24 மணி நேரமும் அது வேணும்.. ஃபர்ஸ்ட் நைட்ல அசிஸ்டன்ட் வச்சி தப்பா..!? நடிகை சம்யுக்தா வருத்தம்
சென்னை: திருமணத்தின் போது கூட விஷ்ணுகாந்த் குடும்பத்தினர் என்னுடைய ஃபர்ஸ்ட் நைட்டில் அசிஸ்டன்ட்டை சேர்த்து வைத்து தப்பாக பேசினார்கள் என்று சம்யுக்தா குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.
தன்னுடைய அப்பா வருவது தனக்கு டிஸ்டர்பன்ஸாக இருக்கிறது என்று விஷ்ணுகாந்த் கூறிய கருத்துக்கு சம்யுக்தா பதிலடி கொடுத்திருக்கிறார்.

விஜய் டிவியில் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் சிற்பிக்குள் முத்து எனும் சீரியலின் போது காதலித்து திருமணம் செய்து கொண்ட விஷ்ணுகாந்த் மற்றும் சமியுத்தா ஜோடி சமூக வலைதளத்தில் தங்களுடைய குடும்பப் பிரச்சனையை குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர்.
கடந்த மார்ச் மாதத்தில் திருமணம் முடிந்த இந்த தம்பதியினர் சில மாதங்களுக்குள் கருத்து வேறுபாடால் பிரிந்து இருக்கின்றனர். இந்த நிலையில் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றசாட்டுகளை வைத்து வருகின்றனர். அந்த வகையில் 15 நாட்கள் மட்டும்தான் நாங்கள் ஒன்றாக வாழ்ந்தோம். அதற்குள் எங்கள் வாழ்க்கைக்குள் சமியுக்தாவின் அப்பா வந்ததால் தான் பிரச்சனை வந்தது என்று மேலும் பல காரணங்களையும் விஷ்ணுகாந்த் தெரிவித்திருந்தார்.
அதுபோல விஷ்ணுகாந்த் தனியார் youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்ததை தொடர்ந்து அவர் சொன்னது எல்லாம் பொய் இதுதான் நடந்தது என்று இன்ஸ்டாகிராம் லைவில் சம்யுக்தா விஷ்ணுகாந்த் பேசிய வார்த்தைகளை எல்லாம் நோட்டில் நோட்ஸ் எடுத்து வைத்து அது ஒவ்வொன்றிற்காக பதிலடி கொடுத்திருக்கிறார்.
அதில் எனக்கும் விஷ்ணுகாந்த்க்கும் பத்து வருடம் வயது வித்தியாசம் இருக்கிறது. எனக்கு 22 வயது தான் ஆகிறது. இப்போது திருமணம் வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னோம். அது மட்டும் இல்லாமல் எங்க அம்மா கூட சொன்னாங்க, ஆனால் நான் சமியுக்தாவை ரொம்ப லவ் பண்றேன். அவளை நல்லா பாத்துக்குவேன் என்று எங்க அம்மாவை நம்ப வைத்து என்னை விஷ்ணுகாந்த் திருமணம் செய்து கொண்டார்.
சிப்பிக்குள் முத்து சீரியலில் நான் பார்த்த விஷ்ணுகாந்த் இப்போது இல்லை. அந்த சீரியலில் நடிக்கும் போது நான் பார்த்த விஷ்ணுகாந்த் ரொம்பவே நல்லவராகவும் பொறுப்பானவராகவும் இருந்தார். அந்த கேரக்டரை தான் நான் காதலித்தேன். ஆனால் திருமணத்திற்கு முன்பே எங்களுக்குள் ஒரு சில பிரச்சனைகள் வந்தது திருமணத்திற்கு புடவை வாங்குவது லெட்டர் அடிப்பது போன்ற விஷயத்தில் வந்த பிரச்சனைகளால் திருமணத்துக்கு முதல் வாரம் விஷ்ணுகாந்த் ஃபோனை எடுக்காமல் தவித்துவிட்டார்.
பிறகு போலீஸ் ஸ்டேஷன் சென்று கம்ப்ளைன்ட் கொடுத்து அதற்குப் பிறகுதான் விஷ்ணுகாந்த் ஃபோனை எடுத்து எங்களுக்கு திருமணம் நடந்தது. அவ்வளவு போராடி நான் அவரை திருமணம் செய்தேன். ஆனால் திருமணத்திற்கு பிறகு எங்க அப்பா வீட்டுக்கு வருவதால் தான் எங்களுக்கு பிரச்சனை என்று பேட்டியில் கூறி இருக்கிறார். அவருக்கு 24 மணி நேரமும் ரொமான்ஸ் வேணும். அவர் அப்படியே இருப்பதால் எங்க அப்பா வருவதால் அவருக்கு டிஸ்டர்பன்ஸாக இருக்கிறதா? என்று கேட்டிருக்கிறார்.

அதோடு எங்கள் திருமணத்தின் போது என்னுடைய அசிஸ்டன்ட் அண்ணா வந்திருந்தார். அவர் கஷ்டப்பட்டு தான் இந்த திருமணத்திற்கு வந்தார். ஆனால் வந்த இடத்தில் அவரை விஷ்ணுகாந்த் குடும்பத்தினர் அவமானப்படுத்தி இருக்கிறார்கள். அவர் நான் இங்கிருந்து போகிறேன் என்று சொன்னார். என்ன ஆச்சு என கேட்பதற்கு அங்கிருக்கும் ஒரு நபர்கள் இவர் யார் என்று கேட்டார்களாம். அப்போது ஒரு நபர் இவர் சமியுக்தா கூடவே இருப்பவராம் என்று கூறினாராம். அப்போ ஃபர்ஸ்ட் நைட்டிலும் அப்படியே கூடவே போயிடப் போறான் பார்த்து என்று சொல்லி சிரித்திருக்கிறார்கள்.
நான் எல்லாமே விஷ்ணுகாந்துக்காக தான் சகிச்சுக்கிட்டு வாழ்ந்தேன். ஆனால் நான் நினைச்ச மாதிரி அவர்தான் இல்லை ஒவ்வொருமுறை சண்டை வரும்போதும் நான் தான் கெஞ்சி அவரிடம் மன்னிப்பு கேட்டு அழ வேண்டும். பிறகு தான் அவர் பேசுவார். நான் இடுப்பு தெரிகிற மாதிரி புடவை கட்டவே மாட்டேன். ஆனாலும் ஒருமுறை டான்ஸ் ஆடி வீடியோ போடும்போது கூட இடுப்பு தெரிஞ்ச இருக்கிறது. பிறகு வீடியோவை அந்த வீடியோவை நானே டெலிட் செய்து விட்டேன். அப்படிப்பட்ட பெண்ணை என்னை அந்த டிரஸ் போடாத இந்த டிரஸ் போடாதே என்று கட்டாயப்படுத்துகிறார்கள் என்று அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications