ரூ.300 கோடி டாப் நடிகருக்கு.. மக்கள் சொத்தாக மாறுவது எப்போது? நல்ல மனசு என்எஸ்கே, எம்ஜிஆர்: பிரபலம்
சென்னை: தன்னிடம் உரிய அனுமதி வாங்காமலேயே தன்னுடைய பாடல்களை குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என அதை தயாரித்த மைத்ரி மூவி நேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி வைத்திருக்கிறார் இளையராஜா. தன்னுடைய பாடல்களை பயன்படுத்தியதற்காக நஷ்டஈடாக ரூ. 5 கோடி தர வேண்டும், பாடல்களை ஒரு வாரத்திற்குள் படத்தில் இருந்து நீக்க வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும், அந்த பாடல்கள் மூலம் கிடைத்த வருவாய் கணக்கை காட்ட வேண்டும் என வக்கீல் நோட்டீஸில் குறிப்பிட்டிருந்தார் இளையராஜா. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.
BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், "ராயல்டி விவகாரத்தில் இளையராஜாவுக்கு மக்களில் சிலர் ஆதரவு தருவதாக சொல்கிறீர்கள்.. ஆனால், மக்களுக்கு சட்ட அறிவு பற்றி எந்த விளக்கமும் தெரியாது.. முழுக்க முழுக்க அந்த படத்தின் தயாரிப்பாளருக்கே அனைத்து உரிமையும் உள்ளது..

தயாரிப்பாளர்தான், ஹீரோ, ஹீரோயின் உட்பட அனைவருக்குமான சம்பளத்தையும் தருகிறார்.. இதன்மூலம் ஒட்டுமொத்த உரிமையும் தயாரிப்பாளருக்கே வந்து சேர்கிறது. இதில் யாருமே மீண்டும் உரிமை கோர முடியாது. திருமண வீடுகள் முதல் ஒளிபரப்பாகிறது.. அப்படியானால் கல்யாண வீட்டில் ஸ்பீக்கரில் பாட்டு போடுவதற்கெல்லாம் ராயல்டி கேட்க முடியுமா?
ராயல்டி உரிமை இருக்கா
தயாரிப்பாளருக்கு படம் எடுத்து பல கோடி நஷ்டமடைந்தால், இசையமைப்பாளர்கள் தங்களது ராயல்டியை திருப்பி தந்துவிடுவார்களா? இதுவரை எந்த இசையமைப்பாளராவது, இசையமைத்து 5 கோடி நஷ்டமடைந்தேன், என்று புலம்பியிருக்கிறார்களா?
அனைவருக்கும் பணத்தை தந்துவிட்டு, தயாரிப்பாளர்களுக்கான உரிமையையும் இழந்து நிற்கும் கொடுமை இந்த தமிழ்நாட்டில்தான் நடக்கிறது. மற்றபடி நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள் எல்லாருமே சம்பளம் பெறுகிறார்கள்.. இசையமைப்பாளர்கள் 5 கோடி, 7 கோடி வாங்குறாங்க.. ரஜினிக்கு 200 கோடி லைகாவில் டாக்ஸ் கட்டியே தந்துவிடுகிறார்கள்.. விஜய், 200 கோடி, கமல் 150 கோடி.. ஆனால், இந்த சம்பளம் பெறுவதற்கு காரணமாக மக்களுக்கு மட்டும் ஒன்றுமே செய்ய மாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் - தான தர்மம்
எம்ஜிஆர் அவருடைய சொத்துக்களை ஏழை, எளிய மக்களுக்கு தானம் செய்தார்.. ஏனென்றால், அன்று 40 பைசா தந்து அவரது படத்தை மக்கள் பார்த்தார்கள்.. அதிகபட்சமாக எம்ஜிஆர் அன்று சினிமாவில் வாங்கிய சம்பளமே வெறும் 5 லட்சம் ரூபாய்தான்.. எங்கே திரும்பினாலும் எம்ஜிஆரின் இலவச பள்ளி, இலவச மருத்துவமனை இன்றும் செயல்பட்டு வருகிறது.. ஆனால் இன்று 200 கோடி ரூபாய் நடிகர்கள் சம்பளம் வாங்குகிறார்கள்.. இவர்கள் எம்ஜிஆரை போல மாற முடியாது.. ஆனால், குறைந்தபட்சம் மக்களுக்கு உதவி செய்யலாமே?
இளையராஜாவின் பண்ணைபுரத்திலிருந்து ஒருவர் பள்ளிக்கூடம் ஆரம்பிப்பதற்காக சென்னை வருகிறார் என்றால், அவருக்கு உதவலாமே? 100 கோடி தர வேண்டாம்.. 10 லட்சம் தருவதற்குகூட இவர்களுக்கு மனசில்லை.. கோடி கோடியாய் பணம் இவர்களுக்கு கொட்டுகிறது. சொந்த ஊருக்கு நிதி கொடுக்க மனசில்லாதவன் எப்படி ஒரு கலைஞனாக இருக்க முடியும்? அதுவும் மக்கள் கலைஞனாக எப்படி இருக்க முடியும்?
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடிய காசு அத்தனையையும் மக்களுக்காக தந்துவிட்டு, இறந்துவிட்டார்.. ஆனால் அவரை பற்றி இன்னைக்கு வரைக்கும், மக்கள் பாடிக் கொண்டும், பேசிக்கொண்டும்தான் இருக்கிறார்கள்.. அதுபோல மக்கள் தந்த பணத்தில் கால் பாகத்தையாவது, அம்மக்களுக்கே இன்றுள்ளவர்கள் உதவலாமே? மக்களுக்கு பணம் கொடுக்க மனசே வராதவர்கள் எல்லாரும் , இன்று முதலமைச்சராக வர வேண்டும் என்று ஆசைப்பட்டால் எப்படி?
நடிகர் விஜய் எந்த உதவியும் செய்வதில்லை.. பேனா, பென்சில், நோட்டுபுத்தகம், தந்துவிட்டால் இதற்கு நலத்திட்டம் என்று பெயர்.. குறைந்தபட்சம் இதெல்லாம் சுய விளம்பரத்துக்காக செய்யப்படுகிறதே தவிர, இதில் எந்தவிதமான பொதுநோக்கமும் இல்லை.. பொதுநோக்கம் விஜய்க்கு இருக்கிறதென்றல் இலவசமாக பள்ளிக்கூடம் கட்டித் தந்திருக்க வேண்டும்.
அரசு மருத்துவமனை
விஜய் சமூகநலக்கூடம், விஜய் இலவச திருமண மண்டபம் என்று இந்த பெயரில் ஏதாவது எங்கியாச்சும் இருக்கா? இலவச பள்ளியும் இல்லை, இலவச மருத்துவமனையும் இல்லை. எத்தனையோ பேர் அநாதையாக அரசு மருத்துவமனையில் படுத்து கிடக்கிறார்கள்,, அவர்களுக்கு உதவக்கூடிய மனசு உங்களுக்கு இல்லையே என்பதுதான், விஜய், இளையராஜா, கங்கை அமரன், கமல், ரஜினி, அஜித் என அத்தனை பேர் மீதும் வைக்கப்படும் குற்றச்சாட்டு. இவர்களின் பெயரை தாங்கி நிற்கும் மருத்துவமனை , பள்ளிக்கூடம், ஒன்றாவது இருக்கிறதா?
ஏழைகள் திருமணம் செய்ய வேண்டுமானாலும், சில மணி நேரத்துக்கு வாடகைக்கு விடப்படுகிறது.. அவர்களுக்கு சமுதாயக்கூடம் இல்லை.. மரணத்துக்கு பிறகு நிலைபெற்றிருக்கக்கூடிய புகழ் இதுதானே? மறைந்தும் எம்ஜிஆர் உயிருடன் இருப்பதற்கு காரணமே அவரது ஈகை குணம்..
மக்கள் சொத்து - பிரபலங்கள்
மக்களுக்கான சொத்து இந்த பிரபலங்கள்தான்.. அப்படியிருக்கும்போது, மக்களுக்கு பயன்படுவதில்லையே? என்பதைதான் எங்களை போன்ற ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். மற்றபடி நடிகர்கள் மீது எங்களுக்கென்ன காழ்ப்புணர்ச்சி இருக்க போகிறது? கோடிகளை குவித்து, ஸ்விஸ் வங்கியில் வைத்து கொள்வதற்காகவா மக்கள் உங்களை கொண்டாடுகிறார்கள்?
என்எஸ் கிருஷ்ணனை இன்றும் மககள் கொண்டாடுவதற்கு என்ன காரணம்? இடிச்சபுளி செல்வராஜ், உதவி கேட்டபோது, சின்ன கலைவாணர் விவேக்கிடம், மனமுவந்து செய்தாரே.. இதுபோன்ற கலைஞர்களைதான் மக்கள் கொண்டாடுவார்களே தவிர, உங்களது பண்ணை வீடுகளும், பண்ணை வீட்டின் கார்கள், பங்களாவை யாரும் பார்க்க மாட்டார்கள்.. கண்ணதாசன், பட்டுக்கோட்டை, எம்ஜிஆர் என இவர்களை பேசாமல் தமிழ்த்திரைப்படம் உலகம் முழுமை பெறுமா?
என்எஸ் கிருஷ்ணன்
என்எஸ் கிருஷ்ணன் கடைசியாக ஊரைவிட்டு செல்லும்போது, அந்த நேரத்திலும் ஒருவர் உதவி கேட்டு வந்து நின்றிருக்கிறார்..
என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்த என்எஸ்கே, "கையில் பணமில்லையே, அதனால்தானே ஊருக்கு போறேன்? இந்த சாத்துக்குடி பழங்களை சாப்பிடு" என்று கையில் திணித்து சென்றுவிட்டார்.. அந்த நபர் தன்னுடைய வீட்டுக்கு வந்து பழத்தை சாப்பிடுவதற்காக பிரித்தால், அதற்குள் பணம் இருக்கிறது. இப்படி யாருக்குமே தெரியாமல் உதவியர் என்எஸ் கிருஷ்ணன்.. இதையெல்லாம் நாம் பேசுவதே கிடையாது..
என்எஸ்கிருஷ்ணன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திடமிருந்துதான், அடுத்தவர்களுக்கு உதவும் குணத்தை காப்பியடித்தேன் என்று எம்ஜிஆர் அடிக்கடி சொல்வார். கலைஞர்கள் மக்களின் சொத்தாக மாற வேண்டும் என்பதே நம்முடைய விருப்பம்" என்று தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications