சிறகடிக்க ஆசை: க்ரிஷ் சொன்ன விஷயம்! பட்டும் திருந்தாத ரோகிணி! அவமானபடும் முத்து, மீனா! இது பலருக்கு பாடம்
சென்னை: (Siragadikka Aasai serial Today Episode) விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட், உணர்வுபூர்வமான பல திருப்பங்களைக் கொண்டது. கிரிஷ்ஷை காப்பாற்ற முத்துவும் மீனாவும் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடும் கதைதான் இன்றைய எபிசோட்.

தன்னுடைய ஈகோவை துறந்த முத்து
நேற்றைய எபிசோடில், கிரிஷ் மீது புகார் அளித்தவரின் காலில் விழுந்து கெஞ்சிய முத்து, இன்று அந்த குடும்பத்தின் வாசலில் காலையிலிருந்து மாலை வரை காத்திருக்கிறார். "நீங்க இப்படி செய்வீங்கனு நான் நினைக்கலை!" என்று மீனா கேட்டதற்கு, "அவன் குழந்தைப் பருவத்துல சந்தோஷமா இருக்கணும், அதுக்காக நான் இதை செய்வேன்" என்று முத்து உறுதியாகக் கூறுகிறார்.
தான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ஓடர்களையும், சவாரிகளையும் விட்டுவிட்டு, ரோட்டில் அமர்ந்து சாப்பிட்டு, கிரிஷ்ஷின் எதிர்காலத்துக்காக இருவரும் காத்திருக்கிறார்கள். இதைக் கவனிக்கும் அந்தப் புகார் அளித்தவரின் குடும்பத்தினர் மனசு கஷ்டப்பட்டு, வீட்டுக்குள்ளே அழைக்கிறார், அப்போது நடந்த விஷயத்தை அவரிடம் கூறுகிறார்கள்.
Siragadikka Aasai: கிரிஷின் பிரச்சனைக்கு அம்மாதான் காரணம்.. டாக்டர் சொன்ன விஷயம்! சிறகடிக்க ஆசை சீரியல் சொன்ன பாடம்
க்ரிஸ்க்கு அப்பா கிடையாது, அம்மா வெளிநாட்டில் இருக்கிறாங்க அந்த பையனுக்கு அம்மா பாசமே கிடைக்கல. அந்த நேரத்துல ஸ்கூல் இருந்த சில பசங்க உனக்கு அம்மா இல்ல, நீ பொய் சொல்ற என்று கிண்டல் செஞ்சிருக்காங்க. உங்க பையனும் அதுபோல பேசி இருக்கிறான். அம்மா பாசத்துக்காக ஏங்கிக் கொண்டிருந்தவனுக்கு திடீரென கோபம் வந்து இப்படி செஞ்சுட்டான். அவன் இப்படி செய்கிற ஆள் கிடையாது என்று சமாதானம் செய்ய அதற்கு அந்த நபர் முதலில் கோபப்பட்டாலும் பிறகு மனது மாறுகிறார். ஆனால் நான் நாளைக்கு ஸ்கூலுக்கு வருவேன் அந்த பையனுக்கு ஒரு டெஸ்ட் வைப்பேன் அதற்கு பிறகு தான் என்னுடைய முடிவு சொல்ல முடியும் என்று சொல்லி விடுகிறார்
கதறி அழும் ரோகிணி
மறுபுறம், ரோகிணி, கிரிஷ்ஷை அழைத்து, "முத்துவும் மீனாவும் வந்தால், நீ அவங்க கூட போக கூடாது. இந்த ஆன்டி வீட்டிலேயே இருக்கேன்னு சொல்லு" என்று வற்புறுத்துகிறார். ஆனால், "நான் உன்னோடு இருப்பேன், இல்லைன்னா பாட்டி வீட்டுக்கு அனுப்பு, அப்படி இல்லேன்னா மீனா ஆன்டி கூடத்தான் இருப்பேன்" என்று கிரிஷ் சொல்கிறார். இதனால் கோபப்பட்ட ரோகிணி, கிரிஷ்ஷை அடிக்கக் கை ஓங்குகிறார்.
ஆனால், முத்துவும் மீனாவும் வருவதைப் பார்த்ததும், ரோகிணி தன்னுடைய பையை மறத்துவிட்டு, ஓடிச்சென்று ஒளிந்துகொள்கிறார். பிறகு, முத்துவும் மீனாவும் கிரிஷ்ஷை அழைத்துக் கொண்டு செல்ல, கிரிஷ் சந்தோஷமாக வீட்டிற்குச் செல்கிறான்.
அதுபோல கிருஷ்ணா அடித்த பையனின் அப்பாவுக்கு நாளைக்கு டெஸ்ட் வைக்கிறேன் என்று சொன்ன விஷயம் ரோகிணிக்கு தெரிய வருகிறது. அதற்கு "அவங்க எப்பவும் இப்படிதான், எதாவது பொய் சொல்லிவிட்டு போவாங்க" என்று கூறுகிறார். ஆனால், முத்துவும் மீனாவும் எந்த ஒரு எதிர்பார்ப்போம் இல்லாமல், கிரிஷ்ஷின் எதிர்காலத்திற்காக ஒரு முடிவு எடுக்க வேண்டுமென்று காத்திருக்கிறார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.












Click it and Unblock the Notifications