மறைந்தாலும் எஸ்.எஸ்.சந்திரனை தேடும் ரசிகர்கள்..அவருக்குள் இத்தனை திறமையா?அவருடைய மகனும் நடிகர் தானா?
சென்னை: எஸ். எஸ்.சந்திரன் மறைந்த பிறகும் அவரைப் பற்றி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அதிகமாக தேடி வருகின்றனர்.
மறைந்தாலும் மறையாத புகழ் ஒரு சிலர்தான் பெற்றிருக்கின்றனர். அதில் ஒருவராக எஸ்.எஸ்.சந்திரன் இருந்து வருகிறார்.

எஸ்.எஸ்.சந்திரனின் ஆரம்ப காலம்
எத்தனையோ நடிகர்கள் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்திருந்தாலும் தமிழ்நாட்டை சேர்ந்த நகைச்சுவை நடிகர் மற்றும் தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகத்திறமை கொண்ட எஸ். எஸ். சந்திரனை ரசிகர்கள் இப்ப வரைக்கும் மறக்க முடியாமல் இருந்து வருகின்றனர். ஒரு சிலர் தான் இறந்தாலும் அவர்களுடைய புகழ் குறையாமல் இருந்து வருகிறது. அதில் ஒருவராக எஸ். எஸ். சந்திரன் இருந்து வருகிறார். 15 வயதில் நடிக்கத் தொடங்கிய இவர் 700 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் தமிழகத்திலும் அதை சுற்றியுள்ள பகுதியிலும் பின்னர் இலங்கையிலும் நடத்தப்பட்ட பல நாடகங்களில் இவர் நடித்திருக்கிறார்.

அரசியலிலும் சாதனை
எஸ். எஸ். சந்திரன் சிவாஜி கணேசன் காலம் முதல் ரஜினி கமல் உட்பட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து இருந்தாலும் தன்னுடைய தனித்துவத்தினால் அனைவரின் மனதிலும் நல்ல இடத்தைப் பிடித்திருக்கிறார். வில்லன் நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் இவர் நடித்திருந்தாலும் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் இவர் தனித்துவமாக தான் வாழ்ந்திருக்கிறார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான ராஜ்யசபாவில் தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

தயாரிப்பாளராகவும் கலக்கல்
எஸ்.எஸ்.சந்திரன் வில்லன் நடிகராக நடித்து இருந்தாலும் அதிலும் காமெடியை செய்து தனித்துவமான திறமையை வெளிக்காட்டி இருக்கிறார். இவர் நடித்த திரைப்படங்களில் குறிப்பிட்டது என்று எதுவும் சொல்ல முடியாது. நடித்த படங்களில் எல்லாம் வித்தியாசமான நடிப்பை வெளிக்கட்டி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவரது மிகவும் பிரபலமான படங்களில் சகாதேவன் மகாதேவன், தங்கமணி ரங்கமணி, பாட்டி சொல்லை தட்டாதே மற்றும் கதைநாயகன் சந்திரன் போன்ற திரைப்படங்களையும் இவர் தயாரித்து தன்னுடைய தயாரிப்பாளர் முகத்தையும் ரசிகர்களுக்கு காட்டியுள்ளார்.

நடித்த சூப்பர் ஹிட் திரைப்படங்கள்
முதலில் திரைப்படங்கள் அவரின் சினிமா வாழ்விற்கு மிகப்பெரிய வெற்றியை வழிவகுத்தது. அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்தில் மிகவும் துல்லியமாக நடித்திருப்பார். அதனை தாண்டி தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மாப்பிள்ளை, உழைப்பாளி போன்ற திரைப்படங்களில் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதனைத் தொடர்ந்து விஷ்ணு, ஒன்ஸ்மோர், புதுமைப்பித்தன், நாம் இருவர் நமக்கு இருவர், மனம் விரும்புதே, காக்கைச் சிறகினிலே, திருநெல்வேலி போன்ற திரைப்படங்களிலும் சிறப்பாக நடித்திருப்பார். இவருக்கு திருமணம் முடிந்து ரோஹித் என்ற ஒரு மகனும் இருக்கிறார். அவரும் திரைப்பட நடிகராக வலம் வந்துள்ளார்.

கடைசி தருணங்கள்
எஸ்.எஸ்.சந்திரனின் மகனின் முதல் திரைப்படமான ஒரு முறை சொல்லி விடு என்ற திரைப்படத்தில் எஸ். எஸ், சந்திரன் இறுதியாக நடித்துள்ளார். நடிப்பு திறமையை தாண்டியும் இவர் ஒரு அரசியல் பேச்சாளராகவும் விளங்கி வந்தார். அதுமட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்திருக்கிறார். அதன்பிறகு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 2010ஆம் ஆண்டு அவர் காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்து இருந்தாலும் அவருடைய புகழ் இன்னமும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அவரது திரைப்படங்களை பார்க்கும் போது ரசிகர்கள் பலர் அவரை மிஸ் பண்ணி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications