சரிகமப செந்தமிழனுக்கு கங்கை அமரன் கொடுத்த பெரிய வாய்ப்பு! காலிலே விழுந்துட்டாரே.. நெகிழ்ந்த அரங்கம்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீனியர் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் செந்தமிழனுக்கு இந்த வாரம் சிறப்பு விருந்தினராக வந்த கங்கை அமரன் பெரிய வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் கங்கை அமரன் ஸ்பெஷல் ரவுண்ட் நடைபெறுகிறது. அதில் கங்கை அமரனின் ஹிட்டான பல பாடல்கள் போட்டியாளர்கள் பாடுகின்றனர்.
ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் வரவேற்பு கிடைத்து வருகிறது. அழுகாச்சி சீரியலுக்கு மாற்றாக ரியாலிட்டி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக பலர் விருப்பப்படுகிறார்கள். சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை சோசியல் மீடியாவிலும் பலர் பார்த்து ரசித்து வருகிறார்கள். இதன் மூலமாகவே பலருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் சரிகமப போன்ற பாடல் நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றனர்.

அதிலும் சரிகமப நிகழ்ச்சி சீனியர் மற்றும் ஜூனியர் என்று இரண்டு பிரிவாக நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஜூனியர்களுக்கான சீசன் சமீபத்தில் தான் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து சீனியர்களுக்கான ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 28 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. சாமானிய மக்களின் திறமையை வெளி உலகத்துக்கு கொண்டு வந்து அவர்களின் வாழ்க்கையை மாற்றி அமைப்பதற்காக இந்த நிகழ்ச்சி முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
சரிகமப சீனியர் 5 நிகழ்ச்சியில் பல சாமானியர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவர் தான் செந்தமிழன். இவர் சோசியல் மீடியாவில் வீடியோ போட்டு பிரபலமானார். அதிலும் ஒர்க் ஷாப்பில் வேலை பார்க்கும் நேரத்திலும் சரி, ஃப்ரீ ஃப்ரீயாக இருக்கும் நேரத்திலும் சரி தனக்கு பிடித்த பாடல்களை பாடி அதை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
இவருக்கு சரிகமப நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்ததும் ஆரம்பத்திலேயே பலருடைய பாராட்டை பெற்று வந்தார். அதிலும் இந்த வாரத்தில் கங்கை அமரன் ஸ்பெஷல் ரவுண்டு நடைபெறுகிறது. அதில் கங்கை அமரனின் ஹிட்டான பல பாடல்களை போட்டியாளர்கள் பாடி இருக்கின்றனர். அந்த வகையில் "வாழ்வே மாயம்" திரைப்படத்தில் இடம்பெற்ற "நீல வான ஓடையில்" என்ற பாடலை செந்தமிழன் பாடியிருந்தார்.
அந்த பாடலைக் கேட்டு போன கங்கை அமரன் எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? வரும் செப்டம்பர் 5ஆம் தேதி எங்க மியூசிக் அகாடமி சார்பாக ஒரு நிகழ்ச்சி பண்ணுறோம் அதுல நீங்க வந்து பாடி தர முடியுமா? என்று கேட்க, இதை எதிர்பார்க்காத செந்தமிழன் சந்தோசத்தில் வாய் அடைத்துபோய் ஓடி சென்று கங்கை அமரன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி இருக்கிறார். இந்த க்யூட்டான மொமென்ட் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இதே போல செந்தமிழனுக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது பலருடைய வாழ்த்தாக இருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications