விஜய் காஸ்ட்யூமில் ஓட்டு போட்ட சிபி.. செய்தியாளர்களிடம் சொன்ன பஞ்ச் டயலாக்.. முடிவோட தான் இருக்காங்க போல!
சென்னை: 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அரசியல் மட்டுமின்றி திரையுலகிலும் கவனம் ஈர்த்த ஒரு விஷயம், "விஜய் டிரஸ் கோடு" டிரெண்ட். இந்த தேர்தலில் பல சினிமா பிரபலங்கள் விஜய் டிரஸ் கோடில் வந்து வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த வரிசையில் நடிகர் சிபிராஜ் வாக்கு செலுத்தி விட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசி இருக்கிறார்.

விஜய் டிரஸ் கோட்
தற்போது அரசியலில் களம் இறங்கியுள்ள விஜய், சமீப காலமாக வெள்ளை சட்டை மற்றும் சந்தன நிற பேண்ட் அணிந்து பிரச்சாரங்களில் கலந்துகொண்டு வருகிறார். இதே உடை ஸ்டைலை பல பிரபலங்கள் இன்று வாக்குச்சாவடிகளில் பின்பற்றியது, அரசியல் ஆதரவின் சின்னமாகவே பார்க்கப்படுகிறது.
நடிகர் சிபி சத்யராஜ்
இந்த நிலையில், நடிகர் சிபி சத்யராஜ் தனது குடும்பத்துடன் வந்து வாக்கு செலுத்தினார். ஆரம்பத்திலிருந்தே விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துவரும் சிபி, எலக்சன் நேரத்திலும் தன்னோட டிரஸ் மூலம் மறைமுகமாக தனது நிலைப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
சிபியின் குடும்ப பின்னணியும் இதற்கு ஒரு சுவாரஸ்ய கோணத்தை உருவாக்கியுள்ளது. அவரது அவருடைய அப்பா சத்யராஜ் மற்றும் சகோதரி திவ்யா இரண்டு பேருமே திமுக ஆதரவாளர்களாக இருக்கிறார்கள், அதனாலயே விஜய் குறித்து சில நேரங்களில் இவர்கள் இருவரும் விமர்சித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வேறு யாரும் பதில் கொடுக்கிறார்களோ இல்லையோ முதல் ஆளாக சிபி பதிலடி கொடுத்திருந்தார்.
சிபி சத்யராஜ் பேட்டி
இன்று வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சிபி சத்யராஜ், "நான் என்னுடைய ஜனநாயகக் கடமையை முடித்து விட்டேன். எல்லோரும் தவறாமல் வந்து உங்கள் வாக்குரிமையை பயன்படுத்துங்கள்" என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அவருடைய உடை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, சிரித்தபடியே "ஏன் இது நல்லா இல்லையா? நல்லாத்தான் இருக்கு... நானும் போட்டிருக்கேன்!" என்று பதிலளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். இந்த சிம்பிளான பதில் கூட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய்யை ஃபாலோ பண்ணும் பிரபலங்கள்
சிபியை தொடர்ந்து, நடிகர்கள் விக்ரம், ஜீவா, ஜெய் மற்றும் இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்ட பலரும் அதே போன்ற வெள்ளை-சந்தன நிற உடையில் வந்து வாக்கு செலுத்தியுள்ளனர். இதனால், இந்த "டிரஸ் கோடு" தேர்தல் நாளின் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
காலை முதலே தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசைகள் காணப்பட்டு, பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். திரையுலக பிரபலங்களின் இந்த வகையான பங்கேற்பும், இளைஞர்களிடையே வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வை அதிகரிக்கிறது.
-
யாரு ஹீரோ? விஜய் Vs உதய்! பட்ஜெட் கூட்டத்தில் பட்டைய கிளப்புவது யார்? பரபரப்பாய் ரெடியாகும் லிஸ்ட்! -
ஜூன் 15-ல் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வருமா? விஜய் போட்ட பிளான்.. பலருக்கும் போன மெசேஜ் உண்மையா? -
திருச்சி, கோவை, சென்னை.. அடியோடு மாறப்போகுது.. விஜய்யின் 5 மாஸ்டர்பிளான்.. டெல்லியில் பேசியது என்ன? -
கோவைக்கு எய்ம்ஸ் தேவை! நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன? -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி!











Click it and Unblock the Notifications