செவ்வந்தி, வாணி ராணி சீரியல் இயக்குனர் ரத்தினம் மனைவி தற்கொலை.. திடுக்கிடும் காரணம்..?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் இயக்குனர் ஓஎன் ரத்தினம் மனைவி இன்று திடீரென தற்கொலை செய்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இயக்குனர் ரத்னம் மற்றும் அவருடைய மனைவி காதலித்து திருமணம் செய்திருந்தார்களாம்.
இந்த நிலையில் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் பரவி வருகிறது.

சன் டிவியில் பல ஹிட்டான சீரியல்களின் இயக்குனரான ஓஎன் ரத்தினம் மனைவி இன்று சென்னையில் தற்கொலை செய்து கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் ரத்தினம் அழகு, வாணி ராணி, செவ்வந்தி, பிரியமான தோழி, பாண்டவர் இல்லம் என பல ஹிட்டான சீரியல்களை இயக்கியவர் தான்.
இயக்குனர் ரத்தினத்தின் மனைவி பெயர் பிரியாவாம். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்களாம். ஓஎன் ரத்தினத்தின் சொந்த ஊர் பொள்ளாச்சி தானாம். இவரது மனைவியும் அதே ஊர் தானாம். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார்களாம். திருமணம் ஆகி சுமார் 10 ஆண்டுகள் தான் ஆகி இருக்கிறதாம்.
இந்த நிலையில் தற்போது பள்ளி விடுமுறை என்பதால் பிள்ளைகள் இருவரும் தாத்தா வீட்டிற்கு பொள்ளாச்சிக்கு செஞ்சிருந்தார்களாம். அதே நேரத்தில் ரத்தினமும் அவருடைய மனைவியும் மட்டும்தான் சென்னையில் உள்ள வீட்டில் இருந்தார்களாம். இந்த நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி இருவருக்கும் இடையே சின்ன வாக்குவாதம் நடை பெற்றது என்று சிலர் கூறுகின்றனர்.
விடுமுறைக்கு தாத்தா வீட்டிலிருந்த மகன்கள் இன்று அதிகாலையில் தான் சென்னை திரும்பி இருக்கிறார்கள். அவர்களை கூப்பிட்டு வர ரத்தினம் இன்று அதிகாலை பேருந்து நிலையத்துக்கு சென்ற நேரத்தில் தான் பிரியா வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. தற்போது பிரியாவின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் ரத்தினமும் அவருடைய மனைவியும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்றும் பிரியா வீட்டில் கல்யாணத்துக்கு எதிர்ப்பு கிளம்பிய போது இவரை கல்யாணம் செய்ய முடியலன்னா தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி அடம்பிடித்து இருந்தார் என்றும் அதனால் ஒரு கட்டத்தில் இரண்டு வீட்டிலும் சம்மதம் சொல்லி இருவருக்கும் திருமணம் நடந்தது என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் இவ்வளவு போராடி திருமணம் செய்த நிலையில் இப்படி ஒரு நிலைமையா? என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications