Samantha: சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் 2வது திருமணத்தில் இருக்கும் ஒற்றுமை! இப்படி ஒரு பிளானா?
சென்னை: நடிகை சமந்தா இன்று இந்தி பட இயக்குனர் ராஜு நிடிமோரை திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் சமந்தாவின் இரண்டாவது திருமணத்திலும், அவருடைய முதல் கணவரான நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணத்திலும் இருக்கும் ஒற்றுமை பற்றி இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது.
நடிகை சமந்தா தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நாக சைதன்யாவுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் ஆரம்பத்தில் காதலிக்க தொடங்கியதும் நாக சைதன்யா குடும்பத்தில் இவர்களுடைய காதலுக்கு சம்மதிக்கவில்லை. பிறகு நாக சைதன்யா வற்புறுத்தி கல்யாணத்திற்கு சம்பந்தம் வாங்கினார். அவர்களுடைய திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு கோவாவில் வைத்து பிரம்மாண்டமாக நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். இதுதான் நாக சைதன்யாவோடு விவாகரத்திற்கு காரணமாக இருந்தது என்று செய்திகளும் வந்தது. சில வருடங்கள் பிரிந்திருந்த நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவருமே மனம் ஒத்து விவாகரத்து செய்து விட்டனர்.
இந்த பிரிவுக்கு பிறகு நாக சைதன்யா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்த சமயத்தில் சமந்தாவின் ரசிகர்கள் நாக சைதன்யாவை அதிகமாக விமர்சித்து வந்தனர். அதற்கு நாக சைதன்யா வருத்தம் தெரிவித்து இருந்தார். நாக சைதன்யாவின் திருமணம் கடந்த வருடம் ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதுவரைக்கும் சிங்கிளாக இருந்த சமந்தா இன்று இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார். அதே நேரத்தில் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவர் உடைய இரண்டாவது திருமணத்திலும் ஒரே ஒற்றுமை இருக்கிறது. அது என்னவென்றால் இருவருக்கும் டிசம்பர் மாதத்தில் தான் திருமணம் நடந்திருக்கிறது. டிசம்பர் ஒன்றாம் தேதி அன்று சமந்தா திருமணம் செய்திருக்கிறார். அதேபோல நாக சைதன்யாவிற்கு கடந்த வருடத்தில் டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் நடைபெற்று இருக்கிறது.
சமந்தாவை வைத்து ஃபேமிலி மேன் மற்றும் சிட்டாடல் போன்ற வெப்சீரிஸை இயக்கியவர் ராஜ் நிடிமோரு. அதிலிருந்து சமந்தாவுக்கும் ராஜுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி போட்டோஸ் எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்தனர். அதோடு இருவரும் பல நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக கலந்து கொண்டு வந்தனர். அந்த புகைப்படங்களை பார்க்கும் பலரும் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

ஆரம்பத்தில் சமந்தா மறுத்தாலும் பிறகு அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் இன்று இவர்களுடைய திருமணம் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா மையத்தில் எளிமையாக நடைபெற்றிருக்கிறது. சமந்தாவின் இரண்டாவது திருமணத்தில் திரை பிரபலங்கள் யாரும் பெரிதாக கலந்து கொள்ளவில்லை. அதனால் இல்ல விரைவில் உள்ள ரிசப்ஷன் வைத்து திரை பிரபலங்களுக்கு விருந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications