சிறகடிக்க ஆசை: மீனாவிடம் சிக்கிய விஜயா- மனோஜ்.. அருணால் ஏற்படும் பிரச்சனை! முத்துவின் அதிரடி
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 பிப்ரவரி 14ஆம் தேதிக்கான எபிசோடில், விஜயா மனோஜ் வீட்டிற்கு தெரியாமல் பத்திரத்தை சிந்தாமணி ஏன் பைனான்சியரிடம் கொடுக்க அதை மீனாவும் பார்த்து விடுகிறார். அதேபோல அருண் பிளான் போட்டது போலவே இப்போது முத்துவை பிரச்சனையில் சிக்க வைத்திருக்கிறார் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் (Siragadikka Aasai serial 14 February 2026 episode) இதுவரைக்கும் நடந்த கதையில், சிந்தாமணி விரித்த வலையில் விஜயாவும் மனோஜும் சிக்கிக் கொண்டனர். சிந்தாமணியிடம் யாருக்கும் தெரியாமல் கடன் கேட்டிருந்த விஜயா, பைனான்சியரின் ஆபீசுக்கு மனோஜுடன் போகின்றனர். அங்கு கடன் தர சொத்து பத்திரம் அவசியம் என்று கூறப்பட்டதும், மனதில் தயக்கம் இருந்தாலும், சூழ்நிலையால் விஜயா பத்திரத்தை ஒப்படைத்துவிட்டார்.

கையெழுத்து போடும் நேரத்தில் கரண்ட் கட் ஆகி விடுகிறது. இதை அபசகுணமாக நினைத்து விஜயா பதறினார். ஆனால் மனோஜ், தன் கையெழுத்துடன் மட்டுமல்லாமல் அப்பா கையெழுத்தையும் திருட்டுத்தனமாக போட்டுக் கொடுத்து பணத்தை பெற்றார்.
இதனால், சிந்தாமணி "எப்படியோ வீடு நம்மிடம் வந்து சேரும்" என்ற நம்பிக்கையில் சந்தோஷமாக இருக்கிறார்.
மீனாவிடம் சிக்கிய விஜயா
அடுத்ததாக பைனான்சியர் ஆபீஸிலிருந்து மூவரும் வெளியே வந்ததை, தற்செயலாக அங்கே போன மீனா பார்த்து விடுகிறார். சிந்தாமணியும் அவர்களுடன் இருப்பதைப் பார்த்ததும், கடன் வாங்கவே அவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை மீனா புரிந்து கொள்கிறார். அப்போது அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று மீனா ஒளிந்து இருந்து கேட்க, அவர்கள் பேசும்போது பத்திரம் என்ற வார்த்தை அவருக்கு கேட்டதா இல்லையா என்பது தெரியாத போதும், விஜயா கடன் வாங்கிட்டு வந்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்கிறார்.
நீத்தின் பிளாக்மெயில்
மறுபக்கம், ஸ்ருதி ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ரவிக்கு நீத்து வீடியோ காலில் கூப்பிடுகிறார். உங்கள பாக்கணும் போல இருக்கு அதனால உடனே நீங்க வரணும் என்று நீத்து சொல்ல, அதற்கு ரவி "வேலையில் இருக்கிறேன்" என்று மறுத்ததும், தூக்க மாத்திரைகளை எடுத்துக்காட்டி நீங்க இங்க வரல நான் ஒவ்வொரு மாத்திரையா சாப்பிட்டுட்டே இருப்பேன் என்று மிரட்டுகிறார்.
வேறு வழியின்றி, ரவி வேலையை பாதியிலேயே விட்டுவிட்டு நேற்று போய் காப்பாற்ற போகிறார். ஏற்கனவே ஒரு ஆர்டர் சீக்கிரமாக கொடுக்க வேண்டும் என்று ஸ்ருதி சொல்லி இருந்த நிலையில், ரவி அவசரமாக போவதை பார்த்து அங்கே விசாரிக்கும் போது நீத்து போன் செய்த விஷயம் ஸ்ருதிக்கு தெரிகிறது. இந்த சம்பவம், ரவியின் வாழ்க்கையில் புதிய சிக்கலை உருவாக்கும் நிலையில் உள்ளது.

சமாதான பேச்சு சண்டையாக மாறியது
கடைசியாக அருணின் அம்மா விபத்தில் உயிரிழந்த வழக்கில், செல்வத்தை காப்பாற்ற சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. வக்கீல்கள் முன்னிலையில் நடந்த பேச்சில், "அதிகபட்சம் அபராதம் தான் விதிக்கப்படும்" என்று கூறப்பட்டபோதும், அருண் தரப்பு சமாதானத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை.
செல்வம் என்னால முடிஞ்சது ஒரு லட்சம் ரூபாய் தரேன் என்று சொல்ல, அதற்கு அருண் எங்க அம்மா உசுரு உங்களுக்கு அவ்வளவு கேவலமா போயிடுச்சா? என்று கோபப்பட, அதற்கு முத்து அவனால முடிஞ்சதை தானே தாரேன்னு சொல்லுறான் என்று சப்போர்ட் செய்ததும், உங்க அப்பாவை கார் ஏத்தி கொன்னுட்டு இதைப்போல பணம் தந்தா வாங்கிக்குவியா என்று அருண் கேட்க, முத்து கோபத்தில் அவரை அடிக்கப் பாய்கிறார். இதனால் சமாதானம் பேச வந்த கூட்டமே சண்டையாக முடிந்தது. இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்தது.












Click it and Unblock the Notifications