ரூ.75 கோடியை தூக்கும் சிவகார்த்திகேயன்.. டாப் ஹீரோன்னா சும்மாவா? விமல் தடுமாற இதுவே காரணம்: பிரபலம்
சென்னை: சிவகார்த்திகேயன் ஏன் 75 கோடி சம்பளம் வாங்குறாரு என்று யாராலும் கேட்கவே முடியாது. காரணம், ரசிகர்கள் அவரை உச்சத்தில் கொண்டு போய் வைத்திருக்கிறார்கள்.. எப்போதுமே ஹீரோவுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு நெருக்கம் இருக்கணும்.. அப்படியொரு நெருக்கம் நடிகர் விமலுக்கு இருக்குமா தெரியவில்லை" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கருத்து தெரிவித்திருக்கிறார்.
Aagayam Cinemas என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "கிராமத்து பையனாகவே பசங்க, களவாணி படத்திலிருந்து நடிகர் விமலை பார்த்து வருகிறோம்.. மார்டன் படங்களில் நடித்தாலும் அது எடுபடவில்லை.. அவரது கிராமத்து பேச்சு, மண்வாசனையுடன் காணப்படும் நபராக உள்ளார்..

சிவகார்த்திகேயன் அறிமுகம்
களவாணி படத்தில் ஒரு யதார்த்தமான வில்லனாக, கிராமத்து இளைஞராக நடித்திருந்தார்.. இதை மக்களும் நன்றாக ரசித்தார்கள்.. வாகை சூடவா ககமர்ஷியலாக ஓடவில்லை என்றாலும், அது சிறந்த படமாகும்.. அதில் விமல் நன்றாக நடித்திருந்தார், பசங்க படத்தில் விமலை அறிமுகப்படுத்திய பாண்டியராஜ், சிவகார்த்திகேயனையும் மெரினா படத்தில் அறிமுகப்படுத்தினார்..
ஒரே இயக்குனர்களால், சமகாலத்தில் அறிமுகமானார்கள்.. சிவகார்த்திகேயனின்
கிராப் வேறு மாதிரியாக இருந்தது. இதில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திடீரென
ஹிட்டானது..
ரஜினி கமல்
எதிர்நீச்சல், ரஜினி முருகன் உட்பட பல படங்களை குடும்பம் குடும்பமாக சிவகார்த்திகேயனை கொண்டாடினார்கள்.. மஞ்சப்பை, தூங்கா நகரம், போன்ற படங்களில் விமல் நடித்து வந்தார்..
தங்களுக்கு பிடித்த நடிகரை, ரசிகர்களே, ஒரு ஹீரோவாக உயர்த்துவார்கள்.. அல்லது ஒரு நடிகர் சிறப்பாக நடித்தால், அவரை பாராட்டுவதுடன் நிறுத்தி கொள்வார்கள்.. எனவே, இங்கே எல்லாருமே ஹீரோவாக முடியாது.. எல்லாருமே ரஜினி, கமல் போல மாற முடியாது..
அந்தவகையில், ஸ்டாராக விமலை யாருமே பார்க்கவில்லை.. அவரது நடிப்பை மட்டும் பார்த்துவிட்டு கடந்து சென்றார்கள்.. ஆனால், சிவகார்த்திகேயனை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு சென்றார்கள்.. அமரன் வெற்றிப்படத்துக்கு பிறகு இப்போது ஆக்ஷன் பட ஹீரோவாக உயர கணக்கு போடுகிறார்..
சரியான கால்குலேஷன்
தயாரிப்பு நிறுவனம், கதை, நடிகை, கதைத்தேர்வு, போன்ற கால்குலேஷன்களை சரியாக செய்கிறார்.. அதனால்தான், நயன்தாரா, ஹன்சிகா என பிரபலமான நடிகைகளுடன் நடித்தார் சிவகார்த்திகேயன். ஆனால், மஞ்ச பை படத்தில் ஹீரோவாக விமல் இருந்தாலும், ராஜ்கிரண் கேரக்டரே வலுவாக இருக்கும்..
ஒரே இயக்குனர்களால், சமகாலத்தில் அறிமுகமானார்கள்.. சிவகார்த்திகேயனின்
கிராப் வேறு மாதிரியாக இருந்தது. இதில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திடீரென
ஹிட்டானது.. எதிர்நீச்சல், ரஜினி முருகன் உட்பட பல படங்களை குடும்பம் குடும்பமாக சிவகார்த்திகேயனை கொண்டாடினார்கள்.. மஞ்சப்பை, தூங்கா நகரம், போன்ற படங்களில் விமல் நடித்து வந்தார்..
மாஸ் ஹீரோ யார்
தங்களுக்கு பிடித்த நடிகரை, ரசிகர்களே, ஒரு ஹீரோவாக உயர்த்துவார்கள்.. அல்லது ஒரு நடிகர் சிறப்பாக நடித்தால், அவரை பாராட்டுவதுடன் நிறுத்தி கொள்வார்கள்.. எனவே, இங்கே எல்லாருமே ஹீரோவாக முடியாது.. எல்லாருமே ரஜினி, கமல் போல மாற முடியாது..
அந்தவகையில், ஸ்டாராக விமலை யாருமே பார்க்கவில்லை.. அவரது நடிப்பை மட்டும் பார்த்துவிட்டு கடந்து சென்றார்கள்.. ஆனால், சிவகார்த்திகேயனை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு சென்றார்கள்.. அமரன் வெற்றிப்படத்துக்கு பிறகு இப்போது ஆக்ஷன் பட ஹீரோவாக உயர கணக்கு போடுகிறார்..
மஞ்சப் பை ராஜ்கிரண்
தயாரிப்பு நிறுவனம், கதை, நடிகை, கதைத்தேர்வு, போன்ற கால்குலேஷன்களை சரியாக செய்கிறார்.. அதனால்தான், நயன்தாரா, ஹன்சிகா என பிரபலமான நடிகைகளுடன் நடித்தார் சிவகார்த்திகேயன். ஆனால், மஞ்ச பை படத்தில் ஹீரோவாக விமல் இருந்தாலும், ராஜ்கிரண் கேரக்டரே வலுவாக இருக்கும்..
கூத்துப்பட்டறையில் துவங்கி கஷ்டப்பட்டுதான் விமல் நடிக்க வந்தாரு.. ஆனால் கோடிக்கணக்கான மக்கள் ஒரு நடிகரை கொண்டாடி, ஸ்டாராக ஏற்றுக் கொண்டால் மட்டுமே இங்கு நிலைக்க முடியும்..
சறுக்கல்கள் ஆரம்பம்
ஒரு படம் வெற்றியடைந்துவிட்டால், இனிமேல் நாமதான் தமிழ் சினிமா, நம்மால்தான் தமிழ் சினிமா நகர போகிறது என்று பலரும் நினைத்து கொள்கிறார்கள்.. இங்குதான் சறுக்குகிறார்கள்..
அதேபோல சம்பளம் விஷயத்தில் கறாராக இருப்பதும் அடுத்த சிக்கலாகிவிடுகிறது..
மார்க்கெட்டில் இறங்கியிருக்கும்போது, தயாரிப்பாளர் நம்பி படம் எடுக்க முன்வந்தால்,வெற்றிப்படம் தந்தபோது கேட்ட பணத்தையே, இப்போதும் கேட்பதுதான், இதுபோன்ற ஹீரோக்களுக்கு இன்னொரு சிக்கலாகிவிடுகிறது.
சிவகார்த்திகேயன் ரூ.75 கோடி
விஜய், அஜித்துக்கு முன்பு பிரசாந்த்தான் இங்கு மாஸ் ஹீரோவாக இருந்தார். ஆனால், இன்றைக்கு பிரசாந்த் எங்கே? ராமராஜன் எங்கே? எனவே கதாநாயகனாக உயரும்போது, அந்த உயரத்தை தக்க வைத்துக் கொள்வது பலருக்கும் தெரிவதில்லை.. இனியாவது விமலுக்கு கதைத்தேர்வு சரியாக இருக்க வேண்டும்.. ஆனால், விமல் எந்த காலத்திலும் ஸ்டாராகவே முடியாது.. மக்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே முடியும்.
சிவகார்த்திகேயன் ஏன் 75 கோடி சம்பளம் வாங்குறாரு என்று யாராலும் கேட்கவே முடியாது. காரணம், ரசிகர்கள் அவரை உச்சத்தில் கொண்டு போய் வைத்திருக்கிறார்கள்.. எப்போதுமே ஹீரோவுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு நெருக்கம் இருக்கணும்.. அந்த நெருக்கம் விமலுக்கு இருக்குமா தெரியவில்லை" என்றார்.

Click it and Unblock the Notifications