சிறகடிக்க ஆசை: உண்மை தெரிந்து ரோகிணியை கொலை செய்த முத்து! நெஞ்சுவலியில் அண்ணாமலை! மீனா எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 நவம்பர் 22ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி பற்றிய உண்மையை முத்துவிடம் சொல்கிறார். இதனால் முத்து அண்ணாமலையிடம் சொல்ல அண்ணாமலை நெஞ்சை பிடித்துக் கொண்டு விழுந்து விடுகிறார். இதனால் கோபமான முத்து ரோகிணியை அடித்து வெளியே தள்ள அவர் இறந்து போவது போல காட்டப்படுகிறது. ஆனால் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் அனைவரும் எதிர்பார்த்து இருந்த உண்மை மீனாவுக்கு தெரிய வந்திருக்கிறது. அதாவது ரோகிணியின் நிஜ பெயர் கல்யாணி, அவர்தான் கிரிஷின் அம்மா என்பது தெரிந்ததும் எப்படியும் ரோகிணி பற்றி மீனா வீட்டில் சொல்ல மாட்டார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே ரோகிணிக்காக இப்போது மீனாவும் உண்மையை மறைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் உண்மையை மறைப்பதால் குற்ற உணர்ச்சியில் இருக்கும் மீனா முத்துவிடம் உண்மையை சொல்வது போல நேற்றைய எபிசோடில் காட்சிகள் இருந்தது.

அதைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் ரோகிணியின் நிஜ பெயர் கல்யாணி என்பதையும் அவர்தான் கிரிஷின் அம்மா என்பதையும் சொன்னதும் முத்து கோபமாகி கத்துகிறார் அந்த நேரத்தில் அண்ணாமலை வந்து என்னாச்சு என்று கேட்க அண்ணாமலையிடம் இந்த பார்லர் அம்மா இவ்வளவு நாளா ஏமாத்திட்டு இருக்கு, இந்த பார்லர் அம்மா தான் கிரிஷின் அம்மா என்று சொன்னதும் அண்ணாமலை நெஞ்சு வலியில் விழுந்து விடுகிறார்.
அண்ணாமலை வலியில் துடிப்பதை பார்த்து முத்து பதறி போகிறார். அப்போது ரோகிணி வந்து என்ன ஆச்சு என்று கேட்க, உன்னால்தான் இவ்வளவு பிரச்சனை என்று அவரை அடித்து வெளியே துரத்துகிறார். அப்போது படியில் உருண்டு வந்ததில் தலையில் அடிபட்டு அவர் இறந்து போவது போல இருக்கிறது. உடனே போலீஸ் வந்து முத்துவை கைது செய்து கூட்டி கொண்டு போகின்றனர். இதை எல்லாம் நினைத்து பார்க்கும் மீனா இந்த விஷயத்தை நாம சொன்னா என்ன நடக்கும்னு நினைச்சு பார்த்தாலே பயமா இருக்கு இதை எப்படி மறைக்க போறேன்னு தெரியல என்று புலம்பி கொண்டிருக்கிறார்.
அப்போது ரோகிணி வந்து என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க என்று கேட்க, தப்பு பண்ணுன நீ சந்தோஷமா இருக்க, ஆனா உண்மை தெரிஞ்ச என்னால இங்க இருக்க முடியல. என்கிட்ட பாசமா இருக்கிற என்னோட மாமாவிடமும், என் புருஷன் கிட்டயும் பொய் சொல்ல முடியாமல் நான் தவிக்கிறேன். இந்த வீட்டில் இருந்தால் கண்டிப்பாக நான் உண்மையை சொல்லிடுவேன் அதனால நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன் என்று சொல்ல ரோகிணியும் ரொம்ப நன்றி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
பிறகு எப்படி இங்கிருந்து கிளம்பி போவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் முருகன் குடித்துவிட்டு புலம்பி கொண்டிருக்கிறார். ஹனிமூனுக்கு எங்க போகுறது என்று தெரியாமல் வித்யாவுடன் சண்டை ஏற்பட்டதாக முருகன் சொல்லிக் கொண்டிருக்கும் போது அவர் குடித்துவிட்டு வைத்திருந்த சரக்கை எடுத்து முத்து குடித்து விடுகிறார். பிறகு வீட்டிற்கு வந்ததும் முத்து சாப்பிடும்போது குடித்திருப்பதை பார்த்து மீனா சண்டை இழுக்கிறார். இதனால் முத்து கோபமாக சாப்பிடாமல் வீட்டை விட்டு கிளம்பி போய் தன்னுடைய நண்பர்களுடன் குடித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications