சரத்குமாரை கலாய்த்த சீமான்.. தக் லைஃப் பதில் கொடுத்த சுப்ரீம் ஸ்டார்.. பொறாமைக்கு காரணம் இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனராகவும், நடிகராகவும், அரசியல் பிரமுகராகவும் இருக்கும் சீமான் நடிகர் விமல் நடிக்கும் "பரமசிவன் பாத்திமா" என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் பற்றி பேசியிருந்தார். அப்போது நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் சரத்குமார் நடித்தது குறித்து தான் பேசியதற்கு சரத்குமார் கொடுத்த பதில் பற்றி சீமான் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல், அரசியல் ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் நடிகர் சீமான். இவர் பேசும் பேச்சு மக்கள் மத்தியில் அடிக்கடி அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதுபோல அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கிக் கொண்டிருக்கிறார். சினிமாவை விட்டு சில வருடங்களாக விலகி அரசியலில் முழுக்க கவனத்தை செலுத்தி வந்தார். ஆனால் இப்போது சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

Seeman Sarathkumar

இசை வெளியீட்டு விழா

சீமான் பேசும் பேச்சுகள் மற்றும் அரசியல் விழிப்புணர்வு கலந்த நகைச்சுவை பாடல்கள் கூட பல நேரங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பரமசிவன் பாத்திமா என்ற திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த திரைப்படத்தில் நடிகர் விமல் தான் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு நடிகர் கூல் சுரேஷ் பரமசிவன் வேடம் போட்டு வந்திருந்தது இணையத்தில் பலராலும் கலாய்க்கப்பட்டு வருகிறது.

சரத்குமாரிடம் சீமான் கேட்ட கேள்வி

அதே போல சீமான் சரத்குமார் பற்றி பேசியதும் பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதாவது சீமான் பேசும் போது, நான் நடிகர் சரத்குமார் அண்ணனுடன் நெருக்கமாக இருப்பேன். பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான சமயத்தில் நாங்கள் விமான நிலையத்தில் சந்தித்தோம். அப்போது நான் அண்ணனிடம் சிரித்துக்கொண்டே "இந்த வயசுல உனக்கு ஐஸ்வர்யா ராய் கூட ஜோடியாக நடிக்கணுமா?" என்று கிண்டல் ஆக கேட்டேன். அதற்கு சரத்குமார் "இதில் உனக்கு என்னடா பிரச்சனை? உனக்கு பொறாமையாடா?" என்று பதில் கொடுத்தார் என்று சிரித்தபடியே சீமான் பேசியிருந்தார்.

Seeman Sarathkumar

சீமானுக்கு சரத்குமார் பதில்

மேலும் சீமான் பேசும் போது, சரத்குமார் பற்றி எதற்காக சொல்லுகிறேன் என்றால் ஒருத்தருக்கு உடம்பு நல்லா இருந்தால் எந்த வயதிலும் நடிக்க முடியும். சரத்குமார் அண்ணா அதை நிரூபிச்சிட்டார். வயசு வந்தாலும் அந்த உற்சாகம் இருந்ததால் ரசிகர்கள் அவர்களை ஏற்றுக் கொள்வாங்க. விமல் இந்த படத்திற்காக அதிகமாக கஷ்டப்பட்டு இருக்கிறார். உடம்பில் கவனம் செலுத்தி இருக்கிறார். அவர் தொடர்ந்து இதுபோன்று படங்களில் நடிக்க வேண்டும் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை மெருகேற்றிக் கொண்டு இருக்க வேண்டும் என்று சீமான் அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.

கூல் சுரேஷ் பற்றி ஓபன்

அதேபோல அந்த நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் பற்றி சீமான் பேசும்போது, கூல் சுரேஷ் ரொம்ப நல்ல பையன் தான். ஆனா அடிக்கடி கோமாளித்தனமாக மனதில் பட்டதை எல்லாம் பேசி விடுவான். நான் பேசுவதையும் சிலர் கோமாளித்தனமாக இருக்கிறது என்று கிண்டல் செய்வார்கள். அதே போல தான் தம்பி கூல் சுரேஷ் பேசுவதையும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சீமான் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+