சிறகடிக்க ஆசையில் அடுத்த வாரம்: ஸ்ருதியால் வில்லியாகும் ரோகிணி.. முதல் டார்கெட் விஜயா! செம சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது அதில் ரோகிணி குடும்பத்திடம் வசமாக சிக்கி இருப்பதை வைத்து ஸ்ருதி மற்றும் மீனா ரோகிணியை கிண்டல் செய்து அவமானப்படுத்துகின்றனர். இதனால் மீனா மற்றும் விஜயாவை பழிவாங்க வேண்டும் என்று ரோகிணி முடிவெடுக்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த வாரத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே ரோகிணி பற்றிய உண்மைகள் தெரிய வந்தது. ஆனாலும் அவர் பற்றிய மொத்த உண்மைகளும் இன்னும் குடும்பத்திற்கு தெரியவில்லை. ரோகிணியின் மாமாவாக நடிக்க வந்த கறிக்கடைக்காரர் பற்றிய உண்மைகள் மட்டும்தான் தெரியவந்திருக்கிறது. அதற்கே விஜயா ருத்ரதாண்டவம் ஆடி இருக்கிறார்.

ரோகிணியின் புது நாடகம்
ரோகிணியை போட்டு அடித்து துவசம் செய்து விட்டார். அதோடு ரோகிணியை வீட்டை விட்டும் துரத்திவிட்டு இருந்தார். வழக்கம் போல முத்துவும் மீனாவும் தியாகிகள் போல இந்த குடும்பத்தை ஒற்றுமையாக வைக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தனர். பாட்டியை வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்து இந்த பஞ்சாயத்தை பைசல் செய்து இருக்கிறார்கள். விஜயா மீது தான் தப்பு விஜயா பணத்திற்காக ஆசைப்பட்டதால்தான் விஜயாவிடம் உண்மையை சொல்லாமல் இத்தனை நாட்களாக ரோகிணி நடித்துக் கொண்டிருந்தார் என்று ரோகிணி அழுது ஆர்ப்பாட்டம் செய்து புது நாடகத்தை போட்டு விட்டார்.
விஜயா போட்ட கண்டிஷன்
ரோகிணியின் நாடகத்தை நம்பி மொத்த குடும்பமும் விஜயாவை டார்கெட் செய்து விட்டனர். அதே நேரத்தில் விஜயா குடும்பத்தினர்கள் எல்லோர் முன்பும் தலை குனிந்து அவமானப்பட்டு இருக்கிறார்கள். தான் கூட்டிட்டு வந்த மருமகள் தன்னையே ஏமாற்றிவிட்டார் என்று தெரிந்ததும் விஜயா ஏமாற்றத்தின் உச்சத்தில் இருக்கிறார். மனோஜை இனி ரோகிணியுடன் பேசக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்.
பீல் பண்ணும் ரோகிணி
ஏற்கனவே ரோகிணி மீது கடும் கோபத்தில் மனோஜ் இருப்பதால் அம்மா பேச்சை தவறாமல் கேட்டுக் கொள்கிறார். இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இன்றைய எபிசோடில் ரோகிணியின் அம்மா போன் செய்து தனக்கு பிறந்தநாள் என்று சொல்கிறார். அதற்கு ரோகிணி வாழ்த்துக்கள் சொல்கிறார். தன்னுடைய அம்மா உயிரோடு இருக்கும்போதே தன்னுடைய அம்மா இறந்துவிட்டார் என்று வீட்டில் நாடகம் போட்டதை நினைத்து ரோகிணி பீல் பண்ணுகிறார்.

அடுத்த வாரம் ப்ரோமோ
அதோடு அம்மாவை பார்ப்பதற்காக ரோகிணி வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் கிச்சனில் ரோகிணி சமைத்துக் கொண்டிருக்கிறார். அந்த பக்கமாக வந்த மீனா என்னங்க பண்ணுறீங்க நீங்க என்ன சமைக்கிறீங்க என்று கேட்க, என்னுடைய சாப்பாட்டை நான் தான் சமைச்சு சாப்பிடணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
ஸ்ருதி கிண்டல்
அந்த நேரத்தில் அங்கு வரும் ஸ்ருதி நீங்க இத்தனை நாளா மலேசியா மருமகளாக இருந்தீங்க இப்போ சமையல் கட்டு மருமகளா மாறிட்டீங்க என்று கிண்டல் செய்து சிரித்துக் கொண்டிருக்கிறார். அதை பார்த்து மீனாவும் சிரிக்கிறார். இதனால் ரோகிணி எரிச்சல் அடைகிறார். மீனா மற்றும் விஜயாவை பழி வாங்குவதாக மனதிற்குள்ளேயே புலம்பிக் கொண்டிருக்கிறார். இதனால் அடுத்த வாரத்தில் எதிர்பார்க்காத சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருக்கிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications