பயில்வான் கடைசி பொண்ணு மீது பகீர் குற்றச்சாட்டு வைத்த ஷகிலா.. இது என்ன புது பிரச்சனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் வாழ்ந்து காட்டுவோம் என்ற நிகழ்ச்சியில் பயில்வான் ரங்கநாதனிடம் பொதுமக்கள் கேள்வி கேட்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷகிலா பயில்வான் ரங்கநாதனின் கடைசி மகள் குறித்து கேட்ட கேள்விக்கு பயில்வான் பயங்கரமாக கோபப்பட்டு இருக்கிறார்.

பயில்வான் ரங்கநாதன் பல நடிகை நடிகர்கள் பற்றி தவறாக பேசி வருகிறார் என்று குற்றச்சாட்டு இருந்து வருகிறது. நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை வீடியோவில் பேசி வரும் பயில்வானுக்கு எதிராக பலர் கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Shakila question to Bailwan Ranganathan s last daughter love

இந்த நிலையில் கலைஞர் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட வாழ்ந்து காட்டுவோம் என்ற நிகழ்ச்சியில் பயில்வான் ரங்கநாதன் கலந்து கொண்டிருக்கிறார். வாழ்ந்து காட்டுவோம் என்ற நிகழ்ச்சி ஜீ தமிழில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை போன்று இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகை குயிலி தொகுத்து வழங்குகிறார்.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பயில்வானிடம் பொதுமக்கள் சார்பாக கலந்து கொண்ட இரண்டு பெண்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தனர். அப்போது ஷகீலாவும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயில்வானிடம் கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு ஆரம்பத்தில் பேசிய பயில்வான் ஷகீலா எப்படிப்பட்ட படத்தில் எல்லாம் நடிச்சாங்க என்று உலகத்திற்கு தெரியும்.

ஆனால் இப்போ அவங்க பிரபலங்களை பேட்டி எடுத்துக் கொண்டு இருப்பது சரியா? என்று சிலர் கேள்வி கேட்கிறார்களே அதற்கு உங்களுடைய பதில் என்ன என்று பயில்வான் கேள்வி கேட்க, அதற்கு ஷகிலா அது என்னுடைய வயிற்று பிழைப்புக்காக நான் செய்த வேலை அவ்வளவுதான். இப்போது நான் பிரபலங்களை பேட்டி எடுத்துக் கொண்டிருப்பதும் வேலை தான். பணத்திற்காக தானே எல்லோரும் வேலை பார்க்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார்.

அதோடு பயில்வானிடம் நீங்கள் எப்படி நடிகைகளை பற்றி தப்பு தப்பா பேசலாம் என்று சொல்ல, அதற்கு பயில்வான் நீங்க எப்படி உங்க வயிற்று பிழைப்புக்காக வேலை பார்க்கிறிங்களோ அப்படித்தான் நான் என்னுடைய வயிற்று பிழைப்புக்காக வேலை பார்க்கிறேன். நான் எந்த நடிகைகளை பற்றியும் தவறாக பேசவில்லை. அவர்கள் பேட்டிகளில் பேசியதை தான் நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்க,

அதற்கு ஷகிலா அப்போ உங்களுக்கு எல்லாமே தெரியும். அப்படித்தானே? அப்படி என்றால் உங்க கடைசி பொண்ணு யாரை லவ் பண்றாங்க? என்று கேட்க, அதற்கு பயில்வான் பதில் சொல்ல முடியாமல் இருக்கிறார். அதற்கு ஷகிலா நான் யாரென்று சொல்லவா என்று கேட்டுக்கொண்டு இவரோட கடைசி பொண்ணு இன்னொரு பொண்ணை லவ் பண்றாங்க என்று சொன்னதும் பயில்வான் உங்க நாக்கு அழுகிரும்.

என் பொண்ண பத்தி தப்பு தப்பா பேசாதீங்க என்று கோபப்படுகிறார். அதற்கு ஷகிலா உங்க பொண்ண பத்தி பேசினா மட்டும் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறதே இப்படித்தானே நடிகைகள் பற்றி நீங்கள் கண்டமேனிக்கு பேசிக் கொண்டிருக்கிறீங்க. அவங்கள பெத்தவங்களோட மனசும் பதறும்.

உங்க பொண்ணு இன்னொரு பொண்ணு கிட்ட உங்க வீட்டு வாசலில் வைத்து பேசிக்கொண்டு இருந்ததை இன்னொருதங்க கேட்டு இருக்காங்க. அவங்க தான் எனக்கு சொன்னாங்க. உங்க பொண்ணு அந்த பொண்ணை லவ் பண்ணுறேன்னு பேசிக்கொண்டு இருந்தாங்களாம் என்று சொல்ல பயில்வான் எதுவும் பேசாமல் அதிர்ச்சியில் இருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+