Siragadikka Aasai promo: ரோகிணிக்கு செக் வைத்த மீனா! முத்துக்கு தெரிய வந்த உண்மை! செல்வம் செய்த உதவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல், இப்போது ரோகிணி என்ற ஒரு வில்லிக்கும், மீனா-முத்து என்ற பாசமான ஜோடிக்கும் இடையேயான தொடர் போராட்டமாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு பிரச்சினை முடிந்தால் போதும் என்று ரசிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள், 'விடாத கருப்பு' போல ரோகிணி அடுத்த சிக்கலைத் தூக்கிக் கொடுத்துவிடுகிறார்.

Siragadikka aasai serial vijay tv

ரோகிணி போடும் புதுப் பிளான்

சீரியலில் இப்போது என்ன நடக்கிறது என்று பார்த்தால், ரோகிணி ஆரம்பித்து வைக்கும் ஒவ்வொரு பிரச்சினையும் கடைசியில் அவரிடமே திரும்பி வருகிறது. ஆனால், அதை சாமர்த்தியமாகச் சமாளித்து, அந்தப் பழியை வேறு யாராவது அப்பாவி மீது திருப்பி விடுவதில் அவர் கெட்டிக்காரர். கடைசியில், அந்தப் பிரச்சினைகளில் இருந்து மீண்டு வந்து, அந்த அப்பாவிகளைக் காப்பாற்றுவது யார் தெரியுமா? எப்போதும் போல, நம்ம மீனாவும் முத்துவும்தான்!

இதற்கு முன்னால், ரோகிணி தன் கணவர் மனோஜின் கடையில் இருந்து பணத்தைத் திருடினார். அந்தப் பழியை அங்கிருந்த ராஜா ராணி மீது தூக்கிப் போட்டுவிட்டார். மனோஜ் அவர்களை விசாரித்தபோது, ராஜாவும் ராணியும் மனோஜ் தங்களிடம் தவறாக நடந்ததாகவே ஒரு பெரிய குற்றச்சாட்டைக் கிளப்பிவிட்டனர். இந்தச் சிக்கலில் இருந்து மனோஜை எப்படியோ முத்துதான் காப்பாற்றிக் கொண்டு வந்தார். முத்து இல்லையென்றால், மனோஜின் கதை கோவிந்தாதான்!

ஆனால், இந்த முத்து-மீனா ஜோடி எப்போதுமே தங்கள் பிரச்சினைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்களா, நம்மை கவனிக்க மாட்டார்களா என்று யோசித்த ரோகிணி, இப்போது மீனாவின் பலவீனத்தைக் கண்டுபிடித்துவிட்டார். மீனா வித்யாவின் தோழியான கிருஷ்ணவேணியிடம் சொல்லி, கிருஷின் அம்மாவின் போன் நம்பர் கேட்கிறார். அதற்கு வித்யா ரோகிணியிடம், 'உன்னோட நம்பர் தான் கேக்குறாங்க, என்ன செய்யட்டும்?' என்று மிரட்டுகிறார்.இதனால் மீனா நிம்மதியாக இருப்பதால்தான் நம்முடைய பிரச்சனைகளில் தலையிடுகிறார். அவருக்கு பிரச்சனை கொடுக்க வேண்டும் என்று ரோகிணி பிளான் போடுகிறார்.

அடுத்தடுத்து வரும் சோதனை

ரோகிணியின் மூளையில் உதித்த அடுத்த ஐடியாதான் மிகவும் கொடுமையானது. மீனாவை முழுவதுமாக வீட்டில் இருந்து ஒதுங்க வைக்க,மீனாவின் அம்மாவின் பூக்கடைக்கும், அப்பாவின் கரும்பு கடைக்கும் பிரச்சினை கொடுத்தால், மீனாவே அதைப் பார்த்துவிட்டு அங்கேயே போய்விடுவார் என்று முடிவெடுத்தார். இந்த திட்டத்துக்கு, சிந்தாமணியுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டு, மீனாவின் அம்மா கடையையும், அப்பா கடையையும் இருந்த இடம் தெரியாமல் தூக்க வைத்துவிட்டனர்.

இந்த நிலையில் விஜயா எதேச்சையாக உளறிவிட்ட ஒரு வார்த்தையைப் பிடித்துக்கொண்டு, சிந்தாமணி பிளான் போட்டு மீனாவின் பைக்கையும் ஆள் வைத்து தூக்கி விடுகிறார். மீனாவின் குடும்பமே உழைப்பை நம்பி வாழும் நிலையில், அடுத்தடுத்து அவர்களின் ஆதாரங்களை அழிப்பது ரோகிணிக்கு வழக்கமான வேலையாகிவிட்டது.

இந்த எல்லாப் பிரச்சினைகளையும் தனியாகப் போராடி மீனா எப்படிச் சரிசெய்யப் போகிறார் என்பதுதான் அடுத்த வாரத்தின் பெரிய எதிர்பார்ப்பு.

முத்துவின் மாஸ்டர் பிளான்

ஆனால், ரோகிணி எத்தனை பிளான் போட்டாலும், கடைசியில் நம்ம முத்துவின் புத்திசாலித்தனம் முன்னால் அது எடுபடாது என்று சீரியல் மேக்கர்கள் முடிவெடுத்துவிட்டார்கள் போல! நாளைக்கான (அக்டோபர் 4) ப்ரோமோ வீடியோவில், ஒரு பெரிய திருப்பம் காத்திருக்கிறது.

மீனாவின் அம்மாவின் பூக்கடையை யார் சொல்லி காலி செய்தார்கள் என்ற உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்காக, முத்து, செல்வத்துடன் சேர்ந்து ஒரு நாடகம் போடுகிறார். "நாடகம் போடறதுல எங்க குடும்பத்தையே ஜெயிக்க முடியாது" என்று ரோகிணி மற்றும் சிந்தாமணியின் முகத்திரையைக் கிழிக்கும் வகையில் முத்து போடும் இந்த மாஸ்டர் பிளான், எப்போதும் போல வெற்றி பெற்று, கடைசியில் வில்லிகள் வசமாகச் சிக்கி முழிப்பார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

ரோகிணியின் ஒவ்வொரு சவாலும், முத்து-மீனா ஜோடியை இன்னும் நெருக்கமாக்குகிறதே தவிர, அவர்களைப் பிரிக்கவில்லை என்பதை அந்த ரோகிணி எப்போதுதான் புரிந்துகொள்வாரோ! உண்மையாகவே, ரோகிணிக்கு வேறு வேலை இல்லை போல! இந்தக் குடும்பத்தைப் பிரிப்பதிலேயே பாதி சீரியல் ஓடிவிடும் போல இருக்கிறதே, இல்லையா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+