சரிகமபா திவினேஷ் சொன்ன கனவு.. ஆறு லட்சத்தை தூக்கி கொடுத்த பாடகர் ஸ்ரீநிவாஸ்.. ஒரு ஊரே கொண்டாடுது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப லிட்டில் சேம்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக திவினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு 10 லட்சம் பரிசு தொகை கொடுக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் அவர் சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய கனவு பற்றி எமோஷனலாக பேசி இருந்தார்‌. அதை பாடகர் ஸ்ரீநிவாஸ் வீட்டிற்கே சென்று நிறைவேற்றி இருக்கிறார். அதாவது திவினேஷின் அப்பாவிற்கு 6 லட்சம் மதிப்புள்ள வாகனம் ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறார்.

ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பலருடைய வாழ்க்கையையே மாற்றி இருக்கிறது. அதிலும் அடிமட்டத்தில் இருக்கும் பலருக்கு திறமை இருந்தாலும் அதை வெளியே காட்டுவதற்கு வாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பெரிய உதவி செய்திருக்கிறது. ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் இன்று சினிமாவிலும் சீரியல்களிலும் முக்கிய பிரபலங்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

Sivakarthikeyan ZeeTamil SaReGaMaPa

பெற்றோரின் கஷ்டம்

பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் பின்னணி பாடகர்களாக மாறி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த திவினேஷ் வாழ்க்கையும் மாறி இருக்கிறது. திவினேஷ் சாதாரண ஒரு குடும்பத்தை சேர்ந்தவர். அவருடைய அப்பா பால் வண்டி ஓட்டும் டிரைவராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய அம்மா வீட்டு பக்கத்தில் உள்ளவர்களுக்கு துணி தைத்து கொடுக்கும் வேலையும், ஹோட்டல் மற்றும் கல்யாண வீடு போன்ற நிகழ்ச்சிகளில் சர்வர் மற்றும் கேட்டரிங் போன்ற வேலைகளையும் செய்து இருக்கிறார்.

மாறாத எளிமை

இந்த நேரத்தில் தான் திவினேஷுக்கு அவருடைய தாத்தா மூலமாக பாடல் பாடும் திறமை வந்திருக்கிறது. அவருடைய தாத்தா தான் ஊக்கப்படுத்தி இருக்கிறார். பழைய பாடல்களை தாத்தா சொல்லிக் கொடுக்க அதை அப்படியே பாடி இருக்கிறார். சரிகமப நிகழ்ச்சியில் திவினேஷுக்கு எவ்வளவு பெரிய பாராட்டு கிடைத்தாலும் நன்றி என்ற ஒரு வார்த்தையும் சொல்லிக் கொண்டு அப்படியே விட்டுவிடுவார். பிறகு அமைதியாகவே நின்று கொண்டிருப்பார்.

சரிகமப திவினேஷின் கேரக்டர்

அதுபோல்தான் அவருடைய வீட்டிலும் அவர் இருப்பாராம். அமைதியான பையனாக இருப்பார் என்று அவருடைய அம்மாவும் அப்பாவும் கூறி இருக்கிறார்கள். அதுபோல தனக்கு இந்த பொருள் வேண்டும் அந்த பொருள் வேண்டும் என்று அடம்பிடிக்க மாட்டாராம். எந்த ஒரு பொருள் வேண்டும் என்றாலும் உங்ககிட்ட காசு இருந்தா வாங்கி கொடும்மா என்று சொல்லுவாராம் கவர்மெண்ட் ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்த திவினேஷுக்கு இன்று உலகம் முழுவதும் ரசிகர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.

திவினேஷ் குடும்பத்திற்கு பரிசு

ஒரு பெரிய நிறுவனம் திவினேஷ் படிப்பு செலவை ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல இந்த நிகழ்ச்சியில் பலர் கிப்ட் கொடுத்து இருக்கிறார்கள். கடந்த சில வாரங்களுக்கும் முன்பு தன்னுடைய அப்பாவிற்கு ஒரு வண்டி வாங்கி கொடுக்க வேண்டும் அதுதான் என்னுடைய ஆசை என்று சொல்லி இருந்தார். தன்னை சரிகமப நிகழ்ச்சிக்கு அடிக்கடி கூட்டிக்கொண்டு வருவதால் சரியான நேரத்திற்கு வண்டி ஓட்ட போக முடியவில்லை என்று வேலையில் இருந்து தூக்கி விட்டார்கள். அதனால் அப்பாவுக்கு ஒரு வண்டி வாங்கி கொடுக்கணும் என்று திவினேஷ் சொன்னதை கேட்டு நடுவராக இருக்கும் பாடகர் ஸ்ரீநிவாஸ் அந்த வண்டி வாங்குவதற்கு என்ன செலவாகும் அதை நான் கொடுக்கிறேன் என்று சொல்லி இருந்தார்.

திவினேஷுக்கு பாராட்டு

அதேபோல இப்போது நேற்று இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நடைபெற்றது. அப்போது திவினேஷின் வீட்டிற்கு சர்ப்ரைஸ் ஆக சென்ற அர்ச்சனா மற்றும் ஸ்ரீநிவாஸ் அந்த வண்டியில் சாவி மற்றும் புத்தகங்கள் முழுவதையும் வண்டியோடு சேர்த்து திவினேஷின் அப்பாவிடம் ஒப்படைத்து இருக்கிறார். அந்த ஊர் முழுக்க நின்று வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். அதோடு திவினேஷ் பாடல் மற்றும் அவருடைய திறமைக்கு கிடைத்த வெற்றியை ரசிகர்கள் பலரும் பாராட்டி வாழ்த்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+