ஏற்கனவே குழந்தை இருக்கு! தெரிஞ்சு ஷாரிக் கல்யாணம்.. ஆனால் ரியாஸ் கானும், மனைவியும்! மருமகள் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரியாஸ்கானின் மகனும் நடிகருமான ஷாரிக் சமீபத்தில் தான் ஜெனிபர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதி முதல் முறையாக சில youtube சேனல்களில் பேட்டி கொடுத்து இருக்கின்றனர். அதில் ஷாரிக் மனைவி ஏற்கனவே தனக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருந்தது அது தெரிந்தும் தான் ஷாரிக் திருமணம் செய்து கொண்டார் என்றும் ரியாஸ்கான் மற்றும் அவருடைய மனைவியைப் பற்றியும் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு ரியாஸ்கான் பெயர் இணையத்தில் அதிகமாக அடிபட்டது. அவருடைய மகனின் திடீர் திருமண அறிவிப்பு பலரையும் வியக்க வைத்திருந்தது. ரியாஸ் கான் உமா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். உமாரியாஸ் கானும் சில திரைப்படங்களிலும் சீரியலிலும் நடித்திருக்கிறார்.

television shariq

அதுபோல இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அதில் மூத்தவர் ஷாரிக். இவர் பிக் பாஸ் தமிழ் சீசன் 2ல் கலந்துகொண்டு ஒரு சில வாரங்களில் வெளியே வந்திருந்தார். அதற்கு பிறகு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அனிதா சம்பத்தோடு சேர்ந்து பிக் பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருந்தார்.

television shariq

அதேபோல ஷாரிக் பென்சில் உட்பட ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார். இவர் மரிய ஜெனிஃபர் என்பவரை காதலித்து வந்த நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்தோடு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. சாரிக் மற்றும் ஜெனிபர் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் இவர்களுடைய திருமணம் இந்து முறைப்படியும் கிறிஸ்துவ முறைப்படியும் நடைபெற்றது.

television shariq

திருமணத்திற்குப் பிறகு ஷாரிக் மனைவி ஜெனிபர் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் நான் சிங்கிள் மதர். எனக்கு பெண் குழந்தை ஒருவர் இருக்கிறார். அந்த குழந்தையை 8 வருடங்களாக நான்தான் கஷ்டப்பட்டு வளர்த்து வந்தேன். அந்த குழந்தையை பார்த்துக் கொள்வது தான் எனக்கு முக்கியம் என்று தோன்றியது. அதனால் நான் இரண்டாவது திருமணம் பற்றி சிந்திக்கவே இல்லை.

television shariq

காரணம் இன்னொரு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் வரும் குடும்பம் என்னை ஏற்றுக் கொள்ளும் ஆனால் என்னுடைய குழந்தையை சரியாக கவனித்துக் கொள்வார்களா? என்ற பயத்திலேயே இருந்தேன். ஆனால் ஷாரிக் என் மகளை அவருடைய மகளாக பார்த்துக் கொள்கிறார். அதனால்தான் எனக்கு அவர் மீது காதல் வந்தது.

television shariq

அது மட்டும் இல்லாமல் அவருடைய வீட்டிற்கு நான் முதல்முறையாக சென்றபோது எனக்கு பயமாக இருந்தது. ஆனால் ஷாரிக் பெற்றோருக்கு என் மகள் சாராவை ரொம்பவே பிடித்து விட்டது. அவர்களுடைய பேத்தியாகவே பார்த்துக் கொள்கிறார்கள். எங்களுடைய திருமணத்திற்கு பிறகு என்னுடைய மாமனார் ஷூட்டிங் எங்கு சென்றாலும் கால் செய்து என்னுடைய மகளைப் பற்றி விசாரிக்கிறார். அது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.

television shariq

அதுபோல என்னுடைய மாமியார் உமா ரியாஸ் கானும் எந்த ஷாப்பிங் போனாலும் என்னுடைய மகளை கூட்டிக்கொண்டு செல்வார். நான் குழந்தையோடு திருமணம் செய்து கொண்டதற்காக என்னை சிலர் மோசமாக விமர்சித்தார்கள். ஆனால் ஷாரிக் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு என்னை ரொம்பவும் பாதுகாத்து வருவதால் எனக்கு அது ரொம்ப பெரியதாக பாதிக்கவில்லை என்று கூறி இருக்கிறார். அதேபோல ரியாஸ்கான் மற்றும் உமாரியாஸ்கான் உடன் ஜெனிபரின் மகள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+