இவங்க தான் நடிகர் மதன்பாபு பொண்ணா?.. அதிர்ச்சியான கோபிநாத்.. நீயா நானாவில் நெகிழ்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் சமீபத்தில் பின்னணி பாடகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதில் காமெடி நடிகர் மதன் பாபுவின் மகளான ஜனனி மதன் கலந்து கொண்டிருக்கிறார்.
ஒரு பின்னணி பாடகியாக பல பாடல்களை பாடி இருக்கும் ஜனனிக்கு ஏற்பட்ட வருத்தங்கள் மற்றும் பிரச்சனைகள் பற்றி இந்த நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பலரும் தெரிந்து கொள்ளாத பல விஷயங்கள் சுவாரசியமாக விவாதிக்கப்பட்டு வருவதை பலரும் பாராட்டி வருகின்றனர். அதனாலேயே இந்த நிகழ்ச்சியில் பல வருடங்களாக கோபிநாத் தொகுப்பாளராகவே வந்து கொண்டிருக்கிறார்.
நீயா நானா நிகழ்ச்சியில் பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் வைக்கப்படும். அந்த மாதிரி தான் சில வாரங்களுக்கு முன்பு பின்னணி பாடகிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர். அந்தப் பாடகிகள் பாடிய பாடல்கள் ரசிகர்களின் மத்தியில் ஹிட்டாகி பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் அது இவர்கள்தான் பாடியது என்று முகம் வெளிச்சம் கிடைக்காமல் பலர் தவித்து இருக்கின்றனர். அவர்களுடைய வேதனையை இந்த நிகழ்ச்சியில் பகிரப்பட்டது.
இந்த மாதிரி தான் இந்த நிகழ்ச்சியில் ஜனனி மதன் மதன் என்கிற ஒரு பெண் நான்தான்," ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நான்" என்கிற பாடல் பாடியது என்று அழகாக பாடி காட்டினார். அதை பார்த்து வியந்து போன கோபிநாத் இது நீங்க பாடியதா? என்று ஷாக் ஆகி கேட்டார். ஆமாம் அது நானே தான் என்று அந்த பெண்ணும் சிரித்தப்படியே கூறியிருந்தனர்.

பிறகு நான் இமான் சாரிடம் முதல் முறையாக பாடி காட்டினேன் என்று, வீராப்பு திரைப்படத்தில் சுந்தர் சி யை பார்த்து கோபிகா பாடும் பாடலான, "போனா வருவீரோ..." எனும் பாடலை பாடிக்காட்டினார். அதைக் கேட்டு அதிர்ச்சியான கோபிநாத் இதுவும் நீங்க தானா என்று கேட்க? அதற்கு அந்த பெண், அப்போ என்ன ஆச்சுன்னா என்னுடைய பெயர் ஜனனி அதுபோல பரத்ராஜ் சாரோட பொண்ணு பேரும் ஜனனி, அதனால அவ சொன்னார், நீங்க வேணா பேரை மாத்திக்கோங்க. இல்லன்னா கூகுள்ல சர்ச் பண்ணி பார்த்தா ரெண்டு பேரோட பாட்டும் ஒன்னாவே வரும் என்று சொன்னார்.
அதற்கு நானும் அப்போது என்னுடைய பெயரை மாற்றிக் கொண்டு ஜே என வைத்துவிட்டேன். ஆனால் நிறைய இடங்களில் கிரெடிட் கொடுக்கும்போது இனிஷியல் போட்டு புள்ளி வைத்து விட்டார்கள். நான் பாடிய பல பாடல்களுக்கு ஆரம்பத்தில் ஜனனி என்று இருக்காது. ஜே என கிரெடிட் இருக்கும். அதுபோல அதைத் தொடர்ந்து விஜய் நடித்த சுறா திரைப்படத்தில் இருக்கும்," நான் நடந்தால் சரவெடி" எனும் பாடலையும் இவர் தான் பாடினாராம். இந்தப் பாடல்களுக்கு எல்லாமே ஜே என்ற பெயரில் தான் கிரெடிட் இருந்திருக்கிறது.

அதற்குப் பிறகு ஒரு ஒரு பிரேக் எடுத்து இருந்தேன் பிறகு இப்போ நான் பாடுற பாடல்கள் எல்லாமே ஜனனி மதன் என்கிற பெயரில் தான் வருகிறது. அப்பா சிரிப்பு நடிகர் மதன் பாபு என்று சொல்ல, கோபிநாத் வியந்து போய் நீங்க மதன் சாரோட பொண்ணா? என்று கேட்டு, நீங்க செம பாட்டு எல்லாம் பாடி இருக்கீங்க என்று சொல்லிக்கொண்டு, யாராவது இதை எதிர்பார்த்தீர்களா? என கேட்க அங்கு இருக்கும் ஒரு நபர் நான் எதிர்பார்க்கலை ஆனா இவங்க ரேஞ்ச் ரொம்ப எக்ஸ்பெக்டடா இருக்கு அது ரொம்ப ஆச்சரியப்படுத்துற ஒரு விஷயமாக இருக்கு என்று கூறியிருக்கிறார்.
மேலும் ஜனனி மதன் அனைவருக்கும் நன்றி கூறிவிட்டு எனக்கு புடிச்ச மாதிரி பாட வாய்ப்பு இன்னும் வரல. நான் என்னுடைய வாய்ஸில் வேற மாதிரி பாடணும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு வருவது எல்லாமே ஒரே போல குரலில் பாடுவது போன்று வருகிறது என்று கூறி இருக்கிறார். தற்போது இந்த ப்ரோமோ பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications