சரிகமப வின்னர் திவினேஷ் பட்ட கஷ்டம்.. இந்த சிறுவனுக்குள் இவ்வளவு சோகமா? பெற்றோரின் கதறல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக திவினேஷ் வெற்றி பெற்றிருக்கிறார். இவருக்கு 10 லட்சம் பரிசு தொகை கிடைத்திருக்கிறது. இவர் உடைய குடும்பத்தினரும் திவினேஷும் படும் கஷ்டங்கள் குறித்து அவருடைய அம்மா அப்பா பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பொதுவாக வாழ்க்கையில் அடி மட்டத்தில் இருப்பவர்கள் எத்தனையோ அவமானங்களை சந்தித்து வருகிறார்கள். பணம் இல்லை என்ற ஒரே காரணத்தால் என்னதான் திறமை இருந்தாலும் அதற்கு மதிப்பு அவ்வளவு சீக்கிரத்தில் கிடைத்து விடுவதில்லை. அது போல தான் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக தேர்வு ஆன விக்னேஷ் குடும்பத்தினருக்கும் கிடைத்திருக்கிறது. சரிகமப மூலமாக இன்று பட்டித்தொட்டி எல்லாம் பிரபலமாக இருக்கிறார்.

Sivakarthikeyan ZeeTamil SaReGaMaPa

ரசிகர்களின் தேடல்

சரிகமப நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகும் போதெல்லாம் திவினேஷ் ப்ரோமோ எப்போது வெளியாகும் என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கும். திவினேஷ் பற்றி பலரும் கமெண்ட் கொடுத்து வந்தனர். கடைசியில் அவர் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே வெற்றி பெற்றிருக்கிறார். திவினேஷ் பழைய பாடல்களை பாடி நடுவர்களை மட்டும் அல்லாமல் மக்களையும் மகிழ்வித்து இருந்தார். திவினேஷின் அப்பா பால் வண்டி ஓட்டும் டிரைவராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அம்மா பகுதியில் உள்ளவர்களுக்கு துணி தைத்து கொடுக்கும் வேலையை செய்து கொண்டே, திருமண மண்டபங்களில் கேட்டரிங் சர்வீஸ் வேலைக்கும் சென்று இருக்கிறார்.

அம்மாவிற்கு கிடைத்த அவமானம்

அப்போது தான் வேலைக்கு போகும் திருமண வீடுகளில் அங்கு பாடல் நிகழ்ச்சிகள் நடக்கும்போது தன்னுடைய மகனை அந்த நிகழ்ச்சியில் பாட வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கேட்பாராம். ஆனால் அங்குள்ளவர்கள் அதற்கு சம்மதம் தெரிவிக்காமல் அவமானப்படுத்தி இருக்கிறார்கள். அதுபோல திவினேஷ் இவ்வளவு அழகாக பாடுவதற்கு காரணம் அவருடைய தாத்தா தான். தாத்தா சொல்லி கொடுத்த பாடலை தான் திவினேஷ் பாடி பழகி இருக்கிறார்.

திவினேஷ் குடும்ப சூழ்நிலை

திவினேஷ் வீட்டில் டிவி கூட கிடையாதாம். ஆடிஷனில் திவினேஷ் செலக்ட் ஆன போது அந்த நிகழ்ச்சியை கூட டிவி திவினேஷால் டிவியில் பார்க்க முடியவில்லை. பக்கத்து வீட்டில் போய் தான் பார்த்திருக்கிறார். திவினேஷ் பாடல்கள் ஒவ்வொரு வாரமும் வெளியாகும் போது அவருடைய குடும்பத்தினர்கள் இதை பக்கத்து வீட்டில் போய் பார்ப்பதாக சொல்லி இருந்தார். அப்போது திவினேஷுடன் போட்டியாளராக இருக்கும் குழந்தைகள் திவினேஷுக்கு டிவி வாங்கி கொடுக்க வேண்டும் என்பதற்காக பணம் சேகரித்து டிவி வாங்க முடிவெடுத்து இருந்தனர்.

திவினேஷுக்கு கிடைத்த பரிசு

அப்போது வசந்த் அண்ட் கோ நிறுவனத்தினர் நாங்களே திவினேஷுக்கு ஒரு டிவி கொடுக்கிறோம் என்று கிப்ட் கொடுத்து இருந்தார்கள். அதுபோல பாடகர் மற்றும் இசை அமைப்பாளர் என மெல்லிசை நாயகன் எம்எஸ்சியின் பாடல்கள் ரவுண்ட் நடைபெற்றது. அப்போது திவினேஷ் பாடிய பாடலை கேட்டு எம்எஸ்வியின் குடும்பத்தினர் இவர் எங்கள் குடும்ப வாரிசு என்று அறிவித்திருந்தனர். அதேபோல தேவா ஒரு ரவுண்டில் கலந்து கொண்டிருந்தார் அந்த ரவுண்டில் ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் என்று திவினேஷ் பாடி இருந்தார்.

திவினேஷுக்கு கிடைத்த பாராட்டு

அந்த பாடலை கேட்டு தேவா கண்கலங்கி அழுந்து இருந்தார். எல்லோரும் என்னை தேவா சார், தேவா அப்பா என்றெல்லாம் கூப்பிடுறாங்க. ஆனால் டே தேவான்னு என்னை கூப்பிட்ட ஒரே ஆள் எங்க அம்மா தான். அவங்களை திவினேஷ் பாடலை கேட்கும் போது என்னுடைய அம்மா ஞாபகம் எனக்கு வருகிறது என்று சொல்லி இருந்தார். அதுபோல கேப்டன் விஜயகாந்தின் பாடல்கள் ரவுண்டு நடைபெற்றது அப்போது விஜயகாந்த் பாடலை திவினேஷ் பாடியிருந்தார். அதை கேட்டு மெய் மறந்த விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் இன்னொரு முறை இந்த பாடலை பாடுங்கள் என்று பாட சொல்லி கேட்டு இருந்தார்.

வேலை இழந்த அப்பா

இப்படி ஒவ்வொரு ரவுண்டிலும் பலருடைய மனங்களை கொள்ளை கொண்டு இருந்து திவினேஷ் ஒவ்வொரு ரவுண்டிலும் ஜெயித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய குடும்பத்திற்கு பிரச்சினை வந்திருக்கிறது. அதாவது திவினேஷ் அப்பா திவினேஷை இந்த நிகழ்ச்சிக்கு கொண்டு வருவதால் அவரால் சரியாக வேலைக்கு போக முடியாமல் இருந்திருக்கிறது டைமுக்கு வர முடியவில்லை என்று பால்வண்டி டிரைவராக நீங்க வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்களாம். அதனால் அவருடைய அப்பா வேலை இழந்திருக்கிறார். இது பற்றி ஒரு எபிசோடில் திவினேஷ் பேசி இருந்தார்.

மாறிய சூழ்நிலை

என்னுடைய அப்பாவிற்கு ஒரு வண்டி வாங்கி கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று சொல்லியிருந்தார். இப்போது நடுவராக இருக்கும் ஸ்ரீநிவாஸ் நானே உன்னுடைய ஆசை நிறைவேற்றி வைக்கிறேன். உங்க அப்பாவுக்கு நான் வண்டி வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லி இருந்தார். அதுபோல திவினேஷ் அம்மா பேசும்போது ஆரம்பத்தில் எங்களை எங்களுடைய சொந்த உறவினர்களே மதிக்க மாட்டார்கள், அசிங்கப்படுத்துவார்கள்.

Sivakarthikeyan ZeeTamil SaReGaMaPa

உறவுகளால் அவமானம்

ஒரு நிகழ்ச்சிக்கு போக வேண்டும் என்றாலும் கூட கண்டுகொள்ளாதது போல முகத்தை திருப்பிக் கொண்டு போவார்கள். ஆனால் இன்று என்னுடைய மகன் பாடிய பிறகு எல்லோரும் பாராட்டுகிறார்கள். ஒரு மேடையில் பாடுவதற்கு என்னுடைய மகனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று நான் கேட்டுக் கொண்டிருந்தேன் இப்போது என்னுடைய மகனை எல்லோரும் அவர்களுடைய நிகழ்ச்சியில் பாடுவதற்காக கூப்பிடுகிறார்கள். இந்த சந்தோஷம் எங்களுக்கு பெருசாக இருக்கிறது என்று பேசி இருந்தார்.

இந்த நிலையில் பலருடைய ஆசைப்படி டைட்டில் ஜெயித்த திவினேஷுக்கு 10 லட்சம் பரிசு கிடைத்திருக்கிறது. அதேபோல திவினேஷுக்கு மெல்லிசை இளவரசன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தினேஷ் பாடல்கள் உங்களுக்கு பிடிக்குமா? அவர் டைட்டில் ஜெயிப்பது பற்றி உங்க கருத்து என்ன பாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+