சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பற்றி சத்யாக்கு தெரிந்த ரகசியம்.. விஜயாக்கு கிடைத்த அதிர்ச்சி! கடைசியில் இப்படி ஆகிடுச்சு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் (Siragadikka Aasai serial today episode) 2026 பிப்ரவரி 19ஆம் தேதிக்கான எபிசோடில் சிந்தாமணி ரோகிணி வீட்டில் இருக்கும் விஷயம் சத்யாவிற்கு தெரிய வருகிறது. அதே நேரத்தில் முத்துமீனா வாழ்க்கையிலும் ஒரு சந்தோஷம் கிடைத்திருக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்றைய எபிசோடில் ரோகிணி மீனாவிடம் கிரிஷ்க்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது அவன் உங்களையும் முத்துவையும் தான் பார்க்கணும் என்று சொல்கிறான் என்று சொன்னதும் மீனா அதைப்பற்றி வீட்டில் வந்து சொல்லி இருந்தார். அப்போது அண்ணாமலை நீங்க நேரில் போய் பார்க்க வேண்டாம் ஆனால் அதற்கு மாற்று ஏற்பாடு என்ன பண்ண என்று யோசிங்க என்று சொல்லி இருந்தார்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
இந்த நிலையில் இன்றைய (Siragadikka Aasai serial 19th February 2026 Episode) எபிசோடின் ஆரம்பத்தில் சிந்தாமணி ரோகிணி வீட்டிற்கு வந்து நீ மனோஜ் கூட சீக்கிரமா சேர்ந்து வாழ்ற வழியை பாரு என்று ரோகிணியை ஏத்தி விட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது திடீரென கதவு தட்டப்பட உடனே அங்கிருக்கும் ஒரு ரூமுக்குள் ஒளிந்து கொள்கிறார். முத்துவும் மீனாவும் சத்யாவை ரோகிணி வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர்.
சத்யாவை பார்த்ததும் ரோகிணி என்ன சத்யா மீண்டும் ஆள் வச்சு அடிக்க வந்திருக்கியா என்று திமிராக கேட்ட, அதற்கு சத்யா அப்படியெல்லாம் பண்ண நான் வரல. அது உங்களோட வேலை. நான் என் மாமா சொல்லி தான் வந்தேன். கிரிஷ்க்கு உடல்நிலை சரியில்லை என்று பாத்துட்டு வர சொன்னாரு என்று சொல்ல, ஏன் அவங்க நேரில் வர மாட்டாங்களோ என்று ரோகிணி திமிராகவே கேட்கிறார்.
வீடியோ காலில் முத்து மீனா
ஆனால் ரோகினி பேசுவதை கண்டுகொள்ளாத சத்யா நேராக கிரிஷ் ரூமுக்கு சென்று முத்து மீனாவுக்கு வீடியோ கால் செய்து பேச வைக்கிறார். அப்போது கிரிஷ், என்னை நீங்க உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போக மாட்டீங்களா? எப்போ நேர்ல வருவீங்க என்று கேட்க முத்து மீனாவும் நாங்க ஒரு ஊருக்கு கிளம்பி இருக்கிறோம் ஊருக்கு போயிட்டு வந்து அங்கு வாரோம் ஆனா நீ உங்க அம்மா பேச்சை கேட்டு நடந்துக்கணும், இனி எல்லாமே அவங்க தான், நல்லா படிக்கணும் என்று அட்வைஸ் சொல்லிவிட்டு போனை வைக்கின்றனர்.
சத்யாக்கு தெரியும் ரகசியம்
பிறகு சத்யா அங்கிருந்து வரும்போது சிந்தாமணி அங்கே ஒரு ரூமுக்குள் ஒளிந்திருப்பதை பார்க்கிறார். மறுபக்கத்தில் மனோஜ் தனக்கு ரூம் இல்லாததால் ஹாலில் கட்டில் போட்டு படுத்து கொண்டு இருக்கிறார். அப்போது மீனா ரூமுக்குள் போக அங்கே முத்து தடபுடலாக ஏற்பாடுகள் செய்து வைத்திருக்கிறார். பிறகு இருவரும் சந்தோஷத்தில் ரொமான்ஸ் செய்து தங்களுடைய வாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர். ஆனால் வெளியில் தூங்குவதற்கு மனோஜ் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்.
விஜயா ஆதங்கம்
அப்போது மனோஜின் கனவில் ரோகிணி வந்து வழக்கம் போல தொந்தரவு பண்ண, அதனால் மனோஜ் கத்திக் கொண்டிருக்கிறார். அப்போது விஜயா வந்து என்னாச்சு என்று கேட்க, கனவில் ரோகினி வந்த விஷயத்தை மனோஜ் சொன்னதும் கனவுல கூட அவ வரக்கூடாது என்று திட்டிக் கொண்டிருக்கிறார்.
மறுபக்கத்தில் நீத்தூவிற்கு பணம் கொடுக்க போனது பற்றி ஸ்ருதி ரவியிடம் பேசாமல் இன்னொருவரிடம் ஜாடையாக பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் நீத்து பணத்தை வேண்டாம் என்று சொல்லி தன்னுடைய அப்பாவை திருப்பி அனுப்பியது, மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொன்னது என எல்லா விஷயத்தையும் ஜாடையாக பேசிக் கொண்டிருக்க.. பொறுமைய இழந்த ரவி ஸ்ருதியுடன் சண்டை போடுகிறார்.

போனில் கண்ட வீடியோ
பிறகு அடுத்த நாள் காலையில் விஜயா மனோஜின் போனை பார்த்துக் கொண்டிருக்கும்போது அப்போது ஒரு வீடியோவை பார்க்கிறார். அதில் ரோகிணியும் மனோஜும் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கின்றனர். அது ஏ ஐஆல் உருவாக்கப்பட்ட வீடியோ என்று விஜயாவிற்கு தெரியாததால் அவர் நீ எப்போ அவ கூட சேர்ந்து இப்படி எல்லாம் ஆட்டம் போட்டு இருக்க? அதுவும் இது என்ன டிரஸ் என்று திட்டிக் கொண்டிருக்கிறார்.
அதற்க்கு மனோஜ் இது ஏ ஐ வீடியோ என்று சொன்னாலும் விஜயா அதை நம்பவில்லை. நான் உனக்கு டைவர்ஸ் வாங்க காத்திருக்கிறேன் ஆனால் நீ ரோகிணி கூட சேர்ந்து ஆட்டம் போடுறியா என்று அடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது முத்துவும் மீனாவும் வர அவர்களிடமும் இந்த வீடியோவை காட்ட அவர்களும் ஆமா இதில் இருப்பது நீங்க தானே என்று சொல்கின்றனர். ஆனால் மனோஜ் அது என் முகம் தான் ஆனால் நான் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
அந்த நடிகர் என் நகையை ஏமாற்றி விட்டார்... பிக் பாஸ் தாமரை செல்வி கண்ணீர் வீடியோ! சீரியல் பழக்கம் சீரியஸானது! -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்: ஒன்று சேர்ந்த மருமகள்கள்.. கோமதி குடும்பத்தில் பெரிய குழப்பம்! பாவம் பாண்டியன் -
Pandian Stores 2 promo: பாண்டியன் வீட்டிற்குள் நடந்த விபரீதம்.. மயில் எடுத்த முடிவு! சரவணனுக்கு 2வது கல்யாணம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications