சிறகடிக்க ஆசை: அருண் இவ்வளவு மோசக்காரனா? சீதாக்கு இனி தான் பிரச்சனை.. மீனாவை வீட்டை விட்டு துரத்தியாச்சு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூலை 11ஆம் தேதிக்கான எபிசோடில் அருண் முத்துவை மீனா குடும்பத்தை விட்டு பிரிக்க வேண்டும் என்று பிளான் போடுகிறார். அதே நேரத்தில் மீனா அண்ணாமலை வீட்டை விட்டு துரத்தி அனுப்பப்படுகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனா ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டா என்று முத்து புலம்பி கொண்டிருக்கும் போது மீனா அண்ணாமலை வீட்டு வாசலில் வந்து நிற்கிறார். இப்போ நீ எதுக்கு இங்க வந்த என்று முத்து கேட்க, நான் மன்னிப்பு கேட்க தான் வந்தேன் என்று சொன்னதும், மன்னிப்பு எல்லாம் கிடையாது என்று முத்து சொல்கிறார். உடனே மீனா அண்ணாமலை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க அவர் எதுவும் பேசாமல் இருக்கிறார். பிறகு நீ இப்படி பண்ணுவேன்னு கொஞ்சம் கூட நினைக்கலாமா என்று சொல்ல, என்ன மன்னிச்சிடுங்க மாமா, சீதா அருணை விரும்பினா ஆனா அருண் வீட்ல வேற ஒரு பொண்ணை பார்க்கிறதா சொன்னாங்க.

அதுவும் இல்லாம சீதா என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னா, அப்பா இல்லாத கஷ்டத்தை நான் இப்போதான் உணருதேன்னு சொன்னா. அப்பா இருந்திருந்தால் எனக்கு மனசுக்கு பிடிச்ச வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருப்பார் என்று சொன்னா. அதனாலதான் நான் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டேன் என்று சொல்ல, முத்து தான் இப்ப கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டானே அப்புறம் கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம் என்று அண்ணாமலை சொல்கிறார்.
அதற்கு விஜயா மண்டபத்தில் அசிங்கப்பட்டு நின்னுது அவன் தானே? அவன் தான் இவ குடும்பத்தை தலையில தூக்கி வெச்சிட்டு ஆடுனான் என்று முத்துக்கு சப்போர்ட் பண்ணி பேச, ஸ்ருதி நீங்க என்ன இன்னைக்கு புதுசா முத்துக்கு சப்போர்ட் பண்ணி பேசுறீங்க என்று கேட்கிறார். உடனே ரோகினியும் மனோஜும் விஜயாவுக்கு சப்போர்ட் பண்ணி பேச ரவியும் ஸ்ருதியும் மீனாவுக்கு சப்போர்ட் பண்ணி பேசுகின்றனர். அதற்கு மனோஜ் நீங்க ஓடிப்போய் கல்யாணம் பண்ணுனதால இவங்களுக்கு சப்போர்ட் பண்றீங்களா என்று கேட்க, நீ ஓடிப் போனதை பற்றி பேசாதே என்று மனோஜை திருப்பி கேட்கின்றனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட அண்ணாமலை சத்தம் போட்டு அனைவரையும் அமைதியாக இருக்க வைக்கிறார்.
பிறகு முத்து நீங்க வேணா மன்னிக்கலாம் பா ஆனா நான் இவளை மன்னிக்க மாட்டேன் என்று சொல்கிறார். அதோடு நான் கார் டிரைவர் அவன் போலீஸ்காரனு தெரிஞ்ச உடனே இவங்க எல்லாரும் சேர்ந்து என்னை அசிங்கப்படுத்திட்டாங்க என்று சொல்ல, எங்க வீட்ல அப்படி யாரும் நினைக்கல இவர்தான் எங்க வீட்டில் எல்லாமே என்று மீனா சொல்கிறார். பிறகு முத்து அண்ணாமலை பக்கத்தில் கீழே உட்கார்ந்து அன்றைக்கு இவளை ரெஜிஸ்டர் ஆபீஸ்ல நான் பார்த்தேன்பா அப்போ கூட இவ இப்படி எல்லாம் பண்ணி இருப்பான்னு நான் நினைக்கவே இல்ல.
எனக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டாங்க இவ இனி இந்த வீட்டுல இருக்க கூடாது என்று சொல்ல, நான் இந்த வீட்டில் இருக்க வரல நான் மாமா கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு போக தான் வந்தேன். நான் இல்லாம அவரால இருக்க முடியாது கண்டிப்பா என்னை வந்து கூட்டிட்டு வருவாரு என்று சொல்லி மீனா கிளம்புகிறார். மறுபக்கத்தில் சந்திரா சீதாவிடம் பால் கொடுத்து முதலிரவுக்கு அனுப்பி வைக்கிறார். அவர் உள்ளே வந்தவுடன் அருளுடன் உட்கார்ந்து இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மாமா ரொம்ப நல்லவரு, எங்க அம்மா அவரை குடும்பத்துல மூத்த பிள்ளையா பாக்குறாங்க என்று சீதா முத்துவுக்கு ஆதரவாக பேச, அருண் மனதுக்குள் முதல்ல அந்த முத்துவை இந்த குடும்பத்தை விட்டு பிரிக்கணும் என்று பிளான் போடுகிறார்? அப்போது மீனா வீட்டுக்கு வந்து நிற்க அதை பார்த்து சந்திரா அதிர்ச்சி ஆகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications