ரூ.45 கோடியை அள்ளிய நடிகர் சூரியின் "மாமன்" ஓடிடியில் வருகிறார்.. ஹப்பாடா, தேதி கூட சொல்லிட்டாங்களே
சென்னை: நடிகர் சூரி நடித்துள்ள படம் மாமன்.. இது இவரது சொந்த கதையாகும்.. சூரியே ஹீரோவாகவும் நடிக்கிறார்.. விரைவில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.. ஆனால், அதற்கு முன்னதாகவே ZEE 5 ஓடிடி தளத்திலும் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது... இந்நிலையில் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்று தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு படத்தின் டைரக்டரும் தன்னுடைய மகிழ்ச்சியையும், நன்றியையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் காமெடியனாக வலம்வந்து கொண்டிருந்த சூரி, கேரக்டர் நடிகராகவும், ஹீரோவாகவும், விஸ்வரூபம் எடுத்துள்ளார். வெற்றி மாறன் இயக்கிய 'விடுதலை பாகம் 1' படத்தில் முதல் முறையாக ஹீரோவாக அறிமுகமாகி, பக்குவமும், யதார்த்தமும் கலந்த நடிப்பால் மக்களை கவர்ந்தவர் சூரி..

தொடர்ந்து 'கருடன், கொட்டுக்காளி' , 'விடுதலை பாகம் 2 ஆகிய படங்களிலும் ஹீரோவாகவே நடித்தார்.. கமர்ஷியலாக இல்லாவிட்டாலும் மேற்கண்ட 3 படங்களுமே விமர்சன ரீதியான வெற்றிகளை தட்டிச்சென்றது.. இதில், கொட்டுக்காளி படம் சர்வதேச நாடுகளின் திரைப்பட விழாக்களில் வெற்றிகளை வாரிக்குவித்து, சூரியின் மார்க்கெட்டையும் உயர்த்தி சென்றது.
மார்க்கெட் உயர்ந்த நடிகர் சூரி
இந்நிலையில், பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி ஹீரோவாகவே நடித்துள்ள படம் 'மாமன்'.. மாமனுக்கும் அக்கா மகனான மருமகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி , ஸ்வாசிகா, ராஜ்கிரண், விஜி சந்திரசேகர், பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த வெளிவருவதற்கு முன்பிருந்தே மிகுந்த எதிர்பார்ப்பை பெற்று, படம் தியேட்டரில் வெளியாகி மக்களின் வரவேற்பையும் பெற்றுவிட்டது.
நெகிழ்ந்த சூரி
இந்த படம் வெளியாகி வெறும் 9 நாட்களிலேயே உலகளவில் ரூ. 25 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியாகியிருந்தது. பிறகு 'மாமன்' படம் வெளியாகி 30 நாட்கள் ஆனதை முன்னிட்டு சூரி ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார்.. அதில், "இன்று நம்ம படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 30-வது நாளை எட்டியது! இந்த வெற்றி முழுக்க முழுக்க - உங்கள் அன்புக்கே!
வார்த்தைகள் போதவில்லை. மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும். படம் முதல் நாளில் எளிமையாகத் தொடங்கியது. ஆனால், சில நாட்களிலேயே குடும்ப ரசிகர்கள் திரையரங்குகளுக்குள் வந்ததோடு, அது ஒரு பெரும் அலை போல பரவியது.
இன்று 30 நாட்கள் நிறைவடைந்துள்ள இந்த பயணம் - உங்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் சாத்தியமா? நிச்சயமாக இல்லை! இந்த படம் பிரம்மாண்டமான ஆக்ஷன் படம் இல்லை. இது நம் வாழ்க்கையோடு இணைந்த உறவுகளின் தாக்கமும், சின்னச் சின்ன கனவுகளின் ஓசையும் கொண்ட கதை. அதனால் தான் பலர், 'நம்ம வாழ்க்கையைப் போல தான்', 'மனதை தொட்ட படம்'" என்ற வார்த்தைகளால் பாராட்டினார்கள். அந்த ஒவ்வொரு வார்த்தையும் என் மனதை நெகிழச் செய்தது.
நீங்கள் இல்லாமல் நான் இல்லை
வெற்றி விழா நடத்தவில்லையா? இல்லை... ஆனால், ஒவ்வொரு நாளும் உங்கள் பாராட்டுகள், சமூக ஊடகப் பதிவுகள் - இதுவே நம்ம உண்மையான வெற்றிக் கொண்டாட்டம்! 'மாமன்' குழுவுக்கு, விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திங்க் மியூசிக், மீடியா நண்பர்கள் - உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
உங்களின் அர்ப்பணிப்பு இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை. உங்கள் அன்பே எனக்கு புதிய உற்சாகம்! அதையே தூண்டிச் சிறந்த படங்களை வழங்க முயற்சி தொடரும். என் குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் - நீங்கள் இல்லாமல் நான் இல்லை" என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார் சூரி.
மாமன் வசூலை பாருங்க
பிறகு மாமன் படம் வெளியான 32 நாட்களில் ரூ.45 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியான நிலையில், 40 வது நாளில் 50 கோடியை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் சூரி ரசிகர்கள் நெகிழ்ந்து கூறியிருந்தனர்.
இதையடுத்து, மாமன் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தவாறே இருந்தது.. ஜீ தமிழ் தொலைக்காட்சி படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற்றிருந்த நிலையில் விரைவில், z5 ott, ZEE tamil தொலைக்காட்சியிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஓடிடியில் எப்போது வெளியாகும்
இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. OTT வெளியீடு குறித்து டைரக்டர் பிரசாந்த் பாண்டியராஜ் சொல்லும்போது, "மாமன்" என் மனதுக்கு நெருக்கமான படம், இப்படம் குடும்ப உறவுகளின் ஆழத்தையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் அற்புதமான கதை. இப்படத்தை மிகச்சரியான முறையில் உருவாக்கியதில் முழு பங்களித்த எங்கள் குழுவை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.
மேலும் கதாபாத்திரத்திற்கு இவ்வளவு ஆழத்தைக் கொண்டு வந்த சூரி அண்ணாவின் அற்புதமான நடிப்புக்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். ZEE5 மூலம் இப்படம் பரந்த அளவில், உலகம் முழுக்க உள்ள பார்வையாளர்களைச் சென்றடையும், மேலும் மனித இதயங்களைத் தொடும் மற்றும் குடும்ப பிணைப்புகள் பற்றிய உரையாடல்களைத் தூண்டும் என்று நம்புகிறேன்" என்றார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications