SaReGaMaPa: சரிகமப சீனியர் சீசன் 5 கிராண்ட் பினாலே மேடையில் பவித்ரா பாடிய பாடல்! கலங்க வச்சிட்டாரே!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப சீனியர் சீசன் 5. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதுப் பிரிவிலும் ரசிகர்களைக் கொண்ட இந்த நிகழ்ச்சி, இன்று (டிசம்பர் 23) மாபெரும் இறுதிச் சுற்று (கிராண்ட் ஃபினாலே) கட்டத்தை எட்டியுள்ளது.
அனல் பறக்க ஆரம்பமான இந்த இறுதிச் சுற்றில், ஆறு போட்டியாளர்கள் வெற்றிக் கோப்பைக்காகப் போட்டியிடுகின்றனர். அரங்கம் முழுவதும் அன்பால் சேர்ந்த மக்களால் நிறைந்துள்ள காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இசை பயணம்
இந்த ஆறு போட்டியாளர்களில் பெரும்பாலான ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர் தான் பவித்ரா. பவித்ராவின் இசைப் பயணத்தின் பின்னால் உள்ள உருக்கமான கதை தான் அனைவரையும் உருக வைத்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்புதான் பவித்ராவின் கணவர் ஒரு விபத்தில் காலமாகிவிட்டார். தன்னுடைய மகளின் பிறந்த நாளுக்காக உடை எடுக்கப் போயிட்டுத் திரும்பி வரும்போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்தத் தகவலைக் கேட்டு உடைந்து போயிருந்த பவித்ராவிற்கு, அவரது திறமையை நிறைவேற்றிக் கொள்வதற்காகக் கிடைத்த வாய்ப்புத் தான் இந்தச் சரிகமப நிகழ்ச்சி.
தன்னுடைய தம்பி மற்றும் உறவினர்களின் ஆதரவால் சரிகமப நிகழ்ச்சிக்கான ஆடிஷனில் கலந்து கொண்டார். ஆடிஷனில் தேர்வு ஆகி வந்தவர், இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் தன்னுடைய இனிமையான குரலால் அனைவரையும் மயங்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
காதலால் உருகிய பாடல்
இந்த நிகழ்ச்சியின் மாபெரும் இறுதிச் சுற்றில் பவித்ரா பாடிய "காற்றில் எந்தன் கீதம்" என்ற பாடல் அங்கிருந்த அனைவரையும் உருக வைத்துவிட்டது. அவர் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்பைத் தன்னுடைய குரலில் கொண்டு வந்து, பாடலின் வரிகளில் உள்ள வலியை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகக் கொடுத்தார்.
இந்தப் பாடலைக் கேட்ட பலரும், இந்தப் பாடல் வரிகள் இவருக்காகவே எழுதப்பட்டிருக்கிறதா என்று உருகிப் பேசி வருகிறார்கள். கணவர் இல்லாத சோகத்தை சுமந்து கொண்டு தன் கலைத் திறனை நிரூபித்த பவித்ராவுக்கு இந்தச் சீசனின் டைட்டில் வெற்றியாளர் மகுடம் கிடைக்க வேண்டும் என்பதுதான் பலருடைய ஆசையாக இருக்கிறது.
சரிகமப சீனியர் சீசன் 5-ல் தன்னுடைய சாதனையால் பவித்ராவுக்குச் சினிமாவில் பாடுவதற்கும் வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. இவரது இசைப் பயணம் பலருக்கும் ஒரு ஊக்கசக்தியாக இருக்கிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications