நான் எமோஷனலாக காரணமே இதுதான்?! மேடையில் நடந்த சம்பவம்.. வீடியோ வெளியிட்ட சமந்தா
சென்னை: நடிகை சமந்தா சில மாதங்களாகவே மேடையில் கண்கலங்கியபடி பேசிய வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டானது. இது குறித்து சமந்தா இப்போது விளக்கம் கொடுத்திருக்கிறார். தான் மேடையில் பேசும்போது எதற்காக கண்கலங்குகிறேன் என்று அதில் அவர் பேசுவதை கேட்டு பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
நடிகை சமந்தா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆகி இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் மாடலிங் மூலமாகத்தான் இவருக்கு பிரபலம் கிடைத்தது. இப்போது சமந்தா பற்றிய செய்திகள் அடிக்கடி வைரலாகி கொண்டே இருக்கிறது. சமந்தா நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து, பிறகு விவாகரத்தான செய்திகள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

ரசிகர்களின் கேள்விகள்
ஆனால் சமந்தா போடும் போஸ்ட்டுகள் எல்லாம் பார்த்து எப்போது அவர் இரண்டாவது திருமணம் செய்ய போகிறார்? அவர் அந்த தயாரிப்பாளரை திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா? இந்த பிசினஸ்மேனை திருமணம் செய்து கொள்ளப் போகிறா? என்று எல்லாம் வதந்திகளும் நாளுக்கு நாள் பரவிக்கொண்டே இருக்கிறது. அதற்கு அவ்வப்போது மேடைகளில் சமந்தா பதில் கொடுக்கிறார்.
சமந்தா கொடுத்த விளக்கம்
ஆனாலும் அவர் பற்றிய சர்ச்சைகள் மட்டும் இணையத்தில் குறையவில்லை. இந்த நிலையில் தான் தற்போது தயாரிப்பாளராக மாறி இருக்கிறார் சமந்தா. பிரவீன் காண்ட்ரோகுலா இயக்கத்தில் மே ஒன்பதாம் தேதி வெளியாக உள்ள 'சுபம்' என்ற தெலுங்கு படத்தின் இசை வெளியீட்டு விழா விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பட தயாரிப்பாளராக சமந்தா கலந்து கொண்ட போது பல விஷயங்களையும் பகிர்ந்து இருந்தார்.
தயாரிப்பாளர் சமந்தா
அதில் நான் எப்போதும் எல்லாம் விசாகப்பட்டினம் வருகிறேனோ அப்போதெல்லாம் ஒரு பிளாக் பஸ்டர் படம் வந்துவிடும். விசாகப்பட்டினத்தில் படமாக்கப்பட்ட மச்சி, ஓ பேபி போன்ற படங்கள் பெரிய அளவில் ஹிட் அடித்தன என்று நெகிழ்ச்சியாக பேசி இருந்தார். அதோடு ஒரு தயாரிப்பாளராக இந்த திரைப்படத்தை புதிய யோசனை உடன் தான் தொடங்கினேன் என்று சுபம் படம் குறித்து பேசி இருந்தார்.
சர்ச்சைகள்
இதைத்தொடர்ந்து தன்னுடைய instagram பக்கத்தில் சமந்தா ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதாவது சமந்தா மேடையில் பேசும்போது கண் கலங்குவது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதற்கு ரசிகர்கள் பலரும் சமந்தா இன்னும் கஷ்டத்தில் இருக்கிறார், அவரை கணவர் பிரிந்து சென்று விட்டார் என்பதற்காக சோகத்தில் இருக்கிறார் என்றெல்லாம் பேசி வருகிறார்கள்.
சமந்தா வீடியோ
இதற்கு சமந்தா அந்த வீடியோவில் பதில் கொடுத்திருக்கிறார். அதில் அவர் பேசும்போது நான் மேடையில் கண்கலங்கி துடைப்பதற்கு காரணம் எமோஷனலாக இருப்பதல்ல. என்னுடைய கண்கள் அதிகமான வெளிச்சம் கண்டால் சென்சிட்டிவ் ஆகி கண்ணீர் வந்துவிடும். இதனால் தான் என் கண்களில் கண்ணீர் வருகிறது. நான் நன்றாகவும், மகிழ்ச்சியாகவும், ஆர்வத்துடனும் இருக்கிறேன் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சமந்தாவிற்கு வந்த கஷ்டம்
சமந்தா கடந்த வருடத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து இருந்தார். அவருடைய தந்தையின் இறப்பு, உடல் நல பிரச்சனைகள் என்று பல சோகங்கள் அவரை தாக்கிய போதும் அதிலிருந்து பீனிக்ஸ் பறவையாக மீண்டும் வந்து கொண்டே இருக்கிறார். இப்போதும் சமந்தாவிற்கு உடலில் பல பிரச்சனைகள் இருக்கிறது. ஆனாலும் பலருக்கு மோட்டிவேஷன் கொடுக்கிற வகையில் எந்த நிகழ்ச்சியிலும் சிரித்த முகமாக கலந்து கொள்கிறார்.
ரீல்ஸ் வீடியோக்கள்
அதுபோல அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு அவர் செம்பருத்தி பூ பற்றிய வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். அது பெரிய அளவில் பேசப்பட்டது. அதுபோல சமந்தா பற்றி பல்வேறு சர்ச்சைகள் பரவி வந்தாலும் அதையெல்லாம் சமந்தா கண்டு கொள்ளாத நிலையில் இப்போது தன்னுடைய கண்ணில் இருக்கும் பிரச்சனை குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications