சேதுபதிக்கு கண்ணு தெரியலையா? புல்லி கேங்கை ஆதரிக்கலாமா? அதை பேச 5 நிமிஷம் கூட இல்லையா? சனம் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கும் விஜய் சேதுபதியை கண்டித்து நடிகை மற்றும் பிக் பாஸ் விமர்சகரான சனம் ஷெட்டி போஸ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கிய சில வாரங்கள் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல விஜய் சேதுபதி பேசுவது எரிச்சலாக இருக்கிறது என்று சிலர் கருத்து தெரிவித்து வருகிறார். ஒரு சிலர் விஜய் சேதுபதி தான் சரியாக இந்த நிகழ்ச்சியை கையாண்டு வருகிறார் என்று கூறி வருகின்றனர்.

television bigg boss tamil 8 bigg boss 8 8

ஆனால் விஜய் சேதுபதி எதிர் தரப்பில் இருக்கும் போட்டியாளர்களை அவர்கள் தரப்பு நியாயத்தை சொல்லவிடாமல் உடனே ஆஃப் பண்ணுவது, பிறகு அவர்கள் தான் நினைப்பதை சொல்லவில்லை என்றால் அவர்கள் இரிடேட் ஆகுற மாதிரி ரியாக் செய்வது பார்க்கும் ரசிகர்களை கவரவில்லை என்பதும் பலருடைய கருத்தாக இருக்கிறது.

அதிலும் கடந்த வாரத்தில் மஞ்சரி மற்றும் அருண் பிரச்சனையில் விஜய் சேதுபதி அருணுக்கு ஆதரவாக மஞ்சரியை கடுமையாக சாடி இருந்தார். அதோடு மஞ்சரி தான் செய்த செயல் தவறு என்று மன்னிப்பு கேட்கவும் வைத்திருந்தார். ஆனால் மஞ்சரி இடம் அருண் ட்ரிகரின் போன்ற வார்த்தைகளை முதலில் பயன்படுத்தியது அருண் தான் என்ற ரகசியங்களை குறும்படம் வாயிலாக பல ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வந்தனர்.

ஆதாரத்தை விஜய் சேதுபதி பார்க்கவில்லையா? என்று தெரியவில்லை.. ஆனால் சொல்லிக் கொடுத்ததை சிறப்பாக சொல்வது போலவே பிக் பாஸ் அனிமல் சொல்லிக் கொடுத்ததை வைத்து விஜய் சேதுபதி மஞ்சரியை திட்டி தீர்த்து விட்டார். இதற்கு எதிராக ஜேம்ஸ் வசந்தன் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதை தொடர்ந்து சனம் ஷெட்டியும் நேற்று ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார்.

ஒரு பெண்ணை பொதுவெளியில் கேவலப்படுத்துவது அழகா? விஜய் சேதுபதியை திட்டி பதிவு போட்ட ஜேம்ஸ் வசந்தன்
அதில், நேற்று பிக் பாஸ் கோடிக்கணக்கான ரசிகர்களை முழுமையாக ஏமாற்றியது. பாதிக்கப்பட்ட மஞ்சரியை இரக்கம் இன்றி அவமானப்படுத்துவது மற்றும் கொடுமைப்படுத்துபவர்களை எப்படி பாராட்டுவது? அடிப்படையில் விஜய் சேதுபதி செய்தது தவறு.

அருணை பாராட்டுவதற்காக மஞ்சரியை நோஸ்கட் பண்ணினார். விஜய் சேதுபதி சார் கருப்பு கண்ணாடி போட்டதால் அவருக்கு கண்ணு தெரியவில்லை.. ஆமா தானே சார் (விஜய் சேதுபதி போலவே ஆமா தானே சொல்லி இருக்கிறார்) கண்ணு முன்னாடி அவ்ளோ பெரிய அநியாயம் நடக்கிறது. மஞ்சரியை மொத்த ஹவுஸ்மேட்டும் சேர்ந்து புல்லிங் பண்றாங்க, கார்னிங் பண்றாங்க, ரவுடிசம் பண்றாங்க.

இதை தட்டிக் கேட்க உங்களுக்கு மனசு வரலையா சார்? நேத்து மஞ்சரியே வாய்விட்டு இதுதான் சார் நடந்தது என்று சொல்லுறாங்க.. என்ன புரிஞ்சுக்கோங்க என்று கேட்டு விட்டாலும் உங்களுக்கு காது கேட்கலயா சார்? மூன்று மணி நேரம் சோ நடத்துறீங்க அப்போ பர்த்டே செலிப்ரேஷன் பண்ணுவதற்கு உங்களுக்கு நேரம் இருக்கு, லவ் லெட்டர் படிக்க நேரம் இருக்கு.

television bigg boss tamil 8 bigg boss 8 8

தீபக் நேம் கிளியர் பண்றதுக்கு சாச்சிகாவை அரை மணி நேரமா ரோஸ்ட் பண்றதுக்கு உங்களுக்கு டைம் இருக்கு. ஒன் டே.. நண்டே என்று இஷ்டத்துக்கு கவுஸ்மெட்டடை ப்ளேம் பண்ண சத்யாவை சொல்றதுக்கு டைம் இருக்கு. முத்துவை ஆஃப் பண்றதுக்கு டைம் இருக்கு, சிவா உடைய பீலிங்க்ஸை கூட கன்சல்ட் பண்றதுக்கு உங்களுக்கு டைம் இருக்கு. ஆனா மஞ்சரிக்கு சப்போர்ட்டிவா பேசுவதற்கு உங்களுக்கு அஞ்சு நிமிஷம் டைம் இல்லல சார்.

புல்லி பண்றது தப்பு என்று உங்களுக்கு சொல்றதுக்கு மனசு வரலல்ல சார்? பல கோடி மக்கள் பாக்குற பிக் பாஸ் ஷோல இப்படி ஒரு அநியாயம் நடந்தும் அதை தட்டிக் கேட்கிறதுக்கு உங்களுக்கு முடியலன்னா உங்க கிட்ட என்ன சார் எதிர்பார்க்க முடியும். நீங்க மஞ்சரியை சப்போர்ட் பண்ணலைன்னா பிரச்சனை இல்ல. ஆனா புல்லிங் கேங்கை பாராட்டுறீங்க பாருங்க அங்க தெரியுது உங்க ஸ்டாண்ட் எந்தப் பக்கம் இருக்குன்னு.

ஆனால் பரவால்ல சார் நீங்க மஞ்சரியை சப்போர்ட் பண்ணலன்னா பரவாயில்லை. மஞ்சரியை சப்போர்ட் பண்றதுக்கு நாங்க மக்கள் இருக்கிறோம், என் சப்போர்ட் மஞ்சுரிக்கு தான் என்று அந்த வீடியோவில் கோபமாக சனம் ஷெட்டி பேசியிருக்கிறார். '
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+