"பள்ளிக்கட்டு சபரிமலைக்கு ஐயப்பா” சரிகமபவில் சபேஷன் பாடிய பாடல்! வீரமணி சொன்ன வார்த்தை! நெகிழ்ச்சி தருணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் கடந்த வாரம் பக்தி ரவுண்டு நடைபெற்றது. அப்போது ஒவ்வொரு போட்டியாளர்களும் கடவுள் பாடல்கள் பாடி இருந்தனர். அந்த வரிசையில் சபேஷன் என்ற போட்டியாளர் பள்ளிக்கட்டு சபரிமலைக்கு ஐயப்பா என்ற பாடலை பாடியிருந்தார். இந்த பாடலை அவர் பாடும் போது இதே பாடலை பாடி பிரபலமடைந்த பாடகர் வீரமணி, சபேஷனை பாராட்டி கண்கலங்கி இருந்தார்.

SaReGaMaPa Zee Tamil

சரிகமப நிகழ்ச்சி

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதனாலையே இந்த நிகழ்ச்சியில் சீனியர் மற்றும் ஜூனியர் என்று இரண்டு வகையாக நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சமீபத்தில் தான் ஜூனியர்களுக்கான நிகழ்ச்சி முடிவடைந்தது. அதில் டைட்டில் வின்னராக திவினேஷ் என்ற போட்டியாளர் வெற்றி பெற்று இருந்தார். ஆரம்பத்தில் இருந்தே திவினேஷ் பழைய பாடல்களை பாடி மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார்.

திவினேஷ் பாடல்கள்

70ஸ், 80ஸ் காலகட்டத்தில் உள்ள பாடல்களுக்கு இவ்வளவு அருமையான அர்த்தங்கள் இருக்கிறது என்று இன்றைய காலகட்ட ரசிகர்களும் புரிந்துகொள்ளும் அளவிற்கு இவருடைய பாடல்கள் பலருடைய மனதை கவர்ந்தது. இந்த நிலையில் ஜூனியர்களுக்கான நிகழ்ச்சி முடிவடைந்ததும் சீனியர்களுக்கான நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் அதிகமான போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருந்தாலும் இப்போது இறுதி கட்டத்தை இந்த நிகழ்ச்சி எட்டி இருக்கிறது.

சரிகமப பைனல் போட்டியாளர்கள்

இதில் ஃபைனலிஸ்ட் ஆக ஆறு போட்டியாளர்கள் யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். அதில் அதிகமானோர் சபேஷன், செந்தமிழன், சுஷாந்திகா, அருண், ராஜேந்திரன், ஸ்ரீஹரி, சிவானி போன்றோர் இடம்பிடிப்பார் என்று பலரும் கூறி வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க கடந்த வாரத்தில் இந்த நிகழ்ச்சியில் பக்தி பாடல்கள் ரவுண்டு நடைபெற்றது. அதில் போட்டியாளர்கள் தங்களுடைய மனம் கவர்ந்த கடவுள் பாடலை பாடி அனைவரையும் வியக்க வைத்திருந்தனர்.

கருப்பசாமி பாடல்

அப்போது ஒரு போட்டியாளர் கருப்பசாமி பாடலை பாட அங்கிருந்த அரங்கத்தில் இருந்த ஒரு பெண் அருள் வந்து சாமி ஆடுவது போல ஆடி இருந்தார். அது பார்ப்பவரை வியக்க வைத்தது அதே நேரத்தில் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. அதுபோல சபேஷன் என்ற போட்டியாளர் "பள்ளிக்கட்டு சபரிமலைக்கு" என்ற பாடலை பாடி இருந்தார். அந்த பாடல் பலருக்கும் ஒரு விதமான ஒரு அனுபவம் ஏற்படுவதாக கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள்.

வீரமணி சொன்ன வார்த்தை

அதேபோல இந்த பாடலை பாடி பிரபலமடைந்த பாடகர் வீரமணி, எனக்கு இந்த பாடல் ஐயப்பன் போட்ட பிச்சை எனக்கு மட்டுமல்ல என் குடும்பத்திற்கும் அவர் கொடுத்த பிச்சைதான் நாங்கள் இன்று இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறோம் பள்ளிக்கட்டு சபரிமலை பாடல் வந்து பல வருடம் ஆகிவிட்டது. ஆனால் எப்போதும் இன்றைய தலைமுறையினரும் அதை பிரஷ்ஷாக பார்க்கிறார்கள். அதற்கு காரணம் அந்த ஐயப்பன் தான் என்று கண்கலங்க பேசியிருந்தார். அதோடு சபேஷன் பாடலை பாராட்டி நீங்கள் இன்னும் பெரிய பாடகராக மாறினாலும் இந்த பக்தி பாடலை விடாமல் பாட வேண்டும் உங்களுடைய குரலுக்கு பக்தி பாடல் அவ்வளவு அருமையாக இருக்கிறது என்று கூறி இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+