சிறகடிக்க ஆசை: ரோகிணியின் சதி அம்பலமானது! தெருவில் கதறி அழுத மீனா அம்மா! முத்துக்கு எதிராக அருண் போட்ட பிளான்
சென்னை: விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் 'சிறகடிக்க ஆசை'. இந்த சீரியலில் இன்று ரோகினியின் சூழ்ச்சி அம்பலமாகிறது. மீனாவின் அம்மா குடும்பத்தின் வாழ்வாதாரமான பூக்கடை மற்றும் கரும்பு ஜூஸ் கடை ஆகியவை, ரோகினியின் திட்டத்தால் காலி செய்யப்பட்டு, மீனா குடும்பம் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

ரோகினி-சிந்தாமணி கூட்டு சதி
மீனாவை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் ரோகினி, இன்று நேரடியாக சிந்தாமணியைச் சந்திக்கிறார். சிந்தாமணிக்கு ஒரு பெரிய வியாபார ஆர்டர் கொடுப்பதாகவும், அதற்குப் பதிலாக ஒரு உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்கிறார். அந்த உதவி என்ன தெரியுமா? மீனாவின் அம்மா வைத்திருக்கும் பூக்கடையை காலி செய்வதுதான்!
இந்தக் கோரிக்கையைக் கேட்ட சிந்தாமணி முதலில் அதிர்ச்சியாகிறார். "மீனா தொழில் ரீதியாக எனக்கு எதிரி. ஆனால், உனக்கு என்ன பிரச்சனை?" என்று கேட்கிறார். அதற்கு ரோகினி, "அந்த மீனா என்னை ஏதாவது ஒரு பிரச்சினையில் இழுத்துவிட்டுட்டே இருக்கா. அவ பிரச்சினையில் இருந்தா மட்டும்தான் என் பக்கம் தலையிடாமல் இருப்பா என்று சொன்னதும், சிந்தாமணி அவ சின்னப் பொண்ணு இல்ல. எறும்பு மாதிரி என் காதுக்குள்ள பூந்துகிட்டு என்னை ஆட்டி வெச்சிட்டு இருக்கா. கொஞ்சம் புத்திசாலித்தனமா இருப்பா, அவளைப் பார்த்துக்கலாம்" என்று சொல்லி, தன்னுடைய சுயநலத்துக்காக மீனாவின் குடும்பத்தைக் குறிவைக்கிறார். கடைசியில், ரோகினியின் சதிக்குச் சம்மதித்த சிந்தாமணி, தனது ஆட்களுக்குப் போன் செய்து, உடனே மீனாவின் அம்மா கடையை எடுக்குமாறு உத்தரவிடுகிறார்.
நடுத் தெருவில் அழும் சந்திரா
கோயில் வாசலில் சீதா பூ கட்டிக் கொண்டிருக்க, மகன் சத்யா வந்து "நீ வேலை பார்க்க வேண்டாம்னு சொன்னேன் இல்லம்மா?" என்று பாசமாகக் கேட்கிறார். "இத்தனை வருஷமா பழகிட்டு என்னால அப்படி இருக்க முடியாதுடா" என்று சீதா பேசிக் கொண்டிருக்கும்போது, முத்துவும், மீனாவும் ஆகியோர் வருகின்றனர். பூக்கடைக்கு பக்கத்தில் தன்னுடைய பொக்கே பற்றி ஒரு போர்டு வைப்பது குறித்து மீனா, அம்மாவிடம் சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பிறகு, அனைவரும் உள்ளே சென்று சாமி கும்பிடத் தயாராகிறார்கள்.
அந்த நேரம் பார்த்து, சிந்தாமணியின் ஆட்கள் கார்ப்பரேஷன் அதிகாரிகள் போல வந்து, திடீரென பூக்கடையை எடுக்கத் தொடங்குகிறார்கள். இதைப் பார்த்து மீனாவின் அம்மா பதறி அழுகிறார். முத்து, மீனா குடும்பத்தினர் அனைவரும் வந்து, "ஏன் கடையை எடுக்குறீங்க?" என்று கோபமாகக் கேட்கிறார்கள். வந்த ஆட்களோ, "கோயில் நிர்வாகம் தான் கம்ப்ளைன்ட் கொடுத்தாங்க. நீங்க தரமற்ற பொருளைக் கொடுக்கிறதாச் சொல்லி இருக்காங்க" என்று பொய்ச் சொல்கிறார்கள்.
மீனாவின் அம்மா மற்றும் குடும்பத்தினர் எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்காமல், முதலில் பூக்கடையை வலுக்கட்டாயமாகக் காலி செய்து எடுத்துச் செல்கின்றனர். அதைத் தொடர்ந்து, சந்திராவின் கரும்பு ஜூஸ் கடையையும் எடுக்க வேண்டும் என்று அவர்கள் சொல்ல, சந்திரா ஓடிப்போய் கடையைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, "இது என்னோட புருஷனோட உசுரு. எடுத்துட்டுப் போகாதீங்க!" என்று கதறி அழுகிறார். முத்து, அவர்களைத் தடுத்து வாக்குவாதம் செய்கிறார். "நாங்க அன்றாடம் கூலிக்கு வேலை செஞ்சுகிட்டு இருக்கோம். இப்படி வந்து பண்ணிக்கிட்டு இருக்கீங்க" என்று கோபப்படுகிறார். ஆனால், அதிகாரிகள் அவர்கள் பேச்சைக் கேட்காமல், இரண்டு கடைகளையும் காலி செய்து எடுத்துச் செல்கின்றனர். இதனால் சந்திரா உட்பட அனைவரும் மனம் உடைந்து அழுகிறார்கள்.
அருணின் சுயநலம்
கடை காலி செய்யப்பட்ட விஷயத்தை சீதா, அருணிடம் சென்று சொல்கிறார். "இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. நான் பார்த்துக் கொள்கிறேன். நம்ம சீக்கிரமே கடையைத் திருப்பி மீட்டிடலாம்" என்று அருண், சீதாவுக்கு ஆறுதல் சொல்கிறார். ஆனால், அதே சமயம் மனதுக்குள், "அவனும் (முத்துவும்) சம்பந்தப்பட்டிருக்கானா? அவனுக்கு முன்னாடி நான் கண்டுபிடிச்சு, எனக்குத்தான் அந்தப் பெயர் கிடைக்கணும்" என்று சுயநலமாக நினைக்கிறார்.
வீட்டிற்கு வந்த முத்து குடும்பத்தினரிடம் நடந்த விஷயத்தைச் சொல்ல, அண்ணாமலை அதிர்ச்சியடைகிறார். "இதை யாரோ பிளான் பண்ணிப் பண்ணியிருக்காங்க" என்று முத்து சந்தேகம் கொள்கிறார். அப்போது, விஜயா, மனோஜ் இருவரும், "பிளாட்ஃபார்ம்ல கடை போட்டால் இப்படித்தான் இருக்கும். சரியா வரி கட்டணும், ரூல்ஸ் இருக்கு" என்று அறிவாளியாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு நக்கலாகப் பேசுகிறார்கள்.
உடனே விஜயா, மீனாவிடம் சென்று, "சாப்பாடு சமைச்சிட்டியா? எனக்கு இப்போ உடனே சிக்கன் பிரியாணி சாப்பிடணும் போல இருக்கு. நீ போய் சிக்கன் எடுத்துட்டு வந்து செஞ்சிடு" என்று கேட்கிறார். அண்ணாமலை கோபமாக, "என்ன பேசிக்கிட்டு இருக்க! அவங்களே கடை இல்லாம இடிஞ்சு போய் உட்கார்ந்துட்டு இருக்காங்க. அவங்ககிட்ட போய் சிக்கன் பிரியாணி சாப்பிடணும்னு சொல்லிக்கிட்டு இருக்கியே" என்று சத்தம் போடுகிறார். பிறகு, "எனக்கு என்னமோ உன் மேலதான் சந்தேகமா இருக்கு" என்று விஜயாவைச் சந்தேகப்பட, அவர் நான் எதுவும் செய்யவில்லை என்று மறுக்கிறார்.
முத்து, "பிரியாணி தான் வேணுமா, நானே வாங்கிட்டு வரேன்" என்று சொல்லியும், விஜயா அதை மறுத்து, "நான் பார்வதி வீட்டுக்குப் போறேன்" என்று சென்றுவிடுகிறார். அங்கு தான் ரொம்ப சந்தோஷமாக இருப்பதாக சொல்லி தான் வாங்கி கொண்டு வந்த பிரியாணியை சிந்தாமணி மற்றும் பார்வதிக்கு கொடுக்கிறார். எல்லோரும் என்ன விஷயம் என்று கேட்க மீனாவின் அம்மா கடை காலியான விஷயத்தை சொல்லி விஜயா சந்தோஷப்படுகிறார். அதைக் கேட்டு அது பார்வதி அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications