Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: கிரிஷ் அம்மா ரோகிணி தான், முத்துவிடம் உண்மையை சொன்ன மீனா! சிந்தாமணி போடும் பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 நவம்பர் 21ஆம் தேதிக்கான எபிசோடில் யாரும் எதிர்பார்க்காத பல அதிரடியான திருப்பங்கள் நடந்தது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அதாவது சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி நிஜப் பெயர் கல்யாணி என்றும் கிரிஷின் அம்மா தான் ரோகிணி, அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது என்று உண்மை எல்லாம் மீனாவிற்கு தெரிய வந்ததும் மீனா அதிர்ச்சியில் இருக்கிறார். இந்த உண்மையை வீட்டில் சொன்னால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று ரோகிணி மிரட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் மீனாவின் நடவடிக்கையை குடும்பத்தினர் எல்லோருமே சந்தேகப்படுகின்றனர்.

Siragadikka aasai serial vijay tv

மீனாவுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று எல்லோரும் குழப்பத்தில் இருக்கும்போது ஊருக்கு போயிட்டு வந்ததிலிருந்து தான் மீனாவின் நடவடிக்கை சரியில்ல அங்கதான் ஏதோ நடந்திருக்கு என்று முத்து கண்டுபிடிக்கிறார். இதனால் முத்து மீனா பயந்து இருப்பார் அவருக்கு ஒரு சாமியாரிடம் சென்று மந்திரித்து கயிறு கட்ட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். மேலே சொன்ன விஷயங்கள் நேற்றைய எபிசோடில் நடந்தாலும் இன்றைய எபிசோடில் யாரும் எதிர்பார்க்காத சில சம்பவங்களும் நடந்தது.

அதாவது எபிசோடின் ஆரம்பத்தில் மீனாவை சாமியாரிடம் கூட்டிட்டு போகணும் என்று முத்து சொல்ல அதற்கு ஸ்ருதி வேண்டாம் என்று சொல்கிறார். மீனாவிற்கு கவுன்சிலிங் கொடுக்கணும் அவங்களை மனோ தத்துவ நிபுணரிடம் கூட்டிட்டு போனா அவங்க செக் பண்ணி பார்த்து மீனாவின் மனதிற்குள் என்ன இருக்கு? அவங்க எதை மறைக்கிறாங்க எதற்காக பயப்படுறாங்க என்ற உண்மையை கண்டுபிடிச்சிடுவாங்க என்று சொல்ல ரோகிணியும் அதிர்ச்சியில் இருக்கிறார்.

ஆனால் உண்மை எல்லாம் வெளியே வந்து விடும் என்று பயந்து மீனா நான் டாக்டரிடம் வரல சாமியாரிடம் போவோம் என்று சொல்கிறார். இதனால் முத்து ஒரு பெண் சாமியாரிடம் கூட்டிக்கொண்டு போகிறார். அவர் கையை பிடித்து பார்த்ததும் நீ ஏதோ ஒரு விஷயத்தை மனசுக்குள்ள போட்டு மறச்சு வச்சிட்டு இருக்க. அதனாலதான் பயந்துட்டு இருக்கிற அதை குடும்பத்தினரிடம் சொல்லிடு என்று சொல்ல மீனா பயப்படுகிறார். இதனால் சாமியார் முத்துவிடம் உண்மையை சொல்லாமல் கையில் கயிறு மட்டும் கட்டி அனுப்பி இருக்கிறார்.

மீனா வெளியே வரும் பொது சிந்தாமணியும் அந்த இடத்திற்கு வருகிறார். சிந்தாமணி வழக்கம் போல மீனாவை வம்பு இழுத்தபடி பேச அதற்கு முத்து பதிலடி கொடுத்துவிட்டு மீனாவை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வருகிறார். பிறகு சிந்தாமணி சாமியாரிடம் சென்று தன்னுடைய மகளுக்கு எப்ப கல்யாணம் நடக்கும் என்று விசாரிக்கிறார்.

அதற்கு சாமியார் உன் மகளுக்கு சீக்கிரமே கல்யாணம் நடக்கும் ஆனால் நீ எதிர்பார்க்காத விதத்தில் நடக்கும், உனக்கு விருப்பம் இல்லாத கல்யாணம்தான் நடக்கும். அந்த கல்யாணத்தின் போது நீங்களோ அல்லது உங்களுடைய புருஷனோ ஜெயிலுக்கு போவீங்க என்று சொன்னதும் சிந்தாமணி இனி நம்ம பொண்ணை யாருடனும் பழக விடக்கூடாது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

மறுபக்கத்தில் வீட்டிற்கு வந்த மீனா நடந்த விஷயங்களை எல்லாம் நினைத்து பார்த்துக் கொண்டு இருக்கிறார். பிறகு நான் ஒரு உண்மையை மறைச்சுட்டேன் என்று ரோகிணியின் நிஜப்பெயர் கல்யாணி என்பதையும், ரோகிணி தான் கிரிஷ் அம்மா என்பதையும் முத்துவிடம் மீனா சொல்ல முத்து அதிர்ச்சியில் இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. உண்மையில் மீனா முத்துவிடம் உண்மையை சொல்லிவிட்டாரா? அல்லது இதுவும் கனவு தானா? என்பது நாளைய எபிசோடில் தெரியவரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+