Single Pasanga : வீல்சேரில் பிளாக்கி ஸ்டார்! சிம்புவை கண் முன் கொண்டு வந்த காட்சி! T.ராஜேந்தர் சொன்ன வார்த்தை
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான 'சிங்கிள் பசங்க', சமூக வலைதளப் பிரபலங்களின் நடிப்பு மற்றும் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு களம். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் போட்டியாளர்களில், ஆசிரியர் மற்றும் டான்ஸரான பிளாக்கி ஸ்டார் (Blacky Star), தனது திறமையால் ரசிகர்களின் கவனத்தையும், நடுவர்களின் பாராட்டையும் தொடர்ந்துப் பெற்று வருகிறார்.
பிளாக்கி ஸ்டார் பின்னணி
பிளாக்கி ஸ்டார் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் ஒரு ஆசிரியராகப் பணிபுரிந்தாலும், சமூக ஊடகங்களில் தான் வெளியிடும் தனித்துவமான டான்ஸ் வீடியோக்கள் மூலம் பிரபலமானார். இவர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, மாணவர்களுக்குக் கணக்கு மற்றும் சயின்ஸ் பாடத்தில் உள்ள சந்தேகங்களைத் தீர்த்து வருகிறார். இவருடையக் கணிதம் சொல்லித் தரும் முறை, டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராகும் பலருக்கும்தயாராகும் இருப்பதாகப் பாராட்டப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் இவரது டான்ஸ் வீடியோக்களைப் பலரும் விமர்சித்தாலும், 'சிங்கிள் பசங்க' நிகழ்ச்சியில் இவரது நடிப்புத் திறமையும், கடந்த கால வாழ்க்கை குறித்தப் பேச்சுகளும் பலருடையப் பாராட்டைப் பெற்றுத் தந்தது. இந்த வாரம் 'சிங்கிள் பசங்க' நிகழ்ச்சியில், பிளாக்கி ஸ்டார் மிகவும் உணர்ச்சிபூர்வமான ஒரு காட்சியை நிகழ்த்திக் காட்டி, அரங்கத்தில் இருந்த அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளார்.
மன்மதன் காட்சி
பிளாக்கி ஸ்டார், நடிகர் சிம்புவின் நடிப்பில் வெளியானப் பிரபலமானத் திரைப்படமான 'மன்மதன்' படத்தில் வரும் ஒரு உணர்வுமிக்கக் காட்சியை மீண்டும் அரங்கேற்றினார். அந்தக் காட்சியில், அவர் வீல் சேரில் வருவது போலவும், கதாநாயகி அவரிடம் பேசுவது போலவும் நடிப்பில் அசத்தியிருந்தார். அவரது நடிப்பின் ஆழம், மேடையில் இருந்த அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைத்தது.
டி.ராஜேந்தரின் கண்ணீர்
பிளாக்கி ஸ்டாரின் இந்த நடிப்பைக் கண்ட நடுவர்களும், குறிப்பாக நடிகர் மற்றும் இயக்குநர் டி. ராஜேந்தரும் மிகுந்த நெகிழ்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். டி. ராஜேந்தர் பேசும்போது, பிளாக்கி ஸ்டார் வீல் சேரில் வந்து நடித்ததைக் கண்டு, அவருடையக் கண்கள் கலங்கிவிட்டன. அவர், "நீ வீல் சேரில் வரும்போது எனக்குப் பழைய விஷயங்கள் எல்லாம் ஃபிளாஷ்பேக்காகக் கண்முன் வருகிறது. உன்னுடைய நடிப்பால் இன்று நீ இந்த உலகத்திற்கே உன்னை நிரூபித்து விட்டாய்" என்றுப் பாராட்டி இருந்தார்.

உணர்வுப்பூர்வமானப் பாராட்டு
இவருடையப் பாராட்டு, பிளாக்கி ஸ்டாரின் போராட்டப் பின்னணியையும், நடிப்புத் திறனையும் அங்கீகரிப்பதாக அமைந்தது. பிளாக்கி ஸ்டாரின் வீல் சேர் நடிப்பு மற்றும் டி. ராஜேந்தர் கலங்கிப் பேசியப் ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இனிவரும் வாரங்களில் பிளாக்கி ஸ்டார் தனதுக் கணிதத் திறமையால் ஏதாவதுச் சுவாரசியமானச் சவால்களைச் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதோடு இவரை இதுவரைக்கும் திட்டி வந்தவர்கள் கூட இப்போது இவருடைய நடிப்பை பாராட்டி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் வாட்டர் மிலன் ஸ்டார் என்று தனக்கு தானே பட்டம் கொடுத்துக்கொண்ட திவாகர் தன்னை நடிப்பு அரக்கன் என்று ஒவ்வொரு இடத்திலும் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் பிளாக்கி ஸ்டார் நடிப்பு அவரை விட அருமையாக இருக்கிறது என்றும் பல கமெண்ட்ஸ் வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications