விஜய்க்கு அப்பா மேல தனி பாசம் இருக்கு! ஆனால், அவர் நிலைமை இதுதான்! விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் உருக்கம்
சென்னை: நடிகர் விஜயகாந்தின் இரண்டாவது மகனான சண்முக பாண்டியன் "படைத்தலைவன்" என்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் குறித்து சண்முக பாண்டியன் வெளிப்படையாக பேசியிருக்கிறார். விஜய்யிடம் தான் எதற்காக ஆடியோ பங்க்ஷனுக்கு வர சொல்லி கேட்கவில்லை என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
பொதுவாக இன்று புகழின் உச்சத்தில் இருக்கும் பலருக்கும் ஆரம்பகாலம் அவ்வளவு எளிமையாக இருந்திருக்காது. ஆரம்பத்தில் பல்வேறு கஷ்டங்களையும், அவமானங்களையும் தாண்டித்தான் இன்று பலர் தங்களுடைய உழைப்பால் உயர்ந்திருக்கிறார்கள். அதுபோல ஒருவர் தான் நடிகர் விஜய். விஜயின் உடைய அப்பா இயக்குனராக இருந்தாலும் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் பல்வேறு அவமானங்களையும் சந்தித்து இருக்கிறார். கருப்பு நிறம், ஒல்லியான தேகம் என்று உருவ கேலி அதிகமாக சந்தித்திருந்தாலும் அதையெல்லாம் தாண்டி இன்று தளபதியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

விஜய்க்கு உதவி
விஜய் உடைய வாழ்க்கையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியவர்களில் நடிகர் விஜயகாந்துக்கும் முக்கிய பங்கு உண்டு. இதை பல இடங்களில் விஜய்யும் அவருடைய அப்பாவும் பேசியிருக்கிறார்கள். விஜய் நடித்த செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக கேமியா கேரக்டரில் விஜயகாந்த் நடித்து விஜய்க்கு பிரபலத்தை கொடுத்திருந்தார்.
அண்ணன் தம்பி
அந்த நேரத்தில் விஜயகாந்த்தையும், விஜயையும் அண்ணன் தம்பிகள் என்று எண்ணியவர்கள் ஏராளம். காரணம் விஜயகாந்த் விஜய் என்ற பெயர் பொருத்தமும் ஒன்று. அதே போல இருவரும் கருப்பு நிறத்தில் இருப்பதாலும் இருவரையும் அண்ணன் தம்பியாகவே ரசிகர்களும் ஏற்றுக் கொண்டனர். அந்த நேரத்தில் விஜயகாந்த் புகழின் உச்சத்தில் இருந்தார். விஜயகாந்த்க்கு ஒரு நடிகர் தம்பியாக நடிக்கிறார் என்றதும் உண்மையாகவே அவருடைய தம்பி என்று மக்கள் ஏற்றுக்கொள்ள தொடங்கிவிட்டனர்.
சண்முக பாண்டியன் பேட்டி
அதற்குப் பிறகு விஜய் தன்னுடைய உழைப்பால் இன்று உயர்ந்து இருந்தாலும் விஜயகாந்த் மீது விஜய்க்கு எப்போதுமே தனி மரியாதையும் மதிப்பு உண்டு என்று விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். அதில் சண்முக பாண்டியன் பேசுகையில், விஜய் சாருக்கு அப்பா மீது எப்போதுமே தனி பாசம் இருக்கு. ஆனால் படைத்தவன் படத்தின் ஆடியோ லாஞ்சுக்காக நான் அண்ணனிடம் போய் பேசவில்லை. கூப்பிட்டா கண்டிப்பா வருவாரு. அவருடைய பிஸி ஷெட்யூல் நமக்கு தெரியுது, அதாவது இப்போ அவர் பாலிடிக்ஸில் இறங்கி இருக்கிறார். படமும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
வதந்திகளுக்கு விளக்கம்
இந்த சூழ்நிலையில் போய் நமக்காக அடுத்தவங்கள டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு எனக்கு தோணிச்சு. அதனால நான் கூப்பிடல. ஒருவேளை டைரக்டர் சார் கூப்பிட்டு இருந்தா... விஜய் அண்ணன் வந்து இருந்தால்... எனக்கு சந்தோசம். நான் அண்ணனிடம் உதவி கேட்டு பேசல என்று சண்முக பாண்டியன் விளக்கம் கொடுத்திருக்கிறார். சண்முக பாண்டியனின் படைத்தலைவன் இசை வெளியீட்டு விழாவில் விஜய் கலந்திருக்கலாமே என்று பல்வேறு கேள்விகள் கிளம்பி வந்த நிலையில் அதற்கு சண்முக பாண்டியன் இப்போது விளக்கம் கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications