சாவின் விளிம்பில் நின்று கேட்கிறேன்.. வில்வித்தை வீரர்களுக்காக உதயநிதி இதை செய்வாரா? நடிகர் ஷிஹான் பதிவு
சென்னை: நடிகர் விஜய் நடித்த பத்ரி திரைப்படம் உட்பட பல திரைப்படங்களில் நடித்த கராத்தே நிபுணரான ஷிஹான் ஹுசைனி ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு பேசி இருந்தார். இந்த நிலையில் இன்று அவருடைய நிலைமை சீரியஸ் ஆக இருப்பதாக அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிடப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் தன்னுடைய கடைசி ஆசையாக உதயநிதி ஸ்டாலின் வில்வித்தை வீரர்களுக்காக மைதானம் அமைத்து தர வேண்டும் என்று ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார்.
மதுரையை பூர்வீகமாக கொண்டவர்தான் ஷிஹான் ஹுசேனி. கராத்தே மாஸ்டர் ஆன இவர் பல நடிகர்களுக்கு கராத்தே பயிற்சி அளித்திருக்கிறார். அதிலும் கே பாலச்சந்தர் மூலம் புன்னகை மன்னன் திரைப்படத்தில் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு வேலைக்காரன், மூங்கில் கோட்டை, உன்னை சொல்லி குற்றமில்லை போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

கராத்தே மாஸ்டர்
ரஜினிகாந்த் நடித்த பிளட் ஸ்டோன் என்ற ஹாலிவுட் படத்திலும் வேலை செய்திருந்தார். அதுபோல தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த பத்ரி திரைப்படத்தில் இவர்தான் விஜய்க்கு கராத்தே சொல்லிக் கொடுக்கும் கேரக்டரில் நடித்திருந்தார். நிஜத்தில் இந்த படத்திற்காக விஜய் இவரிடம் கராத்தே கற்றுக் கொண்டாராம்.
அது போல திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் பல திறமையுள்ள குழந்தைகளை கண்டறியும் வகையில் ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டு பல குழந்தைகளுக்கு உதவி செய்து இருக்கிறார். இந்த நிலையில் தனக்கு ரத்த புற்றுநோய் வந்திருப்பதாக பேட்டி ஒன்றில் பேசி இருந்தார்.
ரத்த புற்றுநோய்
அதில் தன்னை பரிசோதித்த டாக்டர்கள் இது புற்று நோய்க்கு மேலே உள்ள அபாய கட்டமான நோய் உங்களை பாதித்திருக்கிறது. நீங்கள் பத்து நாள் உயிர் வாழ்வதே பெருசு என்று சொல்லிவிட்டார்கள். ஒரு நாளைக்கு இரண்டு பாட்டில் ரத்தம் ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. நான் என்னுடைய கடைசி நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறேன். ஆனாலும் அதைப்பற்றி பயப்படவில்லை.
தைரியமாக போரிடுவேன். சாவு எல்லோருக்கும் வரும் அது எனக்கு வருவது தெரிந்து வந்திருக்கிறது அவ்வளவுதான். நான் எனக்கு பிறகு என்னுடைய பயிற்சி பள்ளிகளை யார் பார்க்க வேண்டும் என்ற பொறுப்புகளை ஒப்படைத்து விட்டேன். அதேபோல என்னுடைய கராத்தே ஸ்கூல்லை நான் விற்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதை என்னிடம் பயிற்சி பெற்ற பவன் கல்யாண் வாங்கி அவர் பல குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்று விரும்புகிறேன்.
நடிகர்களிடம் கோரிக்கை
அதேபோல நடிகர் விஜயிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன், அவர் தமிழ்நாடு முழுவதும் வீட்டுக்கு ஒரு வில்வத்தை வீரரை உருவாக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு ஒன்றரை லட்சம் ரத்த வெள்ளை அணுக்கள் தேவைப்படுகிறது. ஆனால் ஹுசைனிக்கு நேற்று முன்தினம் 4,000 வெள்ளை அணுக்கள் இருந்த நிலையில் நேற்று இரவு அது பூஜ்ஜியமாக மாறி இருக்கிறது.
அந்த சீரியல் நடிகர் தான் என் கணவர்.. விஜயகாந்த் எனக்காக சொன்ன வார்த்தை! நெகிழ்ந்த விஜய் பட கதாநாயகி
அதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. குளிர் காய்ச்சல் மற்றும் உடலில் அரிப்பால் அவர் தவித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு பலரையும் பீல் பண்ண வைத்திருக்கிறது.
விளையாட்டுத்துறை அமைச்சருக்கு கோரிக்கை
அதாவது அதில் தமிழ்நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். அதில் அன்புள்ள உதயநிதி ஸ்டாலின் எனது நிலைப்பாடு உங்களுக்கு தெரியும். மூன்று நாட்களுக்கு முன்பு எனது ஷூ வில்வித்தை பணியின் வில் வீரர்களுக்காக ஒரு வேண்டுகோளை அனுப்பினேன். முழு மாநிலமும் இதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது நீங்கள் இன்னும் பதில் அளிக்கவில்லை.

மாநில விளையாட்டு அமைச்சருக்கு நகரத்தில் உள்ள அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனைக்கு காரில் செல்ல முப்பது நிமிடங்கள் நேரமில்லை என்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது. இது எனக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அவமானம். நீங்கள் என்னை சந்திக்க விரும்பவில்லை என்றால் அது பரவாயில்லை. ஆனால் கீழே உள்ள கடிதத்தில் உள்ளடக்கங்களை உடனடியாக செயல்படுத்தவும்.
நம்பிக்கை இருக்கிறது
செய்தி உங்களை சென்றடையாததால் நீங்கள் என்னை சந்திக்கவில்லை என்று நான் இன்னும் உணர்கிறேன். இதை நான் உறுதியாக நம்பிக் கொண்டிருக்கிறேன். உங்கள் தந்தை மற்றும் மாமா மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. எனது உடல்நிலை மோசமடைந்து வருகிறது. ஆனால் எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது.
விஜய் எனக்காக இதை செய்யணும்! உயிருக்கு போராடினாலும் “வைராக்கியமாக” பேசிய பத்ரி பட நடிகர்
நீங்கள் என்னுடைய கோரிக்கையை செய்வீர்கள் என்று நம்புகிறேன். அது போல தமிழ்நாட்டில் உள்ள அன்பான நண்பர்களே என்னை பின்தொடர்பார்களே நீங்கள் எனக்காக பிரார்த்தனை செய்வதற்கு பதிலாக எனது வேண்டுகோளை மாண்புமிகு தமிழ்நாடு விளையாட்டு அமைச்சருக்கு அனுப்பி உதவி செய்யுங்கள் என்று ரசிகர்களிடமும் வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.

கடைசி ஆசை
அதாவது தன்னுடைய கடைசி ஆசையாக அவர் வில்வித்தை வீரர்களுக்கு ப்ராக்டிஸ் பண்ணுவதற்கு ஒரு கிரவுண்ட் வேண்டும் அது கொடுக்கிற வரைக்கும் எம் ஜி ஆர் ஜானகி ரோடு நடைபெறும் இடத்தில் பசங்களை ப்ராக்டிஸ் பண்ண விடுங்க. இதுதான் என்னுடைய ஒரே ஒரு கோரிக்கை. தமிழ்நாட்டு சார்பாக ஒலிம்பிக்கில் நம்முடைய மாணவர்கள் யாராவது கோல்டு மெடல் வாங்கவேண்டும் என்பது என்னுடைய லட்சியம். அதற்காக பிராக்டிஸ் பண்ணுவதற்கு முறையான ஒரு மைதானம் இல்லை. அதனால் தமிழ்நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் இதற்காக உதவ வேண்டும் என்று அவர் வேண்டுகோள் வைத்திருந்தார்.












Click it and Unblock the Notifications