Sembaruthi Serial: அட...சந்திர தரிசனம் முடிஞ்சு பார்வதி நெத்திக்கு குங்குமம்!
சென்னை: ஆதி சந்திர தரிசனம் பார்த்துவிட்டு மித்ரா நெற்றியில் குங்குமம் வைக்கணும்னு அகிலாண்டேஸ்வரி சொல்ல ஆசைப்பட்டபடி பார்வதி நெத்திக்கு குங்குமம் வந்து சேருது.
ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியல் குடும்ப அமைப்பு ரொம்ப நல்லாருக்குதுன்னு ஏற்கனவே சொல்லி இருந்தோம்.
இப்போதும் அந்த குடும்ப அமைப்பின்படிதான் ஆதி, பார்வதியுடன் அறைக்குள் இருந்தும், அகிலாண்டேஸ்வரி அம்மாவிடம் இருந்து தப்பிக்கறான்.

தீபாவளி சமயத்தில்
இந்தியாவின் வட மாநிலங்களில் தீபாவளி சமயத்தில் சந்திர தரிசனம் செய்வது என்பது வழக்கம். அந்த வழக்கத்தை ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் கடைப்பிடித்து சீரியலை ஷூட் செய்து இருக்கிறார்கள். தீபாவளி அன்றோ அல்லது அடுத்த நாளோ அமாவாசை வந்துவிடும். எனவே அந்த மாதத்தின் எதோ ஒரு நாளில் சந்திர தரிசனம் பார்ப்பது அவர்களுடைய வழக்கம்.

சந்திர தரிசனம்
தம்பதி சகிதமாக நின்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் கணவன் கையில் ஆரத்தி தட்டை கொடுத்துவிட்டு மனைவி கற்பூரம் ஏத்த வேண்டும்.அதை இருவரும் ஜோடியாக நின்று சந்திரனை தரிசனை செய்து சந்திரனுக்கு இருவரும் ஜோடியாக கற்பூரம் காண்பித்து ஆரத்தி எடுக்க வேண்டும்.

அறைக்குள் சந்திரன்
இதனால்தான் அறைக்குள் பார்வதியை அழைத்துச் சென்று சந்திர தரிசனம் பார்க்கலாம் வான்னு பார்வதியை அழைத்துச் சென்று ஜன்னல் வழியாக சந்திர தரிசனம் பார்த்துக்கிட்டு இருக்கான். அப்போது ஆதி எங்கே ஆதி எங்கேன்னு தேடிகிட்டு ரூமுக்கே வந்துடறாங்க அகிலாண்டேஸ்வரி.

கதவுக்கு பின் பார்வதி
ஆதி கதவைத் திறந்து கதவுக்குப் பின்னால்; பார்வதியை நிற்க வைத்து விடுகிறான். அம்மா ஒரு அப்ராட் கால் வந்துச்சு. அதான் டிஸ்டப் இல்லாம பேசணும்னு ரூமுக்கு வந்தேன்னு ஆதி சொல்ல, வா ஆதி சந்திர தரிசனம் பார்க்க நேரமாச்சுன்னு மொட்டை மாடிக்கு கூப்பிடறாங்க. குடும்ப அமைப்பின் படி அவங்களுக்கு பிள்ளை மேல ரொம்ப மரியாதை.

வனஜா பார்த்து
ரூமுக்குள்ளேதானே பார்வதி வந்திருப்பா.. அவளை எங்கே ஒளிச்சு வச்சு இருப்பான்னு உள்ளே தேடிகிட்டு வருகிறாள் வனஜா.கதவுக்கு பின்னால் மறைந்து இருந்த பார்வதியைப் பார்த்து வாடீன்னு தர தரன்னு இழுத்துட்டு போயி வெளியே தள்ளி கதவை சாத்திடறாங்க.

வெறுப்பில் ஆதி
ஆதி வேண்டா வெறுப்பாக மித்ராவின் பக்கத்தில் நின்று, நிலவைப் பார்க்கிறான். கற்பூரம் உள்ள தட்டை மித்ரா ஆதியிடம் கொடுக்கும்போது, அசால்டாக வாங்க தட்டில் இருந்த கற்பூரம் கீழே விழுது. தட்டில் இருந்த கற்பூரத்தை ஏத்தி வைத்து சந்திரனுக்கு ஆரத்தி காண்பித்த பின்னர் கணவன் பொண்டாட்டியின் நெத்தியில் குங்குமம் வைக்க வேண்டும்.

கற்பூரம் பத்திக்கிச்சு
கீழே விழுந்த கற்பூரம் தீப்பத்தி மித்ராவின் பாதத்தை பதம் பார்க்க, ஆ என்று அலறிய மித்ரா, தட்டை தூக்கி எறிந்துவிடுகிறாள். அதில் இருந்த குங்குமம் வெற்றிலையோடு சேர்த்து வெளியில் பார்வதி உட்கார்ந்து இருந்த கம்பி கூரையின் மேல் விழுந்து விடுகிறது.பார்வதி அருகில் இருந்த தண்ணீர் பாத்திரத்தில் ஆதியின் முகம் தெரிய பின்னர் மேலேபார்த்தால் சந்திர தரிசனம்.
ஆச்சரியமாக கம்பிகளின் கூரைக்கு இடையே மாட்டிக்கிட்ட வெற்றிலையில் இருந்த குங்குமம் சரிந்து பார்வதியின் நெற்றியில் விழுகிறது. இங்கு மித்ரா கண்ணில் குங்குமம் விழுந்து அலறிக்கொண்டு இருக்கிறாள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications