ரூ.50 கோடி வெற்றி.. 2 வார சக்சஸ் டூரிஸ்ட் ஃபேமிலி.. பின்னாலயே வரும் 3 ஹீரோக்கள்.. ஓடிடி செம: பிரபலம்
சென்னை: அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வெளிவந்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படம், ரிலீஸானதிலிருந்தே சிறப்பான விமர்சனத்தை பெற்று வருகிறது.. இந்நிலையில், சினிமா தயாரிப்பாளர் போப்டா தனஞ்செயன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், தற்போது வெளியாகும் படங்கள் குறித்த தன்னுடைய கருத்துக்களையும் பதிவு செய்துள்ளார்.. அதில் டூரிஸ்ட் ஃபேமிலி குறித்தும் புகழ்ந்து பேசியிருக்கிறார்.
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கும் மாமன் திரைப்படத்தில் நடிகர் சூரி ஹீரோவாகவும், ஜோரா கைய தட்டுங்க யோகி பாபு ஹீரோவாகவும், டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் சந்தானம் ஹீரோவாகவும் நடித்துள்ளனர்..

காமெடியன்கள்
அன்று காமெடியன்களாக அறிமுகமாகி இன்று ஹீரோவாக உருமாறி கலக்கி கொண்டிருக்கும் நிலையில், இதுகுறித்து AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள தனஞ்செயன், "3 படங்களும் வேறு வேறு மாதிரியான வித்தியாசங்களை கொண்ட படங்கள்.. இதில் மாமன் படம் காமெடி படம் கிடையாது.. முழுக்க முழுக்க குடும்ப படம். சூர்யாவே கதை எழுதி நடித்துள்ளார்..
டிடி நெக்ஸ்ட் லெவல், ஹாரர் காமெடியாக வரப்போகிறது.. ஆடியன்ஸை எப்படி கவர வேண்டும் என்று சந்தானத்துக்கு தெரியும். செய்தியாளர் சந்திப்பினை சந்தானம், மிக சுவாரஸ்யமாக நடத்தியிருந்தார்.. ஆர்யாவை பக்கத்தில் வைத்துக் கொண்டே கலாய்க்கிறார். ஜோரா கையை தட்டு படம் மேஜிக் + திரில்லர் படமாக உள்ளது..
டூரிஸ்ட் ஃபேமிலி
காமெடியன்களாக நடித்தவர்கள் ஹீரோக்களாக இந்த 3 படங்களில் நடித்திருக்கிறார்கள் என்று சொல்லலாமே தவிர, 3 படங்களுமே வேறு வேறு கோணங்களில் உள்ளவை. இதுவே ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில், லெவன் படத்தையும் சேர்த்து கொள்ளலாம். போலீஸ் திரில்லர் படமாக உள்ளது. அந்தவகையில் இந்த 4 படங்களுக்குமே பலத்த போட்டி.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்துக்காக சென்றபோது, திங்கட்கிழமை மதியம் 3 மணி ஷோ ஹவுஸ் ஃபுல்லாகிவிட்டது. குடும்பம் குடும்பமாக அந்த படம் பார்க்க தியேட்டருக்கு வருகிறார்கள்.. குழந்தைகளுடன் இப்படி வருவதை பார்க்க அருமையாக இருந்தது.. சம்மர் நேரத்தில் இதுபோன்ற படங்கள் வெளியானால், வசூலும் நல்ல முறையில் கிடைக்கும். விஜய் சேதுபதி 'ஏஸ்' படமும் வெளியாவதற்கு காரணமே, கோடை விடுமுறையை குறிவைத்துதான் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் 10 நாள் கணக்கு
2 வீக் எண்ட் படம் ஓடினாலே, வசூலும் தந்துவிடும்.. உதாரணத்துக்கு 2 வீக் எண்ட்டில் டூரிஸ்ட் ஃபேடமலி 50 கோடி வசூலை தந்துவிட்டது.. 80 கோடி வரை இந்த படம் அதிகபட்சம் வசூல் கிடைக்கும்..
முதல் 10 நாள் கணக்குதான் நமக்கு முக்கியம்.. அதனால் 2 வாரம்வரை படங்கள் ஓடினாலே சக்சஸ் என்பதே அனைவரின் எண்ணமும்.. இன்றைக்கு இருக்கிற காலகட்டத்தில் 3வது வாரங்களில் ஆடியன்ஸ் வருவதில்லை.. 4வது வாரம் ஆடியன்ஸ் தியேட்டருக்கு வருவது என்பது போனஸ்தான்.
ஓடிடி நிறுவனங்கள் ஒத்துழைப்பு
இப்படி தியேட்டர்களில் வலுக்கட்டாயமாக ஓட்டுவதற்கு பதிலாக, நாங்களே வெளியிட்டுவிடுகிறோம் என்று ஓடிடி நிறுவனத்தினர் கேட்கிறார்கள். தொடர்ந்து 4 வாரங்கள் வரை தியேட்டர்களுக்கு மக்கள் வந்து ஆதரவு தந்தால் இந்த நிலைமை மாறும். தற்போதைய சூழலில் ஒரு படம் 1 நாள் சூப்பராக ஓடிவிட்டாலே அந்த படம் வெற்றிப்படம்தான்.
உதாரணத்துக்கு "லப்பர் பந்து" 4வது வாரமும் தியேட்டரில் நன்றாக ஓடியதால், ஓடிடியில் தள்ளி வெளியிடப்பட்டது. இப்போது 3வது வாரமும் டூரிஸ்ட் ஃபேமிலி நன்றாக ஓடினால், அடுத்த 2 வாரம் கழித்து வருவதாக ஹாட் ஸ்டார் நிறுவனம் நிச்சயம் ஒப்புக் கொள்வார்கள்.. எனவே ஓடிடி என்பது Complementing Process.. திரையரங்குகளுடன் ஒட்டி நடக்கக்கூடியதுதான் ஓடிடி நிறுவனங்கள்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications