எனக்கு நடந்தது யாருக்கும் நடக்க கூடாது.. ஒரே போன் காலில் முடிச்சுட்டாங்க.. நந்தா மாஸ்டர் எமோஷனல்
சென்னை: டான்ஸ் மாஸ்டர் நந்தா தான் எதனால் கண்ணே கலைமானே சீரியலில் இருந்து திடீரென்று விலகினேன் என்பது பற்றி பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அதோடு சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு ஏற்பட்ட வலி வேதனைகள் குறித்தும் அந்த பேட்டியில் பேசி இருக்கிறார். எப்போதும் சிரித்த முகமாக இருக்கும் நந்தா மாஸ்டருக்குள் இதனை வேதனைகள் இருக்கிறதா? என்று பலர் பீல் பண்ணி வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல் தனக்கு நடந்த மாதிரி யாருக்கும் வாழ்க்கையில் நடந்து விடக்கூடாது என்று நந்தா மாஸ்டர் உடைந்து போய் பேசி இருக்கும் நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் டான்ஸ் மாஸ்டராக நந்தாவை பலருக்கும் பரீட்சையமானவர்தான். அதோடு அவர் பல சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் ஜீ தமிழில் கோகுலத்தில் சீதை என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு விஜய் டிவியில் கண்ணே கலைமானே சீரியலில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
சீரியல் தொடங்கி ஒரு சில மாதங்களில் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இவர் திடீரென்று இந்த சீரியலில் இருந்து தான் விலகி விட்டதாக கூறியிருந்தார். அதை தொடர்ந்து ஒரு வாரமாக இவருடைய எபிசோடு ஒளிபரப்பாகி வந்த நிலையில் இப்போது அவர் நடித்த கேரக்டரில் வேற நடிகர் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சில மாதங்கள் கழித்து நந்தா இப்போது ஜீ தமிழில் நளதமயந்தி என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் எதனால் கண்ணே கலைமானே சீரியலில் இருந்து விலகினேன் என்பது பற்றி கூறியிருக்கிறார். அந்த வகையில் ஒரு நாள் சூட்டிங்கு அவசரமாக கூப்பிட்டார்கள். அதுவும் நாளை காலையிலேயே உங்களுக்கு சண்டைக் காட்சிகள் இருக்கிறது என்று கூறினார்கள்.
நானும் ஏற்கனவே டான்ஸ் மாஸ்டராக இருப்பதால் நமக்கு பெரிய அளவில் சண்டைக்கு கஷ்டம் கிடையாது. ஆனாலும் என்ன திடீர்னு இவ்வளவு அவசரமா சண்டைக்காட்சிகள் என்று கேட்டேன். அதற்கு கதை எப்படித்தான் இருக்கிறது என்று கூறினார்கள். சரி என்று நானும் நடித்தேன் அப்போது நான் அடிபடுவது போன்ற காட்சிகள் இருந்தது. அதில் நிஜத்திலே என்னுடைய கால்களில் பலத்த அடிபட்டுவிட்டது.
நான் கால் வலியில் துடித்தேன் அப்போது கொஞ்ச நேரம் ரெஸ்ட் கொடுத்துவிட்டு மீண்டும் நடிக்க கூப்பிட்டார்கள். என்னால் திருப்பி நடிக்க முடியவில்லை கொஞ்ச நேரத்திற்கு மேலே எனக்கு மூச்சுக் கூட விட முடியாமல் வலியில் எனக்கு பல்ஸ் எல்லாம் குறைந்துவிட்டது. உடனே ஹாஸ்பிடலுக்கு போக வேண்டும் என்று நான் கூறினேன்.
ஹாஸ்பிடலுக்கு போனதும் டாக்டர்ஸ் கண்டிப்பாக சொல்லிவிட்டார்கள் நீங்கள் ரெஸ்ட் எடுத்து ஆக வேண்டும் என்று,கால் பிராக்சர் ஆகி இருக்கிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு பிறகு சீரியல் தரப்பில் இருந்து எனக்கு சரி என்று ரெஸ்ட் கொடுத்து இருந்தனர். சில நாட்கள் கழித்து நான் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று அப்பாயின்மென்ட் எல்லாம் வாங்கி இருந்தேன்.
அப்போது கால் பண்ணி நாளை உங்களுக்கு சூட்டிங் இருக்கிறது என்று கூறினார்கள். அதை நேற்றே சொல்லி இருக்கலாமே, நான் நாளை மறுநாள் ஆப்ரேஷன் ஃபிக்ஸ் பண்ணி இருக்கிறேன் என்று சொன்னேன். அது சேனல் தரப்பில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிறகு வேறு வழியில்லாமல் தான் நான் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக கூறினேன். என்னுடைய நிலைமையை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

அவர்கள் முடிவு அவர்களுக்கு சரியாக இருந்திருக்கும் ஆனால் ஒரு நடிகராக என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிறகு எனக்கு ஆபரேஷன் நடைபெற்றது. அந்த வேதனையில் நான் இருந்தேன் ஆனால் எனக்கு அடிபட்டது சூட்டிங் நடக்கும் போது தான், அது பற்றி யாருமே ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. கடைசியாக அவர்கள் நாளைக்கு சூட்டிங் வாருங்கள் என்று எனக்கு ஒரு போன் செய்து பேசியது தான்.
அதோடு என்னுடைய காட்சிகள் ஒரு வாரத்திற்கு ஒளிபரப்பானது. ஆனால் இதை அவர்கள் சொல்லி இருந்தால் நான் பொறுமையாக நடித்துக் கொடுத்திருப்பேன். எதற்காக அப்படி செய்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் வலி வேதனையில் துடித்துக் கொண்டிருந்த போதும் அதைப்பற்றி விசாரிக்கவில்லை.
அதற்கான பேக்கப் எதுவுமே செய்யவில்லை. ஆனால் சீரியலில் இருந்து நான் விலகியதும் ரொம்பவே வருத்தப்பட்டேன். பல பேர் என்னிடம் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அது எனக்கு கஷ்டமாக இருந்தது என்று அந்த பேட்டியில் கண்கலங்கி எமோஷனலாக நடிகர் நந்தா மாஸ்டர் பேசியிருக்கிறார்.
-
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications