சிறகடிக்க ஆசை: தன் நிஜ பிளாஷ்பேக் கதையை சொன்ன ரோகிணி! அழுத மீனா, உண்மையை கண்டுபிடித்த முத்து
சென்னை: விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில், மீனா மற்றும் ரோகிணியின் தனிப்பட்ட உணர்வுகளும், ரகசியங்களும் பெரும் அதிர்ச்சியையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தின. வீட்டில் நடந்த சமையல் குழப்பம்தான் இந்தப் பெரிய உணர்ச்சிப் போராட்டத்திற்கு அடித்தளமாக அமைந்தது.

குழப்பத்தில் மீனா
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், வழக்கம் போல மீனா தான் சமைத்த உணவுகளை வீட்டாருக்குப் பரிமாறத் தொடங்கினார். அப்போது ரோகிணியும் மீனாவுக்கு உதவ முன்வந்தார். ஆனால், விஜயா மீனா எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வாள், நீ வந்து சாப்பிடு என்று சொல்லவும், ரோகிணி அதை மறுத்து, "இல்லை, நான் மீனாவுக்கு உதவி செய்கின்றேன்" என்றார். இதைக் கேட்ட ஸ்ருதி, "மீனா தானே எப்போதும் பரிமாறுவாங்க, நீங்க என்ன புதுசா அவங்களுக்கு ஹெல்ப் பண்றீங்க?" என்று கிண்டலாகக் கேட்டார்.
அனைவரும் சாப்பிட அமர்ந்தபோதுதான் விசித்திரம் தெரிந்தது. சாப்பாட்டில் உப்பு, புளி, காரம் எல்லாம் வித்தியாசமாக இருக்க, யாராலும் ஒரு வாய் கூடச் சாப்பிட முடியவில்லை. இதனால் மீனாவுக்கு என்ன நடந்தது என்று எல்லாரும் விசாரிக்கத் தொடங்கினர். அப்போது அண்ணாமலை பரிவுடன், "உடம்பு சரியில்லையா?" என்று கேட்க, முத்து மீண்டும் மீண்டும் மீனாவை வற்புறுத்தினார். "மீனாவுக்கு மனசுதான் சரியில்லை போல, ஏதோ என்னிடம் மறைக்கின்றார். என்ன விஷயமாக இருந்தாலும் சொல்லு, உனது முகத்தைப் பார்த்தாலே எல்லாம் தெரிகிறது" என்று முத்து கேட்க, மீனா ஒன்றும் இல்லை என்று மறுத்துவிட்டார்.
ரோகிணியின் மிரட்டல்
சமையல் குழப்பத்திற்குப் பின், கிச்சனுக்குச் சென்ற மீனா, தான் உண்மையைச் சொல்லப் போவதாக ரோகிணியிடம் சொல்கிறார். இதைக் கேட்ட ரோகிணி, "நீங்கள் உண்மைய சொன்னால் நான் இப்பொழுதே எனது கையை அறுத்துக் கொள்வேன்" என்று மீனாவைப் பயங்கரமாக மிரட்டினார். ரோகிணியின் மிரட்டலால் குழப்பமடைந்த மீனா, தனியாக மாடியில் சென்று அழுதுகொண்டிருந்தார்.
ரோகிணியின் பிளாஷ்பேக்
மாடியில் அழுதுகொண்டிருந்த மீனாவைப் பார்த்த ரோகிணி, "எதற்காக இப்படி அழுகிறீர்கள்?" என்று கேட்க, மீனா வெடித்துக் கலங்கினார். "நீங்க இரண்டு வருஷமா எல்லாரையும் ஏமாற்றிக் கொண்டு இருக்கீங்க. ஆனால் என்னால் அப்படி இருக்க முடியல" என்று ரோகிணியிடம் கோபப்பட்டு கத்துகிறார்
இதைக் கேட்ட ரோகிணி, "எனது வாழ்க்கையில் உண்மையாக என்ன நடந்தது என்று தெரிந்திருந்தால் நீங்கள் இப்படிப் பேசி இருக்க மாட்டீங்க" என்று கூறி, தனது சோகமான பிளாஷ்பேக் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்: தான் படித்துக்கொண்டிருந்த போது, வீட்டில் கடன் தொல்லை அதிகமாக இருந்தது. தான் படித்து அந்தக் கடன்களை அடைக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், என்னுடைய அப்பா வேலை செய்யும் இடத்தில் உள்ள முதலாளியின் தம்பியை எனக்குத் திருமணம் முடிக்கக் கேட்டார்கள். எனக்கு அவரைவிட 15 வயது வித்தியாசம் இருந்ததால் நான் மறுத்தேன். ஆனாலும் அப்பா கட்டாயப்படுத்தித் திருமணம் செய்து வைத்தார்.
கல்வி மறுக்கப்பட்டது
திருமணம் நடந்த மறுநாள் எனக்கு எக்ஸாம் இருந்தது. அதற்காக நான் படித்துக்கொண்டிருந்தேன். ஆனால், எனது கணவர் எனது புத்தகங்களைத் தூக்கி எறிந்து என்னைப் படிக்க விடாமல் தடுத்தார். மேலும், என்னுடைய அனுமதி இல்லாமல் என்னை அவர் தொட்டார். அதன்பிறகு அடுத்த நாள் நான் அவருக்கு காபி கொண்டு போனேன் அப்போது அவர் கையில் மது பாட்டில் ஒரு உட்கார்ந்து இருந்தார். அப்போதுதான் அவருக்குக் குடிப்பழக்கம், போதைப் பழக்கம் இருப்பது தெரியவந்தது.
சோக முடிவு
மூன்று மாதம் அவரோடு வாழ்ந்தேன் அந்த மூன்று மாதமும் நான் நரக வேதனை தான் அனுபவித்துக் கொண்டு இருந்தேன். நான் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்த நிலையில், ஒரு கட்டத்தில் அவர் மது போதையில் வந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மூன்றே மாதங்களில் எனது வாழ்க்கை முடிந்தது. அதன் பின்பு அவரது குடும்பத்தினர் 5 லட்சம் ரூபாய் கொடுத்து, "இனிமேல் இந்தக் குடும்பத்துக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை" என்று என்னைத் துரத்திவிட்டார்கள் என்று தனது சோகமான கதையைக் கூறி முடித்தார்.
ரோகிணியின் இந்தப் பிளாஷ்பேக் கதை, அவர் ஏன் இந்த ரகசியங்களை மறைத்து வாழ்கிறார் என்பதற்கான வலுவான காரணத்தை இன்றைய எபிசோடில் வெளிப்படுத்தியது.
-
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
Top 10 Serial: இந்த வார டாப் 10 சீரியல்கள்.. பின்னுக்கு போன எதிர்நீச்சல், மாஸ் காட்டும் அழகே அழகு சீரியல் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications