SaReGaMaPa: சரிகமப சீனியர் 5 வின்னர் சுசாந்திகாவுக்கு 60 லட்சம் வீடு! 2வது, 3வது போட்டியாளர் இவங்கதான்! பரிசு இவ்வளவு!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆறு மாதங்களாக நடைபெற்று வந்த சரிகமப சீனியர்ஸ் சீசன் 5 மாபெரும் இறுதிச் சுற்று (கிராண்ட் ஃபினாலே) நேற்று மாலை மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இரவு 12 மணியை நெருங்கும்போது, மக்களின் வாக்குகள் மற்றும் நடுவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

டைட்டில் வெற்றியாளர் சுசாந்திகா:
இந்த சீசனின் வெற்றியாளராக, மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் சுசாந்திகா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்குப் பரிசாக எம்.பி. டெவலப்பர்ஸ் வழங்கிய 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய வீடு வழங்கப்பட்டது. இந்த பிரமாண்டமான பரிசைப் பார்த்து அனைவரும் அதிர்ந்து போனார்கள்.
மற்ற போட்டியாளர்களுக்குக் கிடைத்த பரிசுகள்:
இறுதிச் சுற்றில் பங்கேற்ற ஆறு போட்டியாளர்களும் தங்கள் திறமைக்கேற்பப் பரிசுகளைப் பெற்றனர்.
முதல் இடம் (வின்னர்)- சுசாந்திகா 60 லட்சம் மதிப்புள்ள வீடு. மக்கள் வாக்குகள் அடிப்படையில் வெற்றி
இரண்டாம் இடம் (முதல் ரன்னர் அப்) சபேசன் 10 லட்சம் ரூபாய் பணப்பரிசு (இலங்கையை சேர்ந்தவர்)
மூன்றாம் இடம் (இரண்டாம் ரன்னர் அப்) சின்னு செந்தமிழன் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம். மெக்கானிக் செட் ரீல்ஸ் மூலம் பிரபலமானவர்.
கோல்டன் வாய்ஸ் (மக்கள் தேர்வு) | பவித்ர 5 லட்சம் மதிப்புள்ள தங்கம் (உணர்ச்சிப் பூர்வமான பாடல்களால் கவர்ந்தவர்)
நெகிழ்ச்சியான சம்பவங்கள்:
இந்த சரிகமப நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்துப் போட்டியாளர்களுக்கும் ஒரு கதைக் கஷ்டம் இருந்தது என்பதுதான் உண்மை. அந்தக் கஷ்டங்களை எல்லாம் மறைக்கும் தருணமாக இந்த இறுதிச் சுற்றுப் போட்டித் தொடர் அமைந்தது.
இரண்டாம் இடத்தைப் பிடித்த சபேசன் ஈழத் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இந்த அளவில் பரிசைத் தட்டித் தூக்கியது அங்குள்ள ரசிகர்களுக்குப் பெரிய பெருமையாகப் பார்க்கப்படுகிறது. அவர் இந்த சீசனில் ஒவ்வொரு சுற்றிலும் பல வெற்றிகளை பெற்றிருந்தாலும் பல இடங்களில் கண்கலங்கி தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்து இருந்தார். அப்போது பல விமர்சனங்களும் வந்தது, இவர் எதற்கெடுத்தாலும் அழுது கொண்டிருக்கிறார் என்று அதே நேரத்தில் சில இடங்களில் அனைவரையும் வியக்க வைக்கவும் அளவிற்கு பாடியிருக்கிறார். பாடகர் கார்த்திக் முன்பே அவர் பாடிய பாடலை பாடிய பாராட்டுகளையும் பெற்றிருந்தார்.
சின்னுவின் சந்தோஷம்
மூன்றாம் இடத்தைப் பிடித்து தங்கப் பரிசு பெற்ற சின்னு செந்தமிழன்-க்கு ஏற்கனவே ஒரு ரசிகர் பைக் பரிசளித்த சம்பவமும், இந்தத் தங்கப் பரிசும் அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதுபோல அவருக்கு பைக் வழங்கிய ரசிகர் சிவா துபாயில் ஒரு வேலையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். படித்த படிப்புக்கு வேலை பார்த்துக்கொண்டு, இவருக்கு நிகழ்ச்சிகள் கிடைத்தால் அங்கு தன்னுடைய ஸ்பான்சரில் சென்று அவர் பாடலாம் என்று அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
பவித்ராவுக்கு ஆறுதல்
கணவர் இழப்புக்குப்பின் மீண்டு வந்து பாடிய பவித்ராவுக்கு கோல்டன் வாய்ஸ் விருது மற்றும் தங்கம் கிடைத்தது ரசிகர்களுக்குச் சிறிய ஆறுதலைக் கொடுத்துள்ளது.
இந்த சரிகமப நிகழ்ச்சி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மனதிலும் இடம் பிடித்துள்ளது என்பதுதான் உண்மை. ஜீ தமிழின் மிகப் பெரிய இசைப் பயணம் முடிவுக்கு வந்தாலும், புதிய கலைஞர்களைத் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications