சிறகடிக்க ஆசை: மீனா கொடுத்த ஐடியா! மனோஜ்க்கு விழுந்த அடி.. அசிங்கப்பட்ட ரோகிணி! ஏமாந்த விஜயா
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடு முழுவதும், ஒரு பக்கம் பிசினஸ் ஐடியாக்கள், இன்னொரு பக்கம் சண்டைகள், பொய்கள்னு சுவாரசியமா போச்சுங்க! வாங்க, என்னென்ன நடந்துச்சுன்னு பார்க்கலாம்.

மீனாவின் சூப்பும், ஸ்ருதியின் ஐடியாவும்
எபிசோடின் ஆரம்பத்துல, மீனா கிச்சனில் சூடு பறக்க சூப் போட்டுக்கிட்டு இருந்தாங்க. அப்போ, ஸ்ருதி உள்ளே வர்றாங்க. மீனாதான் அன்பா சூப் போட்டுக் கொடுத்து, "குடிங்க ஸ்ருதி, சூப்பரா இருக்கும்"னு சொல்ல, ஸ்ருதியும் குடிச்சுப் பார்த்துட்டு, "அடடே! சூப்பரா இருக்கு மீனா! நானே ஏதாவது ஹாட்டா சாப்பிடலாம்னுதான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்"னு சொல்றாங்க.
மீனா, "என்ன கொஞ்ச நாளா ஒரே டென்ஷனா இருக்கீங்க?"னு கேட்க, ஸ்ருதி தன்னோட ஹோட்டலுக்குச் சரியான செஃப் கிடைக்காம இருக்கிறதுதான் டென்ஷன் காரணம்னு சொல்றாங்க. அப்போதான் ஸ்ருதிக்கு ஒரு ஐடியா வருது. "நீங்க ஏன் என்னோட ஹோட்டலுக்கு பார்ட்னரா வரக்கூடாது மீனா?"னு கேட்கிறாங்க.
ஆனா பாருங்க, வெளியில ரவி இந்தக் பேச்சையெல்லாம் ஒட்டுக்கேட்டுக்கிட்டு இருக்கார். உடனே மீனா, "ஐயோ! அப்படியெல்லாம் பண்ண முடியாது ஸ்ருதி. அப்படி பண்ணா ரவி என்ன நினைப்பாரு? அதுவும் இல்லாம, எனக்கு வீட்லதான் சமைக்கத் தெரியும், ஹோட்டல்ல அவ்வளவு பேருக்கெல்லாம் சமைக்கத் தெரியாது"னு மறுத்துடுறாங்க. அதுமட்டுமில்லாம, "நீங்க வேணா ரவியைச் சமாதானப்படுத்திப் பேசிப் பாருங்க, கிடைக்கிற டைம்ல வந்து ஹெல்ப் பண்ற மாதிரியோ, இல்லை ஒர்க் பண்ற மாதிரியோ கூடப் பேசிப் பாருங்க"னு ஒரு நல்ல ஐடியா கொடுக்கிறாங்க. "இதுவும் நல்ல ஐடியாதான் மீனா, நான் பேசிப் பார்க்கிறேன்"னு சொல்லிட்டு, ஸ்ருதி கிளம்பிடுறாங்க.
உடனே ரவி கிச்சனுக்குள்ள வர்றாரு. "ரொம்ப தேங்க்ஸ் அண்ணி"ன்னு சொல்ல, மீனா சூப்பை எடுத்துக் கொடுத்து, "எடுத்துக்கோங்க ரவி"னு கொடுக்கிறாங்க.
பிறகு மீனா சூப்பை எல்லோருக்கும் ஊத்தி எடுத்து வந்து கொடுக்கிறாங்க. அப்போது முத்து வேகமாக வந்து, "சூப்பரா வாசனை தூக்குது மீனா!"ன்னு சொல்லிக் குடிக்கிறார். அண்ணாமலைக்கும், விஜயாவுக்கும் மீனா கொடுக்கிறாங்க. ஆனா, ரோகிணி வரும்போது, "இவளுக்குக் கொடுக்க வேண்டாம்"னு சொல்லிட்டாங்க.
"இந்த சூப் போடுறதை வெச்சு, ஈவினிங் மட்டும் சூப்புக் கடைதான்பா போடலாம். அதுல வர்ற காசை வெச்சு, நீங்க சொல்ற யோகா கிளாஸை வாங்கிடலாம்"னு முத்து கிண்டலாகப் பேச, விஜயா உடனே, " அதெல்லாம் முடியாது"னு கோபமாகச் சத்தம் போடுறாங்க. அம்மாவுக்கு டாக்டர் பட்டம் கிடைக்கலைன்னு கோவம்னு தெரிஞ்சுக்கிட்ட முத்து, "பேசாம நீட் எக்ஸாம் எழுதச் சொல்லுங்க"னு மறுபடியும் கிண்டல் பண்றார்.
விஜயா உடனே, "இந்த வீட்டில டாக்டர் பட்டம் வாங்குறதுக்கு ஒரே தகுதி மனோஜுக்கு மட்டும்தான் இருக்கு"னு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே, மனோஜ் நடக்க முடியாமல் வீட்டுக்குள்ள வர்றார். உடனே விஜயாவும், ரோகிணியும் பதறிப்போய், அவரை உட்கார வெச்சு தண்ணி கொடுக்கிறாங்க.
ரோகிணியின் கோபம்
"என்னாச்சு?"னு எல்லாரும் கேட்க, அடி வாங்குன உண்மையைச் சொன்னால், "இவங்க தொடப்பக்கட்டையில் அடிப்பாங்க"னு நினைச்சுக்கிட்டு, மனோஜ் அப்படியே மாத்திப் பேசுறார். "டீலரைப் பார்க்கப் போற இடத்துல, ஒருத்தன் பொண்ணுகிட்ட தப்பா நடந்துகிட்டான். அவன்கிட்ட சண்டை போட்டுட்டு வந்தேன்"னு சொல்றான்.
ஆனா இதை அங்க யாருமே நம்பல. முத்து அண்ணாமலை கிட்ட கேட்க, அவரும் "நம்பற மாதிரி இல்லை"னு தலையாட்டுறார். மீனா, ஸ்ருதி, ரவினு யாருமே மனோஜ் சொன்னதை நம்பாமல் இருக்காங்க. உடனே விஜயா, "என் புள்ளையை நான் நம்பறேன். மனோஜ் அடிச்சுதான் இருப்பான்"னு பாசத்தைக் கொட்டுறாங்க. மனோஜ் "நீங்க நம்புனா நம்புங்க. நான் போறேன். இதுதான் உண்மை"னு சொல்லிட்டு, ரூமுக்குள் போயிடுறான்.
பிறகு ரூமுக்குள் ரோகிணி ஒத்தடம் கொடுத்துக்கிட்டே, "அது உண்மை இல்லைனு எனக்குத் தெரியும். நடந்த விஷயத்தைச் சொல்லுங்க"னு அழுத்திக் கேட்கிறாங்க. வேறு வழியில்லாமல், சந்தோஷ் கொடுத்த ஐடியாவையும் (ராணி வீட்டுப் பிரச்சனை), அதனால் மாட்டிக்கொண்ட பிரச்சனையும், சந்தோஷ் விட்டுட்டு ஓடினதையும் மனோஜ் தயங்கிக்கொண்டே சொல்றான். இதைக் கேட்ட ரோகிணி கோபப்பட்டு திட்டுகிறாள். "எதுக்காக நீ இது மாதிரி பண்ணிக்கிட்டு இருக்க?"னு கேட்கிறாள். இனிமே அவன் கிட்ட பேசுற வேலையை வெச்சுக்காதேனு கடுமையா வார்னிங் கொடுக்கிறாள். கடைசியில என்னாச்சுன்னா, விஜயாவின் டான்ஸ் கிளாஸில் பார்வதியின் பிறந்தநாள் கொண்டாடப்படுது. இப்படியாக இன்றைய எபிசோடு சுவாரசியமாக முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications