Siragadikka Aasai: கதறி ஓடிய கிரிஷ்.. முத்து கேட்ட கேள்வி! அதிர்ச்சியில் ரோகிணி! சிறகடிக்க ஆசையில் அடுத்த அதிரடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மிகவும் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருப்பது 'சிறகடிக்க ஆசை'தான். நேற்றைய எபிசோடில் முத்து, மீனா வீட்டில் கிரிஷ் தங்கியிருந்தது, ரோகிணி அவனை மீட்கப் போட்ட திட்டம் எனப் பல திருப்பங்கள் இருந்தன. இன்றைய எபிசோடிலும் பல சம்பவங்கள் அரங்கேறின.

கிரிஷின் அப்பாவிக் கேள்வி
இன்றைய எபிசோடில், சந்திரா கிரிஷுக்கு ஆசையுடன் சாப்பாடு ஊட்டி விடுகிறார். "சாப்பாடு நல்லா இருக்கா?" என்று அவர் கேட்க, "மீனா ஆண்டி இப்படிப் பண்ணுவாங்கன்னு தெரியாது" என்று கிரிஷ் சொல்கிறான். அப்போது, சத்தியா "மீனா ஆண்டிக்கு நான்தான் இதெல்லாம் சொல்லிக் கொடுத்தேன்" என்கிறார்.
ஹாஸ்டல் சாப்பாடு சுத்தமாகப் பிடிக்காது என்று கிரிஷ் சொல்ல, சத்தியா "உங்க அம்மா துபாயில் இருந்து என்னென்ன வாங்கிட்டு வருவாங்க?" என்று கேட்கிறார். "கடலை மிட்டாய், சிப்ஸ் வாங்கிட்டு வருவாங்க" என்று கிரிஷ் சொல்கிறான். "துபாயிலிருந்து கடலை மிட்டாயா? அங்க பேரீச்சம்பழம்தானே?" என்று சத்யா கேட்க, "பேரீச்சம்பழம் என்றால் என்னன்னே எனக்குத் தெரியாது" என்று கிரிஷ் சொல்ல, சத்யா அவனுக்குப் பேரீச்சம்பழம் வாங்கித் தருவதாகச் சொல்கிறார்.
மறுபக்கம், ரோகிணி தன்னுடைய அறையில் கிரிஷை முத்து மீனாவின் வீட்டிலிருந்து எப்படி மீட்டு வருவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது, மனோஜ் எழுந்து, "ஏன் இப்படி நடந்து கொண்டிருக்கிறாய், தூங்கவில்லையா?" என்று கேட்க, "தூக்கம் வரவில்லை" என்று ரோகிணி கோபமாகப் பேசுகிறார். "எவ்வளவு பெரிய பிரச்சினை இருந்தாலும் உனக்கு என்ன? நீ தூங்கிட்டுதான் இருப்ப. எல்லாப் பிரச்சினையும் எனக்குத்தானே?" என்று கோபப்பட்டுப் படுத்து விடுகிறார்.
ரோகிணியின் அதிர்ச்சி
மறுநாள் காலையில், முத்துவும் மீனாவும் கிரிஷைக் கூட்டிச் சென்று பள்ளியில் விடுகிறார்கள். அப்போது கிரிஷ் பயப்பட, முத்து "எதற்கும் பயப்படாதே. நாங்கள் வந்து உன்னைக் கூட்டிட்டுப் போகிறோம். எங்களிடம் கொஞ்ச நாள் இரு" என்று சொல்ல, கிரிஷ் சந்தோஷப்படுகிறான்.
பிறகு, முத்துவும் மீனாவும் மேனேஜரிடம், "கொஞ்ச நாட்களுக்குக் கிரிஷ் எங்களுடன் இருக்கட்டும்" என்று கேட்க, "கார்டியனிடம் கேட்காமல் எங்களால் எதுவும் சொல்ல முடியாது, அவர்களிடமும் கேட்டுச் சொல்கிறோம்" என மேனேஜர் முடிவெடுக்கிறார்.
அவர்கள் சென்ற கையோடு, ரோகிணியும் மகேஸ்வரியும் காரில் வந்து, மகேஸ்வரி மேனேஜரைச் சந்தித்து, கிரிஷ்ஷை முத்து-மீனா கொஞ்ச நாள் வைத்துக்கொள்வதாகச் சொல்கிறார். அதைக் கேட்ட மகேஸ்வரி, "என்னால் முடிவெடுக்க முடியாது, நான் அவளிடம் வீடியோ கால் பேசிவிட்டுச் சொல்கிறேன்" என்று சொல்லி, கிரிஷ்ஷை அழைத்து வருகிறார்.
கார் அருகில் ஓடி வந்த கிரிஷ், "அம்மா" என்று வேகமாகச் செல்ல, ரோகிணி, "உன்னால் கொஞ்ச நேரம் கூட நிம்மதியா இருக்க முடியலையா? உன்னால் சும்மாவே இருக்க முடியாதா? நீ முத்து, மீனா வீட்டுக்குப் போகக் கூடாது, இந்த ஆன்ட்டியுடன் தான் இருக்க வேண்டும்" என்று சொல்கிறார். அதைக் கேட்ட கிரிஷ், "என்னால் இவங்களுடன் இருக்க முடியாது. நான் எங்கேயாவது போய் விடுவேன்" எனச் சொல்ல, ரோகிணி அதிர்ச்சி அடைந்து "என்னையே மிரட்டுகிறாயா?" என்று கேட்கிறார். "நீங்கதான் இருந்தாலும், கிருஷ்... என்று சொன்னீங்க. அதனால என்னால் முடியாது. நான் முத்து, மீனா ஆன்டியுடன் தான் போவேன்" என்று காரின் முன்பக்கக் கதவைத் திறந்து ஓடிவிடுகிறான். அதைப் பார்த்து ரோகிணி அதிர்ச்சி அடைந்து, "இதுக்கு என்ன பண்றதுன்னே தெரியல, யோசிக்கிறேன்" என முடிவெடுக்கிறார்.
ஸ்ருதியின் அதிர்ச்சி
மறுபக்கம், ஸ்ருதி ஹோட்டல் திறப்பு விழாவுக்கு, அவர் டப்பிங் பேசும் நடிகையை சீஃப் கெஸ்டாகக் கூப்பிடச் செல்கிறார். "நீங்கள் எவ்வளவு தொகையை எதிர்பார்ப்பீர்கள்?" என்று ஸ்ருதி கேட்க, "மற்றவர்களுக்கு நான் ₹30 லட்சம் வாங்குவேன், உங்களுக்காக ₹5 லட்சம் குறைக்கிறேன்" என்று சொல்ல, ₹25 லட்சம் என்று கேட்டு அதிர்ச்சி அடைந்து, "என்னால் முடியாது" என்று சொல்லிவிட்டு சுருதி கிளம்பி வந்துவிடுகிறார்.
மறுபக்கம், பள்ளியில் நடந்த விஷயங்களை மீனா சத்தியாவிடம் சொல்ல, "அவன் கொஞ்ச நாள் நம் வீட்டிலேயே இருக்கட்டும், நான் கூடப் பள்ளிக்குக் கூட்டிட்டுப் போய்விட்டு வருகிறேன்" என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது, சீதா வருகிறார். பிறகு சீதாவிடமும் நடந்த சம்பவங்களை மீனா சொல்லுகிறார்.
இறுதியில், சீதா, "கிரிஷுக்கு உடனடியாகக் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். நான் டாக்டரிடம் அப்பாயின்மென்ட் எடுக்கிறேன். அவனை அழைத்து வா" என்று சொல்கிறார். இந்த முடிவு அடுத்தடுத்த எபிசோடுகளில் என்னென்ன திருப்பங்களை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications