சீரியல் நடிகரோடு மணக்கோலத்தில் நடிகை மகாலட்சுமி புகைப்படம்.. அப்போ ரவீந்தர்? விஷயம் இதுதானா?
சென்னை: சீரியல் நடிகையான மகாலட்சுமி இரண்டு வருடங்களுக்கு முன்பு நடிகர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இன்று அவருடைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சீரியல் நடிகரோடு மணக்கோலத்தில் மகாலட்சுமி இருக்கிறார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இணையத்தை ஆக்கிரமித்த செய்திகளில் ஒன்றுதான் சீரியல் நடிகை மகாலட்சுமியின் திருமண செய்தி. நடிகை மகாலட்சுமி ஆரம்பத்தில் தொகுப்பாளராக சின்னத்திரையில் அறிமுகம் ஆகி அதற்குப் பிறகு சீரியல்களில் கதாநாயகி ஆகவும், வில்லியாகவும் நடித்து வந்தார்.

ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்பு திடீரென்று தயாரிப்பாளரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் விமர்சகருமான ரவீந்திரோடு கல்யாண கோலத்தில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார். இருவரும் திருமணம் செய்து இருந்ததை அறிவித்ததும் அதிகமான ரசிகர்கள் நம்ப வில்லை. உடலளவில் ரவீந்தர் மகாலட்சுமிக்கு பொருத்தமாக இல்லை என்று பலர் கருத்து வெளியிட்டு வந்தனர்.

ஆனாலும் மகாலட்சுமி தான் இரண்டு வருடங்களாக காதலித்து ரவீந்தரை திருமணம் செய்திருக்கிறேன் என்று அறிவித்தபோது அதிர்ச்சியாக ரசிகர்கள் இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அதிகமான ரசிகர்கள் பீல் பண்ணி வந்தனர். அதோடு 90ஸ் கிட்ஸ் பலரும் நமக்கும் காலம் வரும் என்று கமெண்ட் கொடுத்து வந்ததையும் பார்க்க முடிந்தது.

மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவருக்குமே இரண்டாவது திருமணம் தான். இதுபோல இருவருக்கும் சில வருடங்கள் தான் வயது வித்தியாசம். ஆனால் உருவத்தை வைத்து இந்த தம்பதி திருமணம் செய்த போது அதிகமான உருவக்கேலி வந்தது. ஆனால் அதை எல்லாம் மகாலட்சுமியும் ரவீந்தரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தங்களை இத்தனை பேர் கவனிக்கிறார்கள் என்று ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர்.

இப்போ வரைக்கும் இவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவே போய்க்கொண்டிருப்பதாக இணையத்தில் பதிவுகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ரவீந்தர் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அதுபோல முதல் போட்டியளராக எவிக்ஷன் ஆகி இருந்தார். அதற்குப் பிறகு ரீஎண்ட்ரி கொடுத்தபோது முத்துக்குமரனுக்கு சப்போர்ட் செய்து மீதமுள்ள போட்டியாளர்களின் மனநிலையை குலைக்கும் வகையில் பேசிக் கொண்டிருக்கிறார் என்று நெகட்டிவ் கமண்ட்டுகளும் வந்தது.

இந்த பஞ்சாயத்துக்கு மத்தியில் தற்போது மகாலட்சுமியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சீரியல் நடிகர் ஒருவரோடு மகாலட்சுமி மணக்கோலத்தில் இருக்கிறார். இதை பார்த்ததும் மகாலட்சுமி ரவீந்தரை பிரிந்து விட்டாரா? சீரியல் நடிகரை மூன்றாவதாக திருமணம் செய்து இருக்கிறாரா? என்றெல்லாம் கேள்விகள் எழுப்பி வருகிறார்கள்.

ஏற்கனவே மகாலட்சுமிக்கு முதல் திருமணம் முடிந்து ஒரு ஆண் குழந்தை இருக்கிறார். முதல் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத்தான் முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு சில வருடங்கள் மகாலட்சுமி தன்னுடைய குழந்தையை தனியாக வளர்த்து வந்தார். அதற்கு பிறகு தான் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்திருந்தார்.

இந்த நிலையில் இப்போது சீரியல் நடிகரோடு மகாலட்சுமியை பார்த்ததும் இணையத்தில் அதிகமான கமெண்டுகள் குவிக்கிறது. ஆனால் உண்மையில் அந்த புகைப்படம் மகாலட்சுமி நடிக்கும் "தாயம்மா" சீரியலுக்காக எடுக்கப்பட்டது. இது தெரியாத ரசிகர்கள் அப்போ ரவீந்தருடைய நிலைமை என்ன? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதுகுறித்து மகாலட்சுமியோ அல்லது ரவீந்திரோ விளக்கம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.













Click it and Unblock the Notifications