எனக்கு எதுவும் தெரியாது! அந்த இயக்குனர் சொன்னதை தான் செய்தேன்! நடிகை ஸ்ருதி நாராயணன் ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஸ்ருதி நாராயணன் தனக்கு கிடைத்திருக்கும் திரைப்பட வாய்ப்பு குறித்து எமோஷனலாக பேசியிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு சின்னத்திரை ரசிகர்களுக்கு இருக்கிறது. இந்த சீரியலில் எப்போது ரோகிணி மாட்டுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. அதுபோலவே இப்போது அவரைப் பற்றிய சில உண்மைகள் மட்டும் குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கிறது. அவர் தன்னுடைய மாமா என்று நடித்துக் கொண்டிருந்தது எல்லாம் பொய் என்று உண்மைகள் குடும்பத்திற்கு தெரிய வந்ததுமே விஜயா ருத்ர தாண்டவம் ஆடி இருக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

கதையில் திருப்பம்

ரோகிணியை அடித்து வீட்டை விட்டு துரத்தி இருந்தார். அதுபோல அடுத்ததாக ரோகிணிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது அவருக்கு ஒரு பிள்ளை இருக்கிறார். அதுபோல அவருடைய அம்மா உயிரோடு இருக்கிறார் என்ற உண்மைகள் தெரிய வரும்போது என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது. அதுபோல இந்த சீரியலில் கிளை கதைகளும் சுவாரஸ்யமாக திரும்பி இருக்கிறது.

வீடியோ கால்

அதாவது சீதா போலீஸ் ஆபீஸர் அருணை காதலிக்கிறார். அதுபோல ரோகிணியின் தோழியான வித்யாவும் முருகன் என்ற நபரை காதலிக்கிறார். இதில் முருகன் முத்துவின் நண்பர் இந்த கதை சுவாரசியமாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் சில வாரங்களுக்கு முன்பு இந்த சீரியலில் வித்யா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஸ்ருதி நாராயணனின் நிர்வாண வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்ருதி நாராயணன் விளக்கம்

அது குறித்து வெளிப்படையான விளக்கத்தை ஸ்ருதி நாராயணன் கொடுக்கவில்லை. அதே நேரத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அந்த வீடியோ ஏஐ வீடியோ என்பது போன்று ஒரு ஸ்டோரி போட்டு இருந்தார். அதுபோல அவரைப் பற்றி அதிகமான ட்ரோல்களும், அந்த வீடியோவின் லிங்க் கேட்டும் அதிகமான கமெண்ட்களும் குவிந்துவருகிறது.

இரண்டாவது வீடியோ

முதல் வீடியோ வெளியான போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இந்த விஷயத்தில் எல்லாமே எல்லை மீறி போய்விட்டது. திரைக்குப் பின்னால் இருக்கும் உறுதிப்படுத்தாத ஒரு பெண் வாழ்க்கையை கெடுக்கத் துடிக்கிற அந்த வெட்கக்கேடான மனிதரைப் பற்றி யாருக்கும் பேச நேரமில்லை. இன்னும் அந்த விஷயம் ஒரு பெண்ணை சுற்றி தான் நடந்து கொண்டிருக்கிறது.

ஸ்ருதி நாராயணன் வருத்தம்

இரண்டு நொடிகள் கூட யாரும் யோசிக்கவில்லை. மன ரீதியாக அந்தப் பெண் பாதிக்கப்படலாம், இப்படி நடப்பதால் அந்த பெண்ணுக்கு எவ்வளவோ கஷ்டங்கள் வரும் என்று யாரும் யோசிக்கவில்லை. காட்டு தீப்போல இதை பகிர்வதன் மூலம் அனைத்து ஆண்களுமே காமத்துக்கு ஏங்குபவர்கள் என்பது உறுதியாகி இருக்கிறது. நானும் உணர்வுகளை கொண்ட ஒரு பெண் என்பது எத்தனை நாள் தான் சொல்வது. மனித குலத்துக்காக இதை நிறுத்துங்கள்" என்று போஸ்ட் போட்டிருந்தார்.

இயக்குனர் பற்றி பதிவு

இவர் போஸ்ட் போட்ட அடுத்த நாள் ஸ்ருதி நாராயணனின் இரண்டாவது வீடியோவும் வெளியானது. அதற்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 12 படங்களை இயக்கிய இயக்குனர் தான் அந்த வேலையை செய்தார் என்று போஸ்ட் போட்டு இருந்தார். அதனால் யார் அந்த இயக்குனராக இருக்கும் என்று நெட்டிசன்கள் தேடலை தொடங்கி இருந்தனர். இந்த நிலையில் நேற்று ஸ்ருதி நாராயணன் தான் நடித்த கட்ஸ் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்.

திரைப்படத்தில் நடிப்பு

அப்போது அவர் பேசிய வீடியோ தான் இப்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசும்போது, எனக்கு ஒன்றுமே தெரியாது. இந்த படத்தில் எப்படி நடிக்க வேண்டும் என்று இயக்குனர் ரங்கராஜ் சொன்னாரு. அதைத்தான் நான் செய்தேன். அவ்வளவு நுட்பமாக எனக்கு சொல்லிக் கொடுத்தார். கண்டிப்பாக இந்த படத்திற்கு உங்களது ஆதரவு வேண்டும். இந்த படத்தில் நான் இரண்டாவது ஹீரோயினியாக நடித்திருக்கிறேன். ஆனால் அந்த கேரக்டர் நன்றாகவே இருக்கிறது என்று பேசி இருக்கிறார்.

திரைப்பட விழாவில் பேச்சு

ஸ்ருதி நாராயணன் ஆரம்பத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான கார்த்திகை தீபம் சீரியலில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து மாரி சீரியலிலும் நடித்திருந்தார். சீரியலில் மட்டுமல்லாமல் சில வெப் சீரிஸிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் தற்போது அவர் திரைப்படத்திலும் நடித்திருக்கும் தகவல் பலருக்கும் தெரிய வந்திருக்கிறது.

Siragadikka aasai serial vijay tv

ரசிகர்களின் கருத்து

என்னதான் இவரை பற்றி பல சர்ச்சைகளும் வதந்திகளும் பரவி வந்தாலும் அதையெல்லாம் தாண்டி இவர் தைரியமாக இப்போது இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருப்பது கட்ஸ் தான் என்று ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அதே நேரத்தில் தன்னை பற்றி பரவிய வீடியோக்களுக்கு ஸ்ருதி நாராயணன் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கலாமே என்பது பலருடைய ஆதங்கமாகவும் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+