ஷிவானிக்கு இருக்கிறது குட்டி இதயம்ய்யா.. இப்படி குத்தி கிழிச்சுட்டீங்களே.. உச்சு கொட்டும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் பரபரப்பான கேம் ஷோக்களுக்கு பஞ்சமே கிடையாது.. இதோ இப்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 4 வந்தாச்சு. ஒரே அதகளம்தான்.

பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது இதில் சீசன் 4 ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் மக்களுக்கு தெரிந்த முகங்கள் பலரும், தெரியாத முகங்கள் பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களில் இணையதளங்களில் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ஷிவானியும் ஒருவர். இவரின் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் இவரை காணாது தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தினமும் இவர் போடும் போஸ்ட் காகவே பல ரசிகர்கள் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் செக் பண்ணிக் கொண்டிருப்பார்கள்.

 தலைவி நொந்துட்டாரே

தலைவி நொந்துட்டாரே

தற்போது அதில் அவர் இல்லாததால் பலரும் நொந்து தான் போய் இருக்கிறார்களாம். இருந்தாலும் அவர்களுக்கு ஆறுதல் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரை ரொம்ப நேரம் பார்க்கலாம் என்று மனசை தேற்றிக் கொண்டிருக்கிறார்களாம். ஆனால் தற்போது அந்த வீட்டிற்குள் இவர் யாருடனும் இன்னும் நன்றாக செட் ஆகாமல் இருக்கிறார் . இவரை போட்டியாளர்களும் எங்களுடன் பழகுவது இல்லை என்று குறை கூறிக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

 மரியாதை போயிருக்கு

மரியாதை போயிருக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பலர் பிரபலமானாலும் பலர் தங்களுடைய மதிப்பையும் இழந்து இருக்கிறார்கள். மக்கள் மத்தியில் அதுவரை இருந்த மதிப்பு கூட சிலருக்கு சில நேரங்களில் சரிந்து போய்விட்டது . அது போல தான் தற்போது ஷிவானியின் நிலமையும் இருக்குமோ என்று அவரது ரசிகர்கள் வருத்தப்படுகிறார்களாம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்துகொண்ட ஜூலி கூட இதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான்.

 ஜூலி போலாவாரா ஷிவானி

ஜூலி போலாவாரா ஷிவானி

ஜூலி, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மிகவும் பிரபலமாகி இந்த வீட்டிற்குள் வந்தார் .ஆனால் இங்கு இவரது கேரக்டர் வேறு விதமாக இருந்தது . இதனைப் பற்றி ரசிகர்கள் ரொம்பவே ஓட்டி தள்ளினர் . அவரை அதுபோல கணேஷ் வெங்கட்ராமன் படங்களிலும் ஒரு கம்பீரமான தோற்றத்தில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் இந்த வீட்டிற்குள் இருக்கும் போது எந்த பிரச்சனைகளையும் தலையிடாமல் தனியாகவே இருந்து கொண்டு வந்தார். இதனால் தான் அவரும் அந்த வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு ஒரு வருத்தம் இருந்து கொண்டே இருந்தது.

 கவர்ச்சி இருக்கு.. புயலைக் காணோமே

கவர்ச்சி இருக்கு.. புயலைக் காணோமே

தற்போது ஷிவானியும் அமைதியாக எல்லாத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். பலரும் இவரை சீண்டி வருகிறார்கள்.இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் எல்லா சீசனிலும் போட்டிகளுக்கு பஞ்சமே இருக்காது . சில ரசிகர்கள் இந்த போட்டிகளைப் பார்ப்பதற்காகவும் சிலர் கலாய்த்து தள்ளுவதற்காக தான் இந்த போட்டிகளை பார்க்கிறார்கள் என்பது ஒரு உண்மை தான். அதுபோல இந்த சீசனிலும் ஆட்டம் பாட்டத்துடன் முதல் நாள் தொடங்கியது.

 ஹார்ட் பிரேக்

ஹார்ட் பிரேக்

முதல்நாளில் அவ்வளவு பெரிய சுவாரசியமான நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை அதுபோல இந்த வாரத்துக்கான எலிமினேஷன் இல்லை என்று கமலஹாசன் கூறியிருந்தார். இருந்தாலும் நேற்றைய நிகழ்ச்சியில் நாமினேஷன் ப்ராசஸ் கான ஒத்திகை என்று ஒரு டாஸ்க் ஒன்றை கொடுத்து போட்டியாளர்கள் மத்தியில் கொஞ்சம் கொளுத்திப் போட்டுள்ளனர். அதில் பிக்பாஸ் வீட்டில் இந்த ஒரு நாளில் தங்களை மிகவும் கவர்ந்த போட்டியாளர்களுக்கு ஹாட் சிம்பளும், தங்கள் மனதை புண்படுத்திய அல்லது காயப்படுத்திய போட்டியாளர்களுக்கு ஹாட் பிரேக் சிம்பளும் குத்த சொல்லியிருந்தனர்.

 குத்தி கிழிச்சுட்டாங்களே

குத்தி கிழிச்சுட்டாங்களே

பிக்பாஸில் டாஸ்க் எல்லாம் இந்த மாதிரி வைப்பது சாதாரணமானதுதான். ஆனால் பலரும் ஷிவானிக்கு ஹார்ட் பிரேக் சிம்பலைக் குத்தி விட்டதால் ரசிகர்கள் மனசொடிஞ்சு போய் விட்டனர். ஷிவானிக்கு இருக்கிறது சின்ன இதயம்... அதில் போய் இப்படி குத்தி கிழிச்சுட்டீங்களே என்று விசனப்படுகின்றனர். அதிக ஹார்ட் பிரேக் ஷிவானி வாங்கி இருந்தார் . அவர் கூட இருக்கும் பங்காளர்கள் இவர் தனியாகவே இருக்கிறார். எங்களுடன் சேர மாட்டார் என்று கூறி தான் குத்தி இருக்கிறார்கள்.

 முகம் தொங்கிப் போன ஷிவானி

முகம் தொங்கிப் போன ஷிவானி

இப்படிக் குத்திட்டீங்களேய்யா என்று ஷிவானியும் கூட முகம் தொங்கி துவண்டுதான் போய் விட்டார். ஆனாலும் தனது கேரக்டரை அவர் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். நான் சீக்கிரத்தில் யாரிடமும் செட் ஆகி விட மாட்டேன். ஆனால் அதற்கான சூழ்நிலை வந்தால் சேர்ந்து விடுவேன் என்று கூறியிருக்கிறார். இப்படி ஒரு நிலையில் ஷிவானிக்கு சோமசேகர், பாலாஜி ஆகியோர் ஆறுதல் கூறி உள்ளனர்.

 ரசிகர்கள் கவலை

ரசிகர்கள் கவலை

ஷிவானியிடம் தினமும் நீங்கள் நாலு மணிக்கு ஒரு போஸ்ட் போடுவீங்களே, என்ன ஆகணும்னு அப்படி போட்டீங்க என்று கேட்டுள்ளார் நடிகர் ஆரி. பல ரசிகர்கள் இவரிடம் இதே வார்த்தையை கேட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் அதற்கு பதிலே சொல்லாமல் இருந்த ஷிவானி தற்போது இவரின் இந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் இருக்கிறார். தலைவி இப்படியே இருக்காதம்மா.. பொங்கி வா.. பொசுக்கி எடு.. உன் விஸ்வரூபத்தை கொஞ்சம் அவிழ்த்துக் காட்டு என்று ரசிகர்கள் சியர் அப் செய்ய ஆரம்பித்துளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+