‘சிங்கிள் பசங்க’ நிகழ்ச்சியில் இருந்து விலக காரணம் இதுதான்.. ஒபனாக பேசிய ஸ்ருதிஹா! இவ்வளவு விஷயம் நடந்ததா?
சென்னை: சின்னத்திரை மற்றும் சமூக வலைதளங்களில் பரிச்சயமான முகமாக மாறியுள்ள ஸ்ருதிஹா அர்ஜுன், சமீபத்திய ஒரு பேட்டியில் தன்னைச் சுற்றி நீண்ட நாட்களாக இருந்த ஒரு கேள்விக்கு நேரடியாக பதில் அளித்துள்ளார். குறிப்பாக சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் இருந்து ஏன் திடீரென விலகினார் என்ற விவகாரம் குறித்து அவர் வெளிப்படையாக பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது.

சினிமாவில் இருந்து இடைவேளை
ஸ்ருதிஹா அர்ஜுன், பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். அவர் சூர்யா நடித்த ஸ்ரீ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் சில படங்களில் நடித்திருந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
இதனால் சினிமாவை விட்டு விட்டு தனது படிப்பிலும், பின்னர் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கவனம் செலுத்தினார். திருமணத்திற்குப் பிறகு தற்போது பிஸினஸ் செய்து வருகிறார்.
ரியாலிட்டி ஷோ மூலம் ரீ-என்ட்ரி
பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்ருதிஹா அர்ஜுன் மீண்டும் மக்களிடம் அறிமுகமானது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தான். அதில் போட்டியாளராக கலந்து கொண்டு, தனது எளிமையான பேச்சும், சமையல் திறமையும் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அந்த சீசனின் டைட்டில் வெற்றியாளராகவும் தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஹிந்தி பிக் பாஸ் பதினெட்டாவது சீசனிலும் போட்டியாளராக கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.
ஜீ தமிழ் நிகழ்ச்சியில் இருந்து திடீர் விலகல்
இந்த பிரபலத்தின் அலை ஓயாமல் இருந்த நேரத்தில், சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக கலந்து கொண்டார். ஆனால் முதல் எபிசோடே முடிந்த உடன், அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதற்கான காரணம் என்ன என்ற கேள்வி அப்போது எழுந்துகொண்டே இருந்தது.

ஸ்ருதிஹா விளக்கம்
இப்போது அந்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார் ஸ்ருதிஹா அர்ஜுன். அவர் கூறியதாவது, நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே கடுமையான உடல்நிலை பிரச்சனை ஏற்பட்டது. குறிப்பாக பீரியட்ஸ் வலி அதிகமாக இருந்து ப்ளீடிங் அதிகமாக போனதால் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், அதன் பின்னர் மருத்துவர்கள் சீரியஸான ஆபரேஷன் தேவைப்படலாம் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த காரணத்தால் தான் மனதில் வருத்தம் இருந்தாலும், அந்த நிகழ்ச்சியில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்று அவர் விளக்கமாக கூறியுள்ளார்.
சீரியல் வாய்ப்பு மிஸ்ஸிங்
இதோடு மட்டும் இல்லாமல், ஒரு சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கவும் வாய்ப்பு வந்ததாகவும் அவர் பகிர்ந்துள்ளார். பார்வதி கதாபாத்திரத்தில் நடிக்க ஆடிஷனில் கலந்து கொண்டிருந்தாலும், மாதத்தில் 25 நாட்கள் படப்பிடிப்பு இருக்கும் என்று கூறப்பட்டதால் அந்த வாய்ப்பையும் மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
"பிசினஸ், குடும்பம் இரண்டையும் சமநிலையா பார்த்துக்கொள்ளணும். அதனால் தான் அந்த முடிவு எடுத்தேன்" என்று அவர் கூறியுள்ளார்.
குடும்பம் - பிசினஸ் - வாழ்க்கை சமநிலை
திருமணத்திற்கு பிறகு, ஸ்ருதிஹா அர்ஜுன் தனது வாழ்க்கையை முழுமையாக மாற்றிக்கொண்டுள்ளார். இப்போது அவர் ஒரு பிஸினஸ்வுமன் ஆக செயல்பட்டு வருவதோடு, குடும்ப வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
அதனால் தான், எந்த வாய்ப்பும் வந்தாலும், தன்னுடைய வாழ்க்கை சமநிலையை பாதிக்காத முடிவுகளை மட்டுமே எடுக்கிறார் என்பதும் இந்த பேட்டியின் மூலம் தெளிவாகியுள்ளது.
ஒரு நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகியது பல கேள்விகளை எழுப்பியிருந்தாலும், அதற்குப் பின்னால் இருந்த உண்மை - உடல்நிலை பிரச்சனை. ஸ்ருதிஹா அர்ஜுன் வெளிப்படையாக இதை பகிர்ந்ததால், ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இப்போது அவர் முழுமையாக தனது குடும்பம் மற்றும் பிஸினஸில் கவனம் செலுத்தி வருகிறார். எதிர்காலத்தில் மீண்டும் திரை அல்லது சின்னத்திரைக்கு திரும்புவாரா என்பது ரசிகர்கள் காத்திருக்கும் கேள்வியாகவே உள்ளது.
-
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications