நேத்ரன் செய்த பெரிய தவறு இதுதான்.. புற்றுநோய் மட்டுமல்ல.. உதவிக்கு யாரும் இல்லாம.. கதறி அழுத நடிகை தீபா
சென்னை: சீரியல் நடிகர் நேத்ரன் புற்றுநோய் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு காலமானார். அவருடைய மறைவுக்குப் பிறகு அவருடைய மனைவி தீபா தன்னுடைய கணவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி கண் கலங்க பேசி இருக்கிறார்.
திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பல சீரியல்களில் குணசித்திர வேடங்களிலும் வில்லனாகவும் நடித்து வந்த நடிகர் நேத்ரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலமானார். நேத்ரனின் மனைவி தீபாவும் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலில் கதாநாயகனின் அம்மாவாகவும், அதுபோல ஜீ தமிழில் மாரி சீரியல், விஜய் டிவி என முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் நேத்ரன், தீபா தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அதில் மூத்த மகள் அபிநயா நேத்ரனோடு டான்ஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவியில் கலந்து கொண்டிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் கனா காணும் காலங்கள் வெப்சீரிஷிலும் முதல் பாகத்தில் அபிநயா நடித்து இருந்தார். இந்த நிலையில் ரசிகர் நேத்ரனின் மறைவு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது. வொர்க் அவுட் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்த நேத்ரன் கடைசி காலகட்டத்தில் உடல் எடை குறைந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டாராம்.

அதுவும் 36 கிலோ எடைக்கு வந்து இருந்த நேத்ரன் அவருடைய நெருங்கிய நண்பர்களை கூட கடைசி நேரத்தில் பார்க்கவில்லை. மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி தன்னுடைய நண்பர்களை சந்திக்கலாம் என்று நம்பிக்கையோடு இருந்த நேத்ரனின் ஆசை கடைசியில் ஏமாற்றம் அடைந்து விட்டது.
நேத்ரனின் மறைவுக்குப் பிறகு அவருடைய மனைவி பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் தன்னுடைய கணவர் செய்த பெரிய தவறு என்ன என்பது குறித்து கண்கலங்க கூறியிருக்கிறார். அதாவது நேத்ரனுக்கு ஏற்கனவே இதயத்தில் சின்னதாக பிரச்சனை இருந்ததாம். அப்போது ஹோமியோபதி மருந்து எடுத்து அது குணமாகி இருக்கிறது.
அப்பா இறந்து ஒரு வாரத்தில் நடந்த சம்பவம்.. இப்படி கூட நடக்குமா? நேத்ரன் மகள் நறுக்குன்னு கேட்ட கேள்வி
அதனால் நேத்ரனுக்கு கோமியோபதி மருத்துவம் மீது அதிகமான நம்பிக்கை இருந்திருக்கிறது. அதே நேரத்தில் நேத்ரனுக்கு ஆரம்பத்தில் வயிறு வலி பிரச்சனை வரும்போது அது வாய்வு பிரச்சனையாக இருக்கும் என்று அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் நான்கு வருடங்களாக அந்த வலி இருந்திருக்கிறது.
ஒரு கட்டத்தில் அவரால் வயிறு வலி தாங்க முடியாத அளவிற்கு ஆன பிறகு குடும்பத்தினரின் வற்புறுத்தலினால் கடந்த வருடத்தில் பிப்ரவரி மாதம் வாக்கில் தான் ஸ்கேன் எடுத்து பார்த்திருக்கிறார். அப்போதுதான் அவருக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டது தெரிந்திருக்கிறது.
அந்த நேரத்தில் தங்களுக்கு சரியான வசதி வாய்ப்பு இல்லாததால் அரசு மருத்துவமனைக்கு போகலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள். அங்கு போன பிறகு நான்கு மாதங்களாக நேத்ரனுக்கு சிகிச்சை நடந்து இருக்கிறது. அப்போது அவருக்கு வயிற்றில் ஆபரேஷன் செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த தையல் பிரிந்து வயிற்றில் இருந்து திரவம் வெளியே வர தொடங்கி இருக்கிறது.

அதனால் அவருக்கு ஹீமோ சிகிச்சை செய்ய முடியாமல் போய்விட்டதாம். ஆரம்பத்திலேயே வயிறு வலி பிரச்சனை வரும்போது அதற்கு ஸ்கேன் எடுத்து பார்த்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்று தீபா கண்கலங்கி அழுது இருக்கிறார்.
தான் காதலித்து திருமணம் செய்த கணவரின் திடீர் இழப்பு அவரை நிலை குலைய செய்து இருக்கிறது. ஆனாலும் தன்னுடைய இரண்டு மகள்களின் எதிர்காலத்திற்காக அவர் தைரியமாக தன்னுடைய வேலைகளை தொடங்கி இருக்கிறார். அவருடைய தைரியத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications