இசைவாணிக்கு நாங்க துணை இருப்போம்.. ஐயப்பன் சர்ச்சை.. நீலம் பண்பாட்டு மையம் ஆதரவு
சென்னை: கானா பாடகி இசைவாணி பாடிய "ஐ அம் சாரி ஐயப்பா" என்று பாடப்பட்ட பாடல் பெரும் விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் இசைவாணிக்கு ஆதரவாக நீலம் பண்பாட்டு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கானா பாடகி இசைவாணி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார். இவர் வடசென்னையை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் பல கானா பாடல்கள் பாடி இருந்தாலும் "பெரிய கறி" என்ற பாடலை பாடியதன் மூலம் பெரிய அளவில் பிரபலம் கிடைத்தது. பொதுவாக பெண்கள் கால் பதிக்க தயங்கும் கானா இசைத்துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதுதான் இவருடைய கனவு லட்சியம்.

அதுமட்டுமல்லாமல் 2019 ஆம் ஆண்டு இவருடைய கானா திறமையை பெருமைப்படுத்தி உலகில் சிறந்த 100 பெண்களில் ஒருவராக பிபிசி தேர்வு செய்து பெருமைப்படுத்தியது. அதை மையமாகக் கொண்டுதான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. முதல் போட்டியாளராக பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஆனால் 49வது நாளில் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இப்படியான நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இசைவாணி பல மேடை நிகழ்ச்சிகளில் பாடி கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் சில வருடங்களுக்கு முன்பு ஐ அம் சாரி ஐயப்பா என்று ஒரு பாடலை பாடியிருக்கிறார். அந்த வீடியோக்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இசைவாணி பா ரஞ்சித் நடித்த நீலம் பண்பாட்டு மையத்தின் இசை கச்சேரி விழாவில் பல பாடல்கள் பாடி இருக்கிறார். அதில் தான் ஐ எம் சாரி ஐயப்பா என்ற ஒரு பாடலை இசைவாணி பாடி இருக்கிறார். அந்த பாடலில் ஐ அம் சாரி ஐயப்பா.. நான் உள்ளே வந்தால் என்னப்பா...? நான் தாடிக்காரன் பேபி.. இப்ப காலம் மாறிப்போச்சு.. இனி தள்ளி வைத்தால் தீட்டா.. நான் முன்னேறுவேன் மாஷா.. என்று அதில் வரிகள் இருக்கிறது.
பொதுவாக ஐயப்பன் கோவிலில் பத்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் மற்றும் 60 வயதை கடந்த பெண்கள் மட்டும் தான் செல்ல வேண்டும் என்ற நிலை உள்ள நிலையில் இவர் ஐயப்ப பக்தர்கள் உணர்வை சீண்டும் வகையில் பாடல் பாடி இருக்கிறார் என்று இவர் மீது பலர் புகார் கொடுத்திருக்கிறார்கள்.
அதிலும் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் அனைத்து பக்தர் சார்பாக சங்கத்தினர் புகார் கொடுத்து இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த விவாகாரம் தொடர்பாக நீலம் பண்பாட்டு மையம் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறது. அதில் இசைவாணியுடன் துணை நிற்க வேண்டும். கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் இருக்கும் சபரிமலைக்கு பெண்கள் செல்வது குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாலின பாகுபாட்டை முன்வைத்து பெண்களுக்கு உரிமை மறுக்கப்படக்கூடாது என்று தீர்ப்பளித்தது.

அதை ஆதாரமாகக் கொண்டு மிகப்பெரிய விவாதமும் நடைபெற்றது. அதை தொடர்ந்து நாட்டில் உள்ள முற்போக்கு இயக்கங்களும் பெண்களின் உரிமைக்கு ஆதரவாக நின்றன. இதே காலகட்டத்தில் தான் நீலம் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பில் இந்த கேஸ்ட்லெஸ்ட் கலெக்ஷன் என்கிற இசை குழு உருவானது.
சமூகப் படிநிலையில் நிலவும் பல்வேறு ஏற்ற தாழ்வுகளை கலைந்து சமூக உரிமைகளை கூறும் ஒரு பாடல் வரியோடு the casteless collective பல பாடல்களை இயற்றியது. ஜாதி ஏற்றத்தாழ்வுகள், இட ஒதுக்கீடுக்கு எதிரான மனநிலை, உணவு பழக்கத்தில் நிலவும் பாகுபாடு, பெண்கள் மீது செலுத்தப்படும் தீண்டாமை உள்ளிட்டவைகள் இதில் அடங்கும்.
அரசியலமைப்பு சட்டம் உறுதி செய்ய உரிமை கூறுகிற பாடலாக தான் அவை ஏற்றப்பட்டது. ஐ அம் சாரி ஐயப்பா என்கிற பாடல் ஆண்டாண்டு காலமாய் இங்கு பேசப்பட்டு வரும் கோயில் நுழைவு உரிமையை கூறுகிற வரிகளோடு துவங்கி பின் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கும் பொதுவான உரிமைகளை கூறும் பாடலாக அமையப்பெற்றது.
இப்பாடலை பாடியது இசைவாணி, இதை எழுதி இசையமைத்தது காஸ்ட்லெஸ்ட் கலெக்டிவ் அதற்குப் பிறகு பல்வேறு மேடைகளில் பாடல்களை பாடி வருகிறது. ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்றப்பட்டு இசைவாணியால் பல்வேறு மேடைகளில் பாடப்பட்ட பாடலின் முதல் வரியை மட்டும் எடுத்துக்கொண்டு கடந்த ஒரு வார காலமாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருகிறது ஒரு குழு.
அடிப்படையில் அது ஐயப்பன் சம்பந்தப்பட்ட பாடலே அல்ல. பெண்களின் பல்வேறு உரிமைகளை கூறும் வரிகளில் கோவில் நுழைவை கூறும் உரிமையும் அதில் இடம்பெற்று இருந்தது. இந்த முழு உண்மையை மறைத்து அந்த மொத்த பாடலும் குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிராக இருக்கிறது என சமூக வலைத்தளத்தில் பொய் செய்தியை பரப்பி சமூக பதற்றத்தை உருவாக்கி விட முடியும் என முயல்கிறது.
ஐயப்ப பக்தர்கள் உணர்வை காயப்படுத்திய கானா பாடகி இசைவாணி.. அந்த வரி..! குவியும் கண்டனங்கள்!
ஒரு கூட்டம் கடந்த ஒரு வார காலமாக பாடகர் இசைவாணியை ஆபாசமாக சித்தரித்தும், தொலைபேசியில் மிரட்டியும் சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்பியும் வருகின்றனர். ஒரு கலைஞர் மீது வைக்கப்படும் குறி என்பது தனி நபர் சம்பந்தப்பட்டது கிடையாது. அந்த மிரட்டல் இனி உருவாகி வரவிருக்கும் கலைஞர்களுக்கும் சேர்ந்தே என்பதுதான்.
சட்டப்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது ஆதாரத்துடன் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை மாநகர காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். கோவில் நுழைவு என்பது அடிப்படை உரிமை. சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மறுக்கப்பட்டவைகளை கேள்வி கேட்டுக் கொண்டே வந்தது விளைவாகத்தான் இன்று அவை சட்டமாக்கப்பட்டு இருக்கிறது.
அந்த அடிப்படை உரிமைக்கு எதிராக செயல்பாட்டை கண்டித்து தான் இந்த பாடல் உருவாக்கப்பட்டது. இந்த நோக்கத்தை புரிந்து கொண்டு செயல்படும் ஜனநாயகத்தை நம்பும் சக்திகள் ஒவ்வொருவரும் பாடகி இசைவாணிக்கு துணை நிற்க கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டிருக்கிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications