரளவு குணம் ஆகிவிட்டார். ஆரம்பத்தில் வந்ததற்கும், அதற்குப் பிறகும் அவ்வளவு மாற்றம் தெரிந்தது என்று மருத்துவர் கூறினார்.
ஆனால், அவர் தொடர்ந்து சிகிச்சை எடுக்க வரவில்லை. நாங்கள் போன் செய்து கூப்பிட்டால் கூட, 'மேடம் சாரி, ஷூட்டில் பிஸியா இருக்கிறேன், நாளைக்கு வரேன், அடுத்த வாரம் வரேன்'னு சொல்லிக்கிட்டு இருந்தாரு என்று மருத்துவர் வருத்தத்துடன் கூறினார். கலைத்துறை மீதான அவரது ஈடுபாடும், உழைப்பும், அவரது உடல்நலத்தைவிட முக்கியமாகிப் போனது. அவர் இறந்த பிறகு, பல மருத்துவர்களும் லிவர் மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்தால் அவர் பிழைத்திருப்பார் என்று சொன்னார்கள். ஆனால், ரோபோ சங்கர் அதற்கு ஒத்துழைக்கவில்லை.
குடும்பத்தின் துயரம்
அவருடைய மனைவிதான் மருந்து, மாத்திரை, பச்சிலை எல்லாவற்றையும் கொடுத்து அவரைச் சரி பண்ணி கொண்டு வந்தாங்க. இப்போ அவர் இல்லாம அவங்க மனைவி, மகள் என்ன பண்ணப் போறாங்கன்னு தெரியல. அவங்க இந்த சூழ்நிலையிலிருந்து வெளியே வருவது ரொம்பவும் கஷ்டம் என்று மருத்துவர் கண்ணீர் மல்க பேசினார்.
பலரின் வாழ்க்கையில் சிரிப்பைக் கொண்டுவந்த ரோபோ சங்கர், தன் மனைவி மற்றும் மகளின் வாழ்க்கையில் ஒரு நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறார்.












Click it and Unblock the Notifications