Exclusive: சரிகமபவில் கலக்கும் ஆறு வயது “புவனேஷ்” யார் தெரியுமா? ஒரு ஊரே கொண்டாடுது
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் 6 வயதான புவனேஷின் பாடல் மற்றும் அவருடைய சுட்டி தனத்திற்கு பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவருடைய அம்மா புவனேஷ் பற்றி பல தகவல்களை ஒன் இந்தியா தமிழில் பிரத்யேகமாக பகிர்ந்து கொண்டார்.
டிவி சேனல்களில் புதியது புதியதாக பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்றுவிட்டால் அதில் அடுத்தடுத்த சீசன்கள் வருவது வாடிக்கையாக இருக்கிறது. அதுபோலத்தான் ஜீ தமிழில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி ஆக சரிகமப நிகழ்ச்சி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலர் வெள்ளி திரைகளிலும் பின்னணி பாடகர்களாக மாறி இருக்கிறார்கள்.

குட்டி பையன் புவனேஷ்
இந்த நிகழ்ச்சி ஜீ தமிழில் சரிகமப சீனியர் மற்றும் லிட்டில் சேம்ப்ஸ் என்ற இரண்டு விதமாக நடத்தப்படுகிறது. தற்போது லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஒரு சில போட்டியாளர்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் புவனேஷ். அறிமுகமான முதல் வாரத்தில் இருந்து இப்ப வரைக்கும் தன்னுடைய சுட்டித்தனத்தால் நடுவர்களையும் ரசிகர்களையும் கவர்ந்து கொண்டிருக்கிறார்.
ஊட்டி பையன்
புவனேஷ் பற்றி அவருடைய அம்மாவிடம் சில கேள்விகள் கேட்டோம். அதற்கு அவர் சுவாரஸ்யமாக பதில் அளித்து இருந்தார். அதில் புவனேஷின் குடும்பத்தை பற்றி கேட்டபோது அதற்கு அவர் பதில் அளிக்கையில், நாங்க கூட்டு குடும்பம் தான். ஊட்டி தான் எங்களுடைய சொந்த ஊர். புவனேஷின் அப்பா டாக்டர் ஆக இருக்கிறாரு. நான் ஹவுஸ் வைப்பா இருக்கிறேன். புவனேஷ்க்கு ஒரு அண்ணன் இருக்கிறார் என்று கூறியிருந்தார்.
நான்கு வயதிலேயே பாடல்
புவனேஷ் இப்போ சரிகமப நிகழ்ச்சியில் கலக்கி கொண்டிருக்கிறாரே அவருக்கு நல்லா பாட வரும்னு நீங்க எப்ப கண்டுபிடிச்சீங்க என்று கேட்டதற்கு, நான்கு வயது இருக்கும்போது அவன் பாடத் தொடங்கிட்டான். விளையாடிட்டு இருக்கும் போதே அவனுக்கு பிடிச்ச பாடல் ஏதாவது ஓடுனா அதை பார்த்து முணுமுணுக்க தொடங்கினான். அதற்கு பிறகு ஸ்கூல் நிகழ்ச்சிகளிலும் பாட வச்சாங்க இப்படித்தான் அவன் பாடத் தொடங்கினான் என்று கூறினார்.
ஆடிஷனில் நடந்த சம்பவம்
மியூசிக் கிளாஸ் எல்லாம் அனுப்புறீங்களா சரிகமப ஆடிஷன் எப்படி நடந்தது என்று கேட்டிருந்தோம். அதற்கு வீட்டு பக்கத்துலயே தான் ஆடிசன் நடந்தது. அவன் செலக்ட் ஆவானு நாங்க பெருசா நம்பிக்கை வைக்கல. சும்மா ட்ரை பண்ணி பார்க்கலாம்னு நினைத்தோம் ஆனால் அவன் செலக்ட் ஆகி அடுத்த ரவுண்டுக்கு சென்னைக்கு வர சொல்லிட்டாங்க. அதுபோல நிறைய பேர் கலந்துக்கிட்டாங்க எல்லோரும் பெரிய பசங்களா இருந்தாங்க.
ஆறு வயசு பாடகர்
இவனுக்கு ஆறு வயசு தான் என்பதால் இவன் செலக்ட் ஆவான் என்று எதிர்பார்க்கல. ஏன்னா எல்லாருமே அவ்வளவு அழகா பாடுனாங்க. அதை எல்லாம் தாண்டி புவனேஷ் செலக்ட் ஆனது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமான ஷாக்கிங் தான். அதுபோல இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவனுக்கு நிறைய ஃபேன்ஸ் கிடைச்சிருக்காங்க. அவனுடைய திறமையை எல்லாரும் பாராட்டுறாங்க. இதற்கு எங்களுக்கு அவங்களுக்கு நன்றி சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
சுட்டித்தனம் இருக்கு
அதுபோல ஸ்டேஜ்ல நிறைய சேட்டை பண்ணுறாரே வீட்டுல எப்படி என்ற கேள்விக்கு இந்த சேட்டை பண்றது எல்லாம் இங்கேதான். வீட்டில் இப்படி இருக்கவே மாட்டான். ரொம்ப அமைதியா இருப்பான். படிப்பிலும் ஃபர்ஸ்ட் தான் வருவான். இங்க ரொம்ப ஃப்ரீயா இருக்கு அதனால இப்படி சேட்டை பண்ண தொடங்கிட்டான். நிகழ்ச்சி முடிந்து திரும்பவும் ஸ்கூல் போக தொடங்கிட்டா மறுபடியும் பழையபடி மாறிடுவான்னு நினைக்கிறேன்.
அப்பாவுக்கு பெருமை
சரிகமக்கு முன்னாடி அவங்க அப்பாவை தெரிஞ்சவங்களுக்கு ஒரு டாக்டரா மட்டும்தான் தெரியும். ஆனா இப்போ எல்லோரும் நீங்க புவனேஷோட அப்பா தானே என்று கேட்டு செல்பி எல்லாம் எடுத்துக்கிறாங்க. ஒரு சின்ன வட்டத்துக்குள்ள தெரிந்த நாங்க இப்போ உலகம் முழுவதும் தெரிந்து இருக்கிறோம். அதுபோல சரிகமப நிகழ்ச்சியில் மட்டுமல்லாமல் சில வாரங்களுக்கு முன்பு டான்ஸ் ஜோடி டான்ஸ் ல போய் கலக்கிட்டு வந்தார். அது ஒரு வித்தியாசமான அனுபவம்.
புதிய ஆட்களின் அறிமுகம்
புதிய செட் புதிய ஆளுங்க என்ன செய்யப் போறான்னு நாங்க முதலில் பயந்தோம் ஆனால் அங்கேயும் எல்லாரிடமும் நல்ல டைமில் மிங்கிள் ஆயிட்டான். சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பாடவும் நடிக்கவும் வாய்ப்புகள் வந்துட்டு இருக்கிறது. ஆனால் இப்போ ஷோல இருக்கறதுனால நாங்க எதுக்கும் ஓகே சொல்லல. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மறக்க முடியாத நிகழ்வு. ஒவ்வொரு வாரமும் கோல்டன் ஷவர் வாங்கும் போது பார்க்கும் போதே எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது.
ஸ்கூலில் சப்போர்ட்
புவனேஷ் ஸ்கூலில் ரொம்ப சப்போர்ட் பண்றாங்க. நீங்க முழுசா நிகழ்ச்சியை முடிச்சிட்டு வாங்க நாங்க பாத்துக்கிறோம்னு சொல்றாங்க. புவனேஷ் வருங்காலத்தில் எப்படி கொண்டு வரலாம் என்று எந்த ஐடியாவும் இப்போதைக்கு எங்களிடம் இல்லை. எங்க குடும்பத்தில் படிப்புக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்போம்.

ஸ்வேதா ரொம்ப பிடிக்கும்
அதனால் முதலில் அவன் நல்லா படிக்கட்டும். அப்புறம் பிறகு அவன் பிடித்த மாதிரி எதுவென்றாலும் ஆகட்டும். அதுபோல சரிகமப செட்டில் எல்லோரும் நல்ல பழகுறாங்க போட்டி பொறாமையெல்லாம் இல்ல. புவனேஷும் எல்லோரிடமும் ஜாலியா விளையாடுறான். ஸ்வேதா மேமுக்கும் புவனேஷுக்கும் நல்ல ஒரு கனெக்ட் இருக்கு.
ஊரே கொண்டாடுது
மேடையில் எப்படியோ அப்படித்தான் ஸ்கிரீன்லையும் இருக்காங்க. புவனேஷ் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். டைம் கிடைக்கும் போது அவங்க மத்தவங்க கூடவும் பேசிட்டு இருப்பாங்க. புவனேஷ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எங்க எல்லோருக்குமே ரொம்ப சந்தோஷம். எங்க ஊர் பக்கம் யாரும் பெருசா பாட வர மாட்டாங்க. அதனால் எல்லோரும் ரொம்ப நல்ல விஷயம்னு பாராட்டுறாங்க, என சந்தோஷமாக பேசி முடித்திருக்கிறார். இந்த குட்டி பையன் புவனேஷ் பாடல்கள் உங்களுக்கு பிடிக்குமா? எந்த பாடல் பிடிக்கும் பாஸ்!
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications